கேள்விகளும் பதில்களும் COD 12 Questions And Answers 61-0112 1.... இன்னும் பலவற்றை நான் பெறவேண்டியதாயுள்ளது, ஆனால் நான்.... என் ஒத்தவாக்கியப் புத்தகத்தை (Concordance) கொண்டு வந்திருக்கிறேன். அதை நான் லியோவிடம் கொடுத்து விடுவேன், அல்லது அருகில் உட்கார்ந்து கொண்டு எனக்குதவி செய்ய மனம் உள்ள யாரிடமாவது , அதை நாம் உபயோகிக்க தருணம் உண்டாயிருக்குமானால். அங்குள்ள இந்த பெண்மணி, அங்கு... அவளுக்கு... “எங்கே... அவளுடைய கணவன் யார்? ஆம். உங்கள் மனைவி அங்கிருந்து வந்து உங்களுடன் உட்கார்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால், அவ்விதமே செய்யலாம். சகோதரரின் மத்தியில் கூறப்படுபவைகள் ஒரு சகோதரிக்கும் கூறத் தகுந்தவையே. நாங்கள்... உங்களுக்குத் தெரியும். அது... அது சரியா? அவளை உங்கள் அருகில் அமர்த்திக் கொள்வதற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். டாக், அவளுக்கு அங்கே வெப்பமாக உள்ளதா? நல்லது. அது சரி, அவளுக்கு சிறிது தனிமையாக இருக்கும். இங்கு ஒன்றுமே இல்லை. சில நேரங்களில் நான் 'மனிதர்' என்று குறிப்பிடும் காரணம், மனிதரிடையே மனிதர்கேட்கும் சில கேள்விகளுக்கு ஸ்திரீகளின் முன்னிலையில் பதில் கூற முடியாமலிருக்கக் கூடும். ஆனால் உள்ளூர் சபைகளில் வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளில் அப்படி ஒன்றும் இராது. ஏனெனில் அவை பெரும்பாலும் 'ஊழியக்காரர்களைக் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊழியத்தைக் குறித்தும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்ததுமாயிருக்கும். 2இப்பொழுது, இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்... எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சகோ. கோட் (Brother Gad), அது எங்கே , அது இப்பொழுது ஒலிநாடாவில் பதிவாகிக் கொண்டிருக்கிறதா? சரி. சகோதரரே, இதை நாங்கள் செய்யக் காரணம், முக்கியமான பாகம் என்ன ... மனிதரின் சிந்தையில் என்ன உள்ளது என்றும், நமது காரியங்கள் என்னவென்றும் அறிந்து கொள்வதற்கே. நாம் - நாம் எல்லோரும் ஒரே காரியத்தைப் பேச வேண்டும். உதாரணமாக, யாரோ ஒருவர் இங்குள்ள சகோதரனின் சபைக்குச் சென்றார் என்று வைத்துக் கொள்வோம் (உங்கள் முதல் பெயர் என்ன , சகோதரனே? வில்லர்ட். சகோதரன் ... இங்கு வில்லர்ட் என்னும் பெயர் கொண்ட இருவர் உள்ளனர். உங்களை வேறொரு பெயரால் நான் அழைக்க வேண்டும். நான்... உங்கள் கடைசி பெயர் என்ன , க்ரேஸ்). சகோ. க்ரேஸ் அவர்களின் சபைக்கு சகோ. க்ரேஸ் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுகிறார், அதன் பிறகு அவர் செல்லர்ஸ்பர்கிலுள்ள சகோ. ரட்டல் சபைக்குச் செல்கிறார். சகோ. ரட்டல் வித்தியாசமான ஒன்றைச் சொல்லுகிறார். அதன் பிறகு அவர் சகோ. ஜூனி சபைக்குச் சென்று முற்றிலும் வித்தியாசமான ஒன்றைக் கேட்கிறார். முடிவில் அவர் இந்த கூடாரத்துக்கு வந்து இன்னும் வித்தியாசமான ஒன்றைக் கேட்கிறார். பாருங்கள்? அப்படியிருக்குமானால், அது மக்களை குழப்பிவிடும். 3உதாரணமாக, ஒருவர், “ஓ, நீங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியை பெறவேண்டியதில்லை. அது அவசியம் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, சகோ. க்ரேஸ் அவ்விதம் கூறினதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நீங்கள் சகோ. ரட்டல் சபைக்குச் செல்கிறீர்கள். அவர், “ஆம், அது அவசியம்” என்று கூறுகிறார். அதன் பிறகு நீங்கள்ஜூனியின் சபைக்குச் செல்வீர்களானால் அவர், “அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை' என்று கூறுகிறார். பாருங்கள்? நாம்ஒன்று கூடுவோமானால்... ஜெபர்ஸன்வில்லில் இந்த சத்தியத்தில் உள்ள போதகர் அனைவரும் ஒன்று கூடும்படி செய்து, நாம் அனைவரும் ஒரே காரியத்தை கூறுவோமானால் நலமாயிருக்கும். 4அங்கு தான் அநேக சமயங்களில் டீகன்மார்களும் தர்மகர்த்தாக்களும்.... அவர்களுடைய அலுவல் என்னவென்பதை அவர்கள் கண்டுகொள்ள வேண்டும். இன்றிரவு சபை பொருளாளரும், வாயில் காப்போரும் இங்குள்ளதைக் காண்கிறேன். எனவே அவர்களுடைய அலுவல் என்னவென்பதை நாம் இப்பொழுது காணப் போகிறோம். இதையடுத்து இங்கு கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் எந்தவிடத்திலும் கேட்கப்பட்டு, எந்தவிடத்திலும் அவைகளுக்கு பதில் அளிக்கப்படும். இவை சாதாரண கேள்விகளே - தர்மகர்த்தாக்கள் செய்ய வேண்டிய வேலை என்ன போன்றவை. அது அவர்கள் வழக்கமாக செய்யும் வேலையாயிருக்குமானால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இங்குள்ள அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் நினைத்தேன், ஒருக்கால்... 5ஒரு கேள்வி இங்கு கேட்கப்பட்டுள்ளது. அது நல்ல ஒரு கேள்வி என்று நினைக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால் அதற்கு சற்று கழிந்து பதிலளிக்கிறேன். ஆனால் இப்பொழுது நாம் சிந்திக்க வேண்டியது: ஒரு குறிப்பிட்ட பிரச்சினை எழும்பும்போது, ஒரு டீகன் என்ன செய்ய வேண்டும்? அவர் என்ன ... ஒரு குறிப்பிட்ட பிரச்சினை எழும்பும்போது, அவர் செய்ய வேண்டிய கடமை என்ன? அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பாருங்கள்? அல்லது ஒரு தர்மகர்த்தா என்ன செய்ய வேண்டும்? ஒரு மேய்ப்பர் என்ன செய்ய வேண்டும், அப்படி ஏதோ ஒன்று, பிரச்சினையின்போது அவர்கள் வழக்கமாக செய்ய வேண்டிய வேலை முறை நமக்குத் தெரியும், ஆனால் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று சம்பவிக்குமானால், பாருங்கள், அப்பொழுது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? 6நாம் எங்கே பொருந்த வேண்டும் என்று நமக்குத் தெரியும், அது ஒரு இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது போன்றது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஸ்தானத்தை அறிந்திருக்கிறோம். இந்த விதமான ஒரு கூட்டத்தில், இந்த கேள்வியின் பேரில் பாதிஇரவை நாம் கழிக்க முடியும், அது நமக்குத் தெரியும், ஆனால் அது ... அது அவசியமல்ல என்று நினைக்கிறேன். இதற்கு நாம் விடையளிப்போம். நீங்கள் ஒவ்வொருவரும்... இப்பொழுது பெயர்கள் எழுதப்படவில்லை, சில கேள்விகளில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன, ஆனால் கேள்விகள் எழுதினவர்களின் பெயர்களை நான் அறிவிக்கமாட்டேன். கேள்விகள் எதுவாயிருந்தாலும், அவைகளை நான் படிப்பேன். இரண்டு கேள்விகளில் மட்டுமே பெயர் எழுதப்பட்டுள்ளன. பொறுங்கள், பெயர் எழுதப் பட்ட வேறொரு கேள்வியையும் நான் ஒருக்கால் கண்டுபிடிக்கக் கூடும். எனக்குத் தெரியும், அது டாக்டர் இங்கில்மன். நான் 4-426 தெற்கு பகுதிக்கு சென்று அவரைச் சந்தித்தேன். ஜார்ஜ் டவுனில் வசிக்கும் அந்த டாக்டர் வீட்டுக்கு நாங்கள் சென்றிருந்த போது, அவர் சுகமடைந்தார். அவர் நீண்ட காலமாக நினைவிழந்திருந்தார். இந்த கேள்விகள் மாத்திரமே பெயர் கொண்டுள்ளன. இப்பொழுது நான் முதலில் படித்த நமது முதல் கேள்வியைப் பார்ப்போம். நாம் தயவுகூர்ந்து ஒரு நிமிடம் எழுந்து நிற்போம். 7எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு நாங்கள் மனிதர் கொண்ட கூட்டமாக, கிறிஸ்தவ மனிதரைக் கொண்ட கூட்டமாக கூடி வந்திருக்கிறோம். உம்மை நாங்கள் நேசிக்கிறோம், உம்மில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம், எங்கள் வாழ்க்கையையும் சேவைகளையும் உமது ஊழியத்திற்கென்றே அர்ப்பணித்துள்ளோம். இங்கு இளைஞர்கள், நடுத்தர வயதுள்ள ஊழியக்காரர் உள்ளனர். அவர்களுக்கு சபைகள் உள்ளன. அவர்கள் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவர்கள். இங்கு மகன்மார்கள் உள்ளனர், அவர்கள் வெவ்வேறு சபைகளில் தங்கள் உத்தியோகங்களில் பொறுப்புள்ளவர்களாக உள்ளனர். இங்கு பொறுப்புடன் கூடிய தர்மகர்த்தாக்கள் உள்ளனர். மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள் யாராயிருந்தாலும், கர்த்தாவே, நாங்கள் உமக்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறோம். ஆகையால்தான், நாங்கள் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசுவதற்காக, இங்கு ஒன்றுகூடி வந்துள்ளோம். நாங்கள் ஒரே காரியத்தைப் பேசவேண்டுமென்று எங்களுக்கு வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளது. பிதாவே, இவ்விதமான கூட்டத்தில், எங்கள் சகோதரரில் சிலருக்கு, எங்களில் சிலருக்கு, கருத்து வேறுபாடு உண்டாயிருக்க வழியுண்டு, உண்மை என்னவென்று கண்டுகொள்ளவேஅவர்களில் சிலர் கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். நாங்கள் ஒவ்வொருவரும் குறைவுள்ளவர்கள் என்று அறிந்திருக்கிறோம். இங்குள்ள சகோதரர் எவரையாகிலும் நான் இங்கு வரும்படி அழைத்து இந்த கேள்விகளுக்கு விடையளிக்கக் கூறுவேனானால், அவர்கள் என்னைப் போன்றே அல்லது என்னைக் காட்டிலும் நன்றாக விடையளிக்க முடியும். ஆனால் நாங்கள் ஒருமித்து உமது வெளிப்பாடுகளின் மேல் சார்ந்திருந்து, உமது வார்த்தையின் மூலமாயும்.... உமது ஆவியினாலும் எங்களுக்கு வெளிப்படுத்துவீர் என்றும்... ஒவ்வொரு கேள்விக்கும் எங்களுக்கு விடைகிடைக்குமென்றும் காத்திருக்கிறோம். எங்கள் இருதயங்கள்... நாங்கள் இந்த விடைகளினால் நிறைந்து, இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக எங்களுக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின் மூலமாக உமக்கு சேவை செய்ய நாங்கள் ஆயத்தமாகி விட்டோம் என்னும் உணர்வுடன் செல்ல கிருபையருளும். பிதாவே, இங்கு நாங்கள் வந்துள்ள நோக்கம் அதுவே. அதை இப்பொழுது அருளுவீராக. பிதாவே, உமக்காக நாங்கள் காத்திருக்கையில், எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பீராக. எங்கள் மனதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம். கேள்விக்கு முழுவதுமாக பதிலளிக்கப் பட்டு ஆவியினால் நாங்கள் திருப்தியடையும் வரைக்கும், நாங்கள் அதிலே நிலைகொண்டு, உமது பிரசன்னத்தின் நிமித்தம் நாங்கள் ஒருமுகமாக இணங்கும்படி செய்யும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்! 8துவக்கத்தில் ஒரு வேத வசனத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன். தீர்க்கதரிசியாகிய ஏசாயா கூறினது போன்று: “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்....' ஏசாயா 1:18 ஆகையால் தான் நாம் இன்றிரவு இங்கு வந்திருக்கிறோம் - விவேகத்துடன் காரியங்களை அறிந்து கொள்ள. இப்பொழுது நான் தொடங்கப் போகிறேன்... எண் வரிசைப்படி சிலவற்றை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். சகோ. உட் இதை அவர்கள்... இந்த உறையில் பதில்கள் உள்ளன. என் அருமை சகோதரரே, இந்த பதில்கள் ஒவ்வொன்றும், என் அறிவுக்கு எட்டின வரைக்கும், அதை நான் எவ்வாறு புரிந்து கொண்டேனோ. அதற்கேற்ப சிறப்பாக அளிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். 9இந்த பதில்கள் பிழையற்றவை அல்ல என்று நான் கூறவில்லை, பாருங்கள். வேதவாக்கியங்கள் பிழையற்றவை, எனக்குத் தெரிந்தமட்டில் இந்த பதில்கள் வேதவாக்கியங்களுடன் இணைந்துள்ளன. நான் கூறுவது தெளிவாயுள்ளது என்று நம்புகிறேன். இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, அதை பெற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பெற்றுக்கொள்ளலாம். வேதவாக்கியங்கள் பிழையற்றவை என்று நானறிவேன், ஆனால் என் பதில்கள் பிழையற்றவை அல்ல. நீங்கள் அனைவரும் இதை புரிந்து கொண்டீர்கள் என்று நிச்சயித்திருக்கிறேன். அது பிழையற்றவையாக இல்லாமல் இருக்குமானால், நீங்கள் எந்த நேரத்திலும் அதைக் குறித்து என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமையுண்டு. அது வேறொருவருடைய கேள்வியாயிருந்தால்.... அது உங்களுடைய கேள்வியாக இருக்க வேண்டுமென்பதில்லை, அது வேறொருவருடைய கேள்வியாயிருந்தால், ஒருக்கால் அதைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள். ஆனால் நாங்கள் உதவி செய்யவே இங்குள்ளோம். இங்கு நாம் ஒன்று கூடி வந்துள்ள காரணம், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், நாட்கள் பொல்லாதவைகளாயிருக்கின்றன. நாம் பயிற்சி பெற, பள்ளியில் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். 10சகோ. ஸ்ட்ரிக்கர் ஒரு இராணுவ வீரர்; பின்னால் உள்ள சகோ. கோட் ஒரு இராணுவவீரர்; ஒருக்கால் இங்குள்ள சகோ. ரட்டலும் கூட ஒரு இராணுவ வீரராய் இருந்திருக்கலாம். சகோ. பீலரும் மற்றவர்களும் இராணுவ வாழ்க்கையில் இருந்திருக்கின்றனர். நீங்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு, ஆலோசனை நிகழ்த்துகின்றீர்கள். நீங்கள் போர்க்களத்துக்கு செல்வதற்கு முன்பு போரைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள். சத்துருவை நீங்கள். போர்க்களத்தில் சந்திப்பதற்கென அவனுடைய யுத்ததந்திரம் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்கிறீர்கள். நான் முன்பு குத்து சண்டையிடுவது வழக்கம். அவர்கள் எனக்கு எதிராக குத்து சண்டையிடுகிறவன் யாரென்று அறிந்து. அவன் எந்த விதமான குத்து உபயோகிப்பான், அது மேல் குத்தோ, இடது குத்தோ, அவன் வலது கை குத்து சண்டைக்காரனா. இடது கை குத்து சண்டைக்காரனா, அவன் எவ்வளவு பெலசாலி, அவன் பாதங்களை வேகமாக அசைப்பவனா. அவனுடைய கண்களை அவன் எப்படி உபயோகிக்கிறான், அவன் எந்தமூலையிலிருந்து வருகிறான், இது போன்ற அவனுடைய எல்லா தந்திரங்களையும் கண்டு கொள்வார்கள். குத்து சண்டை பழக்குகிறவர்கள் அவன் முன்பு குத்து சண்டையிட்டதை கண்டிருக்கின்றனர். எனவே, அவர்கள், என்னுடன் சண்டை போடவிருக்கும் மனிதனின் அதே தந்திரங்களைக் கொண்ட வேறொரு மனிதன் என்னுடன் சண்டையிடும்படி செய்து என்னைப் பழக்குவார்கள். அதற்காகத் தான் நாம் இன்றிரவு இங்கிருக்கிறோம். சத்துரு தாக்கும் விதத்தை நாம் அறிந்திருக்கிறோம். அவன் கையாளும் யுக்தி என்னவென்று நாம் அறிந்திருக்கிறோம். அவன் அசைய முடியாதபடிக்கு அவனை வேதவசனங்களால் தாக்குவதற்காகவே இன்றிரவு நாம் இங்கிருக்கிறோம். ஏனெனில் சத்துரு எல்லாவிடங்களிலும் இருக்கிறான். 11பின்னால் உட்கார்ந்திருக்கும் சகோ. ராபர்ஸனை நான் காண்கையில், ஒரு இராணுவ வீரன் எவ்வாறு இருப்பான் என்பதை அவர் நிச்சயம் அறிந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு உண்மையில் இராணுவத்தில் சில காலம் நல்ல தருணம் உண்டாயிருந்தது! இங்கு எத்தனை இராணுவ வீரர் உள்ளனர், பார்ப்போம், இராணுவத்தில் வீரராக பணியாற்றியவர்? இங்கே பாருங்கள், ஒரு கூட்டம் இராணுவவீரர். சரி. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். சகோ. ராய், சகோ. பீலர், இன்னும் இங்குள்ள மற்ற இராணுவ வீரரே, அதை தான் நீங்கள் ஆராய்ந்து படிக்கிறீர்கள். இல்லையா? நீங்கள் எதிரியைக் குறித்து ஆராய்ந்து அறிகிறீர்கள், “அவன் என்ன செய்யப் போகிறான்? அவனுடைய அசைவு என்ன?” என்று. அதன் பிறகு அவனைப் போர்க்களத்தில் எவ்விதம் சந்திப்பது என்பதை அறிந்து கொள்கிறீர்கள். 12அதற்காகத்தான் இங்கு நாம் இருக்கிறோம் - சத்துருவின் அசைவை ஆராய்ந்து அறிந்து, அவனை எப்படி சந்திப்ப தென்றும், அவனை எது ஜெயங்கொள்ளும் என்றும் அறிந்து கொள்வதற்காக. மற்றும் ஞாபகம் கொள்ளுங்கள். இதை கூற விரும்புகிறேன், சகோதரரே. இங்குள்ள இந்த சிறு சபை வரிசையாக வரங்களைப் பெறத் தொடங்கியுள்ளது, சபைக்கு வரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரங்கள் இருந்தாலும் இல்லாமற்போனாலும், வரம் ஒன்றுமே இல்லாமற் போனாலும், நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், வரம் எப்பொழுதுமே சத்துருவைத் தோற்கடிக்காது. ஆனால் வார்த்தை தோற்கடிக்கும். வார்த்தை அவனை எந்தவிடத்திலும் சந்திக்கும். இயேசு இந்த உலகில் இருந்தபோது அதை நிரூபித்தார். அவருடைய .... அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். அவர் சத்துருவைத் தோற்கடிக்க தமது அருமையான வரங்கள் ஒன்றையும் ஒருபோதும் உபயோகிக்கவில்லை. நாம் மத்தேயு சுவிசேஷத்தில் காண்கிறோம் - அது மத்தேயு 2ம் அல்லது 3ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். அவர் சொன்னார்... இல்லை, மத்தேயு 2ம் அதிகாரத்தில் அவர் சத்துருவைச் சந்தித்த போது (மத்தேயு 4ம் அதிகாரம் - தமிழாக்கியோன்), அவனை வார்த்தையின் அடிப்படையில் சந்தித்து எழுதியிருக்கிறதே“ என்றார். சத்துரு வந்து “எழுதியிருக்கிறதே” என்றான். அவர் “இப்படியும் எழுதியுருக்கிறதே” என்று சத்துருவைத் தோற்கடிக்கும் வரைக்கும் உரைத்தார். அதற்காகவே இங்கு நாம் இருக்கிறோம், தேவன் நமக்கு அளித்துள்ள பொருளின் உதவியைக் கொண்டு சத்துருவை சந்திக்க 13இப்பொழுது நான்கு கேள்விகளை இங்கு வைத்திருக்கிறேன் .... அவை ஒரே துண்டு காகிதத்தில் எழுதப்பட்டுள்ளன. அவைகளுக்கு வரிசைக்கிரமமாக ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு, ஐந்து, ஆறு ... எட்டு, பத்து என்று எண்களைத் தந்திருக்கிறேன். இந்த காகிதத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பின்பு, மற்ற கேள்விகளுக்கு தாவி விடுவேன். இது என்ன கூறுகிறதென்றால்: சகோ. பிரான்ஹாமே, இந்த கேள்விகள் முறைப்படி இல்லாமல் போனால், அவைகளைத் தள்ளி விடுங்கள். அதைக் குறித்து நான் மோசமாக நினைக்கமாட்டேன். அது கர்த்தருடைய கரம் அல்லவென்று அறிந்து கொள்வேன். முதலாம் கேள்வி : சகோ. பிரான்ஹாமே, நீங்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்... அதாவது நான் மீண்டும்... நான் ஊழியத்துக்கு மீண்டும் வரவேண்டுமென்று நீங்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன், நான் சிந்தனை செய்து அதைக் குறித்து தேவனிடத்திலிருந்து திட்டமானவார்த்தையைப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்நாள் வரைக்கும் அது வரவேயில்லை. முடிவு மிகவும் அருகில் உள்ளதென்று நான் அறிந்துள்ளபடியால், கர்த்தராகிய இயேசு என்னிடம் பேசுவதற்கு நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா? அல்லது, நீங்கள் இந்நாளில் அவருடைய சார்பில் பேசும் பேச்சாளராக (spokesman) இருப்பதால், என்னிடம் என்ன கூறவேண்டுமென்று உங்களிடம் கூற அவர் பிரீதிப்படுவாரா? நல்லது. இப்பொழுது சகோதரனே, நான்... அதற்கான பதிலை இங்கு எழுதி வைத்துள்ளேன். தேவன் இந்த சகோதரனை அழைத்தல், வாழ்க்கையில் ஒரு அழைப்பு. “அழைப்பு என்னும் இந்த ஒரு பெரிய காரியத்தை நாம் பொருளாகத் தெரிந்து கொண்டு, இரவு முழுவதும் அந்த ஒன்றின் பேரில் பிரசங்கிக்கலாம். உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள் (2பேது. 1:10), பாருங்கள். நாம் அழைக்கப்பட்டோமா என்று வியந்து கொண்டிருக்க நாம் விரும்பவில்லை. நீங்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? சகோதரனே, உங்கள் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்துள்ளதென்றும், ஒரு வேலையைச் செய்ய நீங்ள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் முற்றிலும் நிச்சயமுடையவர்களாயிருந்தால்.... சத்துரு உங்களிடம் இந்த சூழ்ச்சியைக் கையாள முடியும். அதாவது, நீங்கள் உண்மையில் அழைக்கப்பட்டிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்று நினைக்கும்படி அவனால் செய்ய முடியும்; அல்லது மாறாக, நீங்கள் அழைக்கப்படாதிருக்கையில், நீங்கள் அழைக்கப் பட்டுள்ளதாக நினைக்கும்படி செய்ய முடியும். எனவே நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். 14இப்பொழுது. இதைச் செய்ய வேண்டிய முறை இதுவே. முதலாவது கண்டுபிடியுங்கள்... நல்லது, இப்பொழுது. இது ஆலோசனை மட்டுமே, இதைக் குறித்து நான் செய்யக் கூடிய ஓரே காரியம் ஆலோசனை தருவதே. பாருங்கள்? முதலாவதாக உங்கள் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்தது என்பதைஉறுதியாக்கிக் கொள்ளுங்கள், அதன் பிறகு உங்கள் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பரிசீலனை செய்து பாருங்கள். பாருங்கள்? நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பிரசங்கம் செய்வதற்கு உங்கள் நோக்கம் என்ன? அது வெறும் ... இப்பொழுது உங்களுக்கு உள்ள வேலையைக் காட்டிலும் அது எளிதான வேலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் அதை மறந்து விடுங்கள், அது அழைப்பு அல்ல. தேவனுடைய அழைப்பு உங்கள் இருதயத்தை மிகவும் அனல் மூட்டிக் கொண்டேயிருப்பதால், உங்களால் இரவும் பகலும் இளைப்பாறவே முடியாது. அதிலிருந்து நீங்கள் விலகவே முடியாது. அது உங்களை சதா உறுத்திக் கொண்டேயிருக்கும். 15நீங்கள் பிரசங்கிக்க வேண்டுமானால்... உங்களுக்கு வேறொரு நோக்கமும் இருக்கக் கூடும். நீங்கள், “இப்பொழுது எனக்குள்ள வேலையைக் காட்டிலும், நான் வெற்றிகரமாக சுவிசேஷகனுடைய அல்லது மேய்ப்பனுடைய வேலையைச் செய்து, எனக்கு நல்ல சம்பளமும், ஒரு நல்ல வீடும் கிடைக்கப் பெற்று வாழ நேரிட்டால், அது மிகவும் நன்றாயிருக்கும், இப்பொழுது நான் செய்து வருகின்ற வேலையைக் காட்டிலும் அது எளிதாக இருக்கும். அது உண்மையிலேயே அவ்விதம் இருக்கும் என்று எண்ணுகிறேன்...' எனலாம். இப்பொழுது, பாருங்கள், துவக்கத்திலேயே உங்கள் குறிக்கோள் தவறானது. பாருங்கள். அது சரியல்ல. பாருங்கள்? அதில் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். இல்லையென்றால் நீங்கள், “நல்லது. இந்த ஊழியத்தை நான் செய்வதனால் ஒருக்கால்... ஜனங்களின் மத்தியில் பிரபலம் வாய்ந்தவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறலாம். பாருங்கள். அப்படியானால், நீங்கள் ஒரு பெரிய தோல்விக்கு ஆயத்தமாயிருப்பதைக் காணலாம். உண்மையாக, பாருங்கள்! ஆனால், “நான் மலிவு பிஸ்கோத்துக்களைத் தின்று ஓடை தண்ணீரைக் குடிக்க நேரிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் எப்படியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்னும் குறிக்கோள் உங்களுக்கு இருக்குமானால் உங்களில் ஏதோ ஒன்று ஊடுருவிப் பாய்ந்து நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன், இல்லையேல் மரிப்பேன்' என்று கூற வைக்குமானால்! பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எங்காவது செல்வீர்கள். ஏனெனில் தேவன் உங்களுடன் ஈடுபடுகிறார். தேவன் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அது தேவன், நீங்கள் இளைப்பாற அவர் விடமாட்டார். வழக்கமாக தேவனால் அழைக்கப்பட்ட மனிதன் இளைப்பாற விரும்பமாட்டான். அதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? எந்த மனிதனும்... 16அண்மையில் மிகவும் விலையேறப் பெற்ற சில சகோதரர்கள் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நாங்கள் இப்பொழுது வழியில் வந்துவிட்டபடியால், நாங்கள் இப்பொழுது கர்த்தரைக் கண்டடைந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டபடியால், நாங்கள் செய்ய வேண்டிய ஊழியத்திற்காக வரங்களை நாடலாமா? என்று கேட்டனர். நான், “அவ்விதம் ஒருபோதும் செய்யாதீர்கள்” என்றேன். பாருங்கள்? அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்ய மக்களுக்கு ஆலோசனை கூறாதீர்கள். ஏனெனில் அதைச் செய்ய விரும்பும் ஒரு மனிதன் வழக்கமாக அதைச் செய்ய முடியாத ஒருவனாயிருப்பான். அதைவிட்டு ஓடிப் போக முயற்சி செய்யும் ஒரு மனிதனையே தேவன் உபயோகிக்கிறார். பாருங்கள்? அவன் அதை விட்டு ஓடிப் போக முயன்று, “ஓ, சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் அழைப்பு எனக்குள் உள்ளது, ஆனால் நான் . ... வ்யூ! அதைச் செய்ய எனக்கு பிரியமில்லை என்கிறான். பார்த்தீர்களா? அவன் ஓடிப் போக முயல்கிறான். ஆனால் அதை எப்படியாவது செய்ய வேண்டுமென்று நினைப்பவன், முதலாவதாக என்ன தெரியுமா, அவன் பெருமை கொண்ட ஒருவனாக ஆகிவிடுகிறான். அவன், “தேவனே, மலைகளை அசைக்கத்தக்கதாக எனக்கு வல்லமையை அளிப்பீராக. நான் உமக்கு சொல்லுகிறேன், மலைகளை அசைக்க என்னை நீர் அனுமதிப்பீரானால், உமக்காக நான் ஏதாவதொன்றைச் செய்வேன்” என்கிறான். இல்லை, அவனால் ஒன்றுமே செய்ய முடியாது, அவன் சரியான மனப்பான்மைக்கே தன்னை நகர்த்திக் கொள்ள முடியாது. பாருங்கள். எனவே அவன் தேவனுக்காக மலைகளை அசைக்கவே முடியாது. 17பவுலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பவுல் தன் அழைப்பை விட்டு விலகிக் கொண்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஓ, சகோதரனே! அவனால் அதை செய்திருக்கவேமுடியாது. அவன் தன் சபையை விட்டு, எல்லாவற்றையும் விட்டு .... அவன் ஆசியாவுக்குச் சென்றான் என்று நினைக்கிறேன், இல்லையா? அது வரைக்கும் அது அவனை இரவும் பகலும் உறுத்திக் கொண்டேயிருந்தது. அது சரியா தவறா என்றும், தேவன் அவனை உண்மையில் அழைத்திருக்கிறாரா என்பதையும் கண்டு கொள்ள அவன் அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேதத்தை ஆராய்ந்து பார்த்தான். எனவே சகோதரனே, தேவன் உங்களை அழைத்திருப்பாரானால், அது உங்கள் இருதயத்தை உறுத்திக் கொண்டேயிருக்கும். அப்படி இருக்குமானால் நான், “பாரமான யாவற்றையும். உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விடுங்கள்” என்பேன். பாருங்கள்? அது உங்களை உறுத்தாமல் போனால், அதைக் குறித்து நான் பெரிதாக எண்ண மாட்டேன். அதை அப்படியே விட்டு விடுவேன். 18சகோ. பிரான்ஹாமே, என்னிடம் என்ன கூற வேண்டு மென்று அவர் உங்களிடம் கூறுவார் என்று நினைக்கிறீர்களா? தேவன் அவரிடம் நேரடியாக பேசுவார் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், உங்களுக்குத் தெரியுமா, தேவன் ... அவர் நம்மிடம் பேசக்கூடாதபடிக்கு நாம் அவ்வளவு பெரியவர்கள் அல்ல. அவர் நம்மிடம் பேசுவார். பாருங்கள், அவர் அவர் நம்மிடம் பேசுவார். இதை உங்களிடம் கூறுகிறேன், அவர் என்னிடம் அதைக் கூறுவாரானால், ஒருக்கால் அந்த சகோதரன், “நல்லது. அவர் சகோ. பிரான்ஹாமிடம் அவ்விதம் கூறினார், தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறலாம். ஆனால், பாருங்கள், உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பது சகோ. பிரான்ஹாம் அல்ல, கர்த்தராகிய இயேசுவே உங்களுக்கு அழைப்பைக் கொடுக்கிறார். பாருங்கள்? அழைப்பைக் கொடுப்பது கர்த்தராகிய இயேசுவானால், அவரே பேசுவார். பாருங்கள்? நான் உங்கள் செவிகளில் பேசலாம், ஆனால் கிறிஸ்து உங்களை ஊழியத்துக்கு அழைப்பாரானால் அவர் உங்கள் இருதயத்தில் பேசுவார். பாருங்கள்? அங்கு தான் அது நங்கூரமிடப்பட வேண்டும், அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்லவே முடியாது. இப்பொழுது இரண்டாம் கேள்வியின் பேரில்... இப்பொழுது அதைக் குறித்து ஏதாகிலும் கேள்வி இருக்குமானால், பாருங்கள். அதாவது ஒரு மனிதனின் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்து அவனுடைய இருதயத்தில் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து, வேறொரு சகோதரன் ... ஓ, இதை எழுதினது யார் என்று எனக்குத் தெரியும். பாருங்கள், அது ஒரு விலையேறப்பெற்ற, அருமையான , கிருபையுள்ள சகோதரன். அவருக்கு தேவனுடைய அழைப்பு உள்ளதென்று நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். ஆனால் நான்... ஆனால் நான் கூறுவதன் பேரில் அவர் அதைச் செய்வதை நான் விரும்பமாட்டேன் (அதன் காரணமாகத்தான் நான் இவ்விதம் அதற்கு விடையளித்தேன்) பாருங்கள். “நல்லது. ஆமாம், சகோ. இன்னார் இன்னார் ஊழியத்துக்குச் செல்ல வேண்டும்” என்று நான் கூறுவதன் பேரில். பாருங்கள்? 19அப்பொழுது நீங்கள், “அதை நான் செய்ய வேண்டும் என்று சகோ பிரான்ஹாம் என்னிடம் கூறினார்” என்பீர்கள். பாருங்கள், சகோ. பிரான்ஹாமுக்கு ஏதாகிலும் சம்பவித்து, நான் கொல்லப்பட்டேன், அல்லது மரித்துப் போனேன். அல்லது விலகி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது, பாருங்கள், உங்கள் அழைப்பு அப்பொழுது முடிந்து விடும். ஆனால் சகோதரனே, இயேசு உங்களை அழைப்பாரானால், நித்தியம் என்று ஒன்று உள்ள வரைக்கும். அது ஒலித்துக் கொண்டேயிருக்கும் பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது இரண்டாம் கேள்வி... இப்படி ஏதோ ஒன்று, “இது கடைசி நாட்கள் என்று நான் அறிந்துள்ளதால், அதைக் குறித்து அந்த சகோதரனை நான் பாராட்டுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை அந்த சகோதரன் உணர்ந்துள்ளதைக் குறித்தும் கிறிஸ்துவுக்காக ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமெனும் அவருடைய இருதயத்தின் உத்தமத்தைக் குறித்தும் நான் நிச்சயம் அவரைப் பாராட்டுகிறேன். 20நமது விலையேறப் பெற்ற ஆண்டவர் அவருக்காக நான் ஒரு சிறிய காரியத்தைச் செய்ய என்னை அனுமதிப்பாரானால், நான் முன்பு ஊழியம் செய்திருந்து தவறில்இருந்த (அதற்காக நான் வருந்துகிறேன். அதை அவர் இடைப்பிறவரலில் (paranthesis) எழுதியிருக்கிறார். அந்த ஜனசமூகத்தினிடம் சென்று அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டுமா? அவர்கள் என் இருதயத்தில் இடம் பெற்றுள்ளனர். இல்லை, சகோதரனே. அதே ஜனசமூகத்தினிடம் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியது அவசியமில்லையென்று நினைக்கிறேன். அருமை சகோதரனே, கர்த்தர் உங்களை அழைக்கும் போது, நீங்கள் முன்பு குடியிருந்த ஜன சமூகத்துக்கு உங்களை போக விடமாட்டார் என்று நினைக்கிறேன். அங்கு நீங்கள் ஒருக்கால் வேறு காரியங்களைப் போதித்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுதோ, அப்பொழுது நீங்கள் போதித்தவைகளிலிருந்து வித்தியாசமான காரியங்களைக் காண்கிறீர்கள். தேவன் உங்களை அழைக்கும்போது. அவர் ஒருக்கால்... அவர் அதை உங்களுக்கு உறுதிப்படுத்துவாரானால், அவர் எந்தவிடத்திற்கும் உங்களை அனுப்பலாம். பாருங்கள்? நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜனசமூகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. நீங்கள் அந்த ஜன சமூகத்தில் இருந்த போது உத்தமமாய் இருந்தீர்கள். இந்த கேள்வியை எழுதின சகோதரனை நான் அறிவேன். மிகவும் ஆழமான உத்தமத்துடனும், ஒரு உண்மையான கிறிஸ்தவனாகவும், உங்களுக்குச் செய்யத் தெரிந்த அனைத்தையும் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்தீர்கள். அவ்வளவுதான் தேவனுக்குத் தேவை. பாருங்கள்? தேவன் உங்களை மீண்டும் அந்த ஜனசமூகத்துக்கு செல்ல அழைப்பாரானால், நான் மீண்டும் அங்கு செல்வேன். அவர் அவ்விதம் செய்யாவிட்டால், அவர் என்னை எங்கு அனுப்பினாலும் அங்கு செல்வேன். அதன் பேரில் கேள்வி வேறெதாகிலும் உண்டா? 21மூன்றாம் கேள்வி: ஒருவர் கிறிஸ்துவின் சரீரத்தில் தனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்து கொள்வது? அது நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. “எவ்விதம்... இன்றிரவு இங்குள்ளவர் அநேகரின் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி எழும்பக் கூடும்: ”எனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்து கொள்வது?“ இந்த சகோதரன் ”கிறிஸ்துவில்எனக்கு என்ன ஸ்தானம், கிறிஸ்துவின் எந்த பாகத்தை நான் வகிக்க வேண்டும்?“ என்று கேட்கிறார் என்று ஊகிக்கிறேன். இப்பொழுது, உதாரணமாக, சகோதரனே, எனக்குத் தெரிந்த சிறப்பான விடையை உங்களுக்கு அளிக்க இதைக் கூறுகிறேன். கிறிஸ்துவில் உங்கள் ஸ்தானம் என்ன ... என்பது பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதை வெளிப்படுத்தினது பரிசுத்த ஆவியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் செய்யும் காரியங்களில் அவர் உங்களை ஆசீர்வதிக்கிறாரா இல்லையாவென்று பாருங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்தால், அது அவர்தான். அவர் ஆசீர்வதிக்காமல் போனால்..... 22அண்மையில் ஒருவர் என்னிடம், “தேவன் என்னைப் பிரசங்கம் செய்ய அழைத்திருக்கிறார்” என்றார். “நல்லது, அப்படியானால் பிரசங்கம் செய்யுங்கள்” என்றேன். பாருங்கள்? எனவே அவர் - அவர் அது இப்படித்தான் என்று நான் உண்மையில் நினைக்கிறேன்... எவராகிலும் ஒருவர் இவ்விதம் நடந்து கொள்ளும்படி சாத்தான் செய்து, அவர்களை வஞ்சிக்கிறான். அதை தான் அவன் செய்ய விரும்புகிறான். அப்பொழுது உலகத்தார் அனைவருமே தங்கள் விரல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் தங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரமும் அதற்கு அர்த்தம் உரைக்கும் வரமும் உள்ளதாக எண்ணிக் கொள்கின்றனர்; சிலருக்கு தெய்வீகசுகமளிக்கும் வரம் உள்ளது; இன்னும் சிலருக்கு ... சில சமயங்களில் அவர்கள் இந்த காரியங்களில் தவறாக உள்ளனர். தங்களுக்கு இந்த வரங்கள் உள்ளபோதே அவர்களுக்கு இவை இல்லையென்று நினைப்பவரும் உண்டு. எனவே அது மிகவும் தந்திரமான ஒன்று. 23எனவே, சகோதரரே, இதை எப்பொழுதும் கடைப் பிடியுங்கள். அதாவது, ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றும்போது அதை செய்வது வேதப்பூர்வமானதா (அது வேதத்தில் உள்ளதா என்பதைக் கண்டு பிடியுங்கள். அது வேதத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் எழுதப்படுவதல்ல, நீங்கள் அதைச் செய்வதற்கு அது வேதம் முழுவதிலும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் அர்த்தத்தில் தான்நான் கூறுகிறேன். உங்கள் ஸ்தானம், நீங்கள் சுவிசேஷகர்; மேய்ப்பர், போதகர், தீர்க்கதரிசி, தேவன் உங்களை எந்த ஸ்தானத்தில் இருக்க அழைத்திருக்கிறாரோ அந்த ஸ்தானம். பாருங்கள்? அல்லது உங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரம், பாஷைக்கு அர்த்தம் சொல்லும் வரம், சபையில் உள்ள ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் ஏதாவது வரம், சபைக்குள்ள நான்கு ஆவிக்குரிய உத்தியோகங்களில் ஏதாவதொருஸ்தானம் இருக்குமானால் முதலாவதாக தேவன் அழைத்தாரா என்பதைப் பாருங்கள். அதன் பிறகு, வழக்கமாக, அதை நான் எவ்விதம் கவனிப்பேன் என்றால்.... நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன், நான் ஒரு நபரின் சுபாவத்தைக் கவனித்துக் கொண்டே வந்து, அவர்கள் எந்தவிதமான வரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று காண்பேன். பாருங்கள், தேவன் தம் சிருஷ்டியுடன், அவர் அவனை எந்தவிதமாக உண்டாக்கியிருக்கிறாரோ, அந்த விதத்தில் கிரியை செய்வார். பாருங்கள்? அவர் ஒரு சிருஷ்டியை உண்டாக்கினால்.... 24நீங்கள் ஒரு மனிதனை சலன புத்தியுள்ளவராயிருக்கக் கண்டு, அவர், “கர்த்தர் என்னை ஒரு மேய்ப்பனாக இருக்க அழைத்திருக்கிறார்” என்பாரானால், மேய்ப்பன் சலன புத்தியுள்ளவராக இருக்க முடியாது. மேய்ப்பன் திடமானவர், நிலையுள்ளவர். யாருங்கள்? “தேவன் என்னை போதகராக (teacher) அழைத்திருக்கிறார். அவர் வார்த்தையை எவ்விதம் வியாக்கியானம் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? அவர் எல்லாவற்றையும் குழப்புவாரானால், அப்பொழுது நீங்கள் அவர் உண்மையில் போதகர்தானா என்று சொல்லிவிடலாம். பாருங்கள்? அப்படியானால், செய்ய வேண்டியகாரியம் என்னவெனில், நீங்கள் அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொருத்து உங்கள் ஸ்தானம் வழக்கமாக அறிந்து கொள்ளப்படுகிறது. 25இப்பொழுது, தேவன் என்னை ஒரு சுவிசேஷகராக அழைத்த போது, நான் மேய்ப்பனாக இருக்க விரும்பினேன். வீட்டிலேயே தங்கியிருப்பது நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். தேவன் என்னை அழைத்தார். முடிவில் எல்லா மக்களும் ஒன்று கூடி...அவர்கள் மிகவும் அழுது 1717 ஸ்பிரிங் தெருவிலிருந்து வெளி வந்தனர். அவர்களில் ஒருவரும் இன்றிரவு இங்கில்லை. அருகில் வசித்த திருமதி ஹாக்கின்ஸ் என்னைச் சந்தித்து அது பொருளாதார நெருக்கடி உண்டாயிருந்த காலம், அண்டை வீட்டிலுள்ள ஒருவர் ஒரு பானை பீன்ஸ் சமைத்து. நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதை உண்பது வழக்கம்) அழுது கொண்டே என்னிடம் “நீர் மாத்திரம் ஒரு கூடாரத்தைக் கட்டுவீரானால், மேசையில் என் பிள்ளைகளின் ஆகாரத்தை குறைத்துக் கொண்டு, அதற்கு பணம் தருவேன்” என்றாள். பாருங்கள்? என் அழைப்பு சுவிசேஷகராக இருக்க... அன்று காலையில் இங்குள்ள இந்த மூலைக்கல்லை இன்றிரவு நீங்கள் தகர்த்தால், என் வேதாகமத்தின் கடைசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு காகிதம் அதில் காணப்படும், நான் சுவிசேஷகனாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினது அதில் எழுதப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் வெற்றிகரமான மேய்ப்பனாக இருக்கவேயில்லை, அவ்விதம் இருக்கவும் போவதில்லை. ஏனெனில் ஒரு மேயப்பனுக்கு இருக்க வேண்டிய பொறுமை எனக்கில்லை. பாருங்கள்? எனவே நான் மேய்ப்பனாக இருக்க முயன்றால், ஒரு மேய்ப்பன் சுவிசேஷகனாக இருக்க முயன்றால் அது எப்படி முடியாத காரியமோ, அது போல் இருக்கும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கர்த்தர் உங்களை எந்தவிதமாக அழைத்திருக்கிறாரோ, சரீரத்தில் உங்கள் ஸ்தானம் எதுவோ, அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 26பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அது முதலாம் கேள்வி, “பரிசுத்த ஆவியால் நிறைந்த அனைவருமே ... இவையனைத்தும் ஒரே கேள்வியில் அடங்கியுள்ளன. இதற்கு நான்காம் கேள்வி என்று எண் கொடுத்திருக்கிறேன். ஆனால் அதை முதலிலேயே காண்போம், பாருங்கள்? பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அவர்களெல்லாரிலும் அதிகமாகபாஷைகளைப் பேசினதாக பவுல் கூறியிருப்பதைக் காண்கிறேன்.சரி, நான்காம் கேள்வி : பரிசுத்த ஆவியைப் பெறும்போது எல்லாருமே அந்நிய பாஷை... இல்லை, அப்படியில்லை, எல்லாருமே அந்நிய பாஷை பேசுகின்றனரா... இல்லை, பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? இப்பொழுது, சகோதரனே, நான்... இது ஒரு ஆழமான கேள்வி. இப்பொழுது, அங்கே, நீங்கள் ஒருக்கால். இதற்கான சில விடைகளை ஒருக்கால் நான் பின்பு தரக்கூடும். பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல். அப்பொழுது நீங்கள் முதலில் ... தேவன் உங்களை அழைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் ஒரு போதும் அழைக்கப்படவே மாட்டீர்கள். பாருங்கள், நீங்களாகவே செய்யக் கூடியது ஒன்றுமில்லை. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். அது சரியா? எனவே பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல். 27ஆனால், தானியத்தின் முளையிலிருந்த அதே ஜீவன் தான் பட்டுக்குஞ்சத்தை தோன்றச் செய்தது. முளையிலும் பட்டுக் குஞ்சத்திலும் என்ன இருந்ததோ, அதுதான் தானியத்தை தோன்றச் செய்தது. எனவே அந்நிய பாஷையில் பேசும் பரிசுத்த ஆவி என்ன? அது நீதிமானாக்கப்படுதலின் மேலும் வளர்ந்த கட்டம். பாருங்கள்? பெந்தெகொஸ்தே சபை என்ன? மேலும் வளர்ந்த லூத்தரன் சபை. பாருங்கள்? ஆனால், இப்பொழுது, வளர்ச்சியடைந்து விட்ட பிறகு, இந்த கேள்வி எழக் கூடும் அப்படியானால் நான் இருந்த இடத்திலேயே இருக்கவா? இல்லை! இல்லை, தானியம் முதிர்வடைந்து விட்டது. பாருங்கள்? நீங்கள் தானியத்தில் தொடங்குகிறீர்கள். நீங்கள் வார்த்தையில், தானியத்தில், தொடங்குகிறீர்கள். அது நீதிமானாக்கப்படுதலை தோன்றச் செய்கிறது. அது பரிசுத்தமாக்கப்படுதலை தோன்றச் செய்யும் வரைக்கும் நீதிமானாக்கப்படுதலில் நிலைத்திருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பரிசுத்தமாக்கப்படுதலில் நிலைத்திருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, அது என்ன செய்கிறது? அது என்ன... இன்னும் ஒரு கேள்வி உள்ளது, இல்லையா? சரி. 28“அந்நிய பாஷைகளில் பேசுதல் என்றால் என்ன? அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது உங்களை நீதிமானாக்கி உங்களைப் பரிசுத்தப்படுத்தின பரிசுத்த ஆவியின் அபிஷேகமேயன்றி வேறல்ல. அது மிகவும் அதிகமாக நிறைத்து! இப்பொழுது இந்தக் கேள்வி எனக்குத் தேவைப்பட்டது. இந்த மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்பார் என்று எனக்குத் தெரியவே தெரியாது. தேவன் அதை அறிவார். இப்பொழுது மிகவும் ... இங்கு மிகவும் உஷ்ணமாக இருந்தால், அந்த கதவைத் திறந்து விடுங்கள், உங்களுக்கு உறக்கம் வருவதாக இருந்தால். இதை நீங்கள் நன்றாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இங்கு உண்மையில் சிறிது உஷ்ணமாயுள்ளது. உங்களுக்கு அது உறக்கத்தை வருவிக்கும். 29இப்பொழுது கவனியுங்கள், இதை கவனியுங்கள்: நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இப்பொழுது இங்கே பாருங்கள். இதை விளக்க விரும்புகிறேன். இங்கு நான் இருக்கிறேன், நான் ஒரு பாவி . நான் இந்த வழியாய் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். சற்று கழிந்து, ஒரு சமயம், ஏதோ ஒன்று என்னிடம் பேசுகிறது. தேவனைத் தவிர வேறொன்றும் என்னைத் திருப்ப முடியாது. அது சரியா? நான் இந்த வழியாக திரும்பி விடுகிறேன். நான் அவ்விதம் திரும்பும் போது, அது தான் என் நீதிமானாக்கப்படுதல். அது சரியா? அங்குள்ள கிறிஸ்துவின் படமே, நான் போய் சேரவேண்டிய இடம். எனக்கு நல்லுணர்வு தோன்றும் இடத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். பாருங்கள், நான் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன். நான் அவருடன் பேசக்கூடிய இந்த கட்டத்துக்கு வந்துவிட்டேன், ஏனெனில் .... நான் இன்னும் என்னைக் குறித்து வெட்கப்படும் நிலையில் இருக்கிறேன். நான் இன்னும் புகை பிடிக்கிறேன், இன்னும் பொய் சொல்கிறேன், நான் செய்யத்தகாத சில தீய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன், எல்லா நேரங்களிலும் எனக்கு ஏற்றத் தாழ்வு, ஏற்றத் தாழ்வு உள்ளது. ஆனால் நான் அவரிடம் நடந்து சென்று அவரிடம் பேச வேண்டும்மென்று வாஞ்சித்து, அவர் என்னை இவையனைத்திலுமிருந்து சுத்திகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? சரி, அது இங்குள்ளது, அது பரிசுத்த பரிசுத்தமாக்கப்படுதலின் கட்டம். அது என்ன செய்தது? அது என்னை நேராக்கியது. பாருங்கள்? 30இப்பொழுது நான் பரிசுத்த ஆவிக்குச் செல்கிறேன். பாருங்கள் இங்கு நான் அடையும்போது, ஒரு அபிஷேகத்தினால் நான் பரிசுத்த ஆவியில் இருக்கிறேன். அது சரியா? பரிசுத்த ஆவி என்ன செய்கிறது? அது எனக்கு வல்லமையைத்தருகிறது - ஒரு பிரசங்கியாயிருக்க வல்லமை, ஒரு பாடகனாயிருக்க வல்லமை, அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கு வல்லமை, பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பதற்கு வல்லமை. அது முழுவதும் வல்லமையாயுள்ளது, ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய வல்லமை. தேவனுடைய வல்லமையே என்னைத் திசை திருப்பியது. தேவனுடைய வல்லமையே என்னை பரிசுத்தமாக்கியது. என்னை நிரப்பியது பரிசுத்த ஆவியே. இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நான் இங்கு நின்று கொண்டு எதையோ கூற முயல்கிறேன், தேவனுடைய வல்லமை என் மேல் அதிகமாக இறங்கி என்னால் பேச முடியவில்லை. பாருங்கள்? அப்பொழுது நான் திக்கி பேசத் தொடங்குகிறேன். உதாரணமாக, நான் “சகோதரர்களே” என்று கூற முற்படும்போது, அது.... இது இப்படியுள்ளது, இதை நான் இந்த விதமாக விவரிக்கப் போகிறேன். நீங்கள் அதை நிச்சயம் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று கருதி சகோதரர்களாகிய உங்களிடம் இதை விவரிக்கப் போகிறேன். “எப்படி இருக்கிறீர்கள், சகோதரனே? பாருங்கள், நான் இன்னும் பாவக் குற்றத்தில் இருக்கிறேன். ”உங்களில் நான் ஒருவனாக இருப்பதற்கு நிச்சயம் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சரி. சற்று கழிந்து. என்ன நடக்கிறது? நீங்கள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் இன்னும் உலகத்தின் அசுத்தமானகாரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். 31சற்று கழிந்து நான் சுத்திகரிக்கப்படுகிறேன். ஏதோ ஒன்று சம்பவித்தது, நான் பரிசுத்தமாக்கப்பட்டு விட்டேன். அப்பொழுது நான் உங்களை முகத்துக்கு நேராக பார்க்க முடிகிறது. நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். பாருங்கள்? சரி. “சகோதரனே, தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்தில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். பரிசுத்தமுள்ள சகோதரராகிய உங்கள் மத்தியில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்”. ஏன்? நீங்கள் விரலை சுட்டிக் காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது, நான் சுத்திகரிக்கப்பட்டு விட்டேன். இப்பொழுது தேவன் என்னை அவருடைய சேவையில் வைக்கப் போகிறார். ஆம். ஐயா! 32“சகோ. பிரான்ஹாமே, நீங்கள் நீதிமானாக்கப்பட்டு விட்டீர்களா?” “ஆம்! உங்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாதிருந்த காலத்தை நான் நினைவுகூருகிறேன். சகோதரனே, இப்பொழுது என்னால் உங்கள் முகத்தைப் பார்க்க முடிகிறது . பாருங்கள், இந்த மற்றது என்ன? இப்பொழுது நான் ... இது சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, இது சேவைக்குள் வருகிறது. “பரிசுத்தமாக்கப்படுதல்” என்பது கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது என்றும், அதன் அர்த்தம் “சுத்திகரிக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது” என்றும் நாம் அறிவோம். பாண்டங்கள் பலி பீடத்தினருகில் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் சேவையில் இருக்க வேண்டுமானால், நிறைக்கப்பட்டு சேவையில் வைக்கப்பட வேண்டும். இப்பொழுது, நான் இங்கு சென்று, சேவைக்குள் வந்து விட்டேன். தேவன் தான், “எனக்கு செவிகொடு, எனக்கு செவி கொடு! எனக்கு செவி கொடு!' என்று சொல்லி என்னைத் திசை திருப்பினார். அவர் சொன்னார்... நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? பாருங்கள்? இங்கு (சகோ. பிரான்ஹாம் ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதைப் போல் பேசி விவரிக்கிறார் - ஆசி). பாருங்கள், இங்கே, நீங்கள் மிகவும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அதுதான், பார்த்தீர்களா, அதுதான் அந்நிய பாஷையில் பேசுதல். 33எனது கருத்து இதுவே: அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதன் அடையாளம் என்று நான் நம்புவதில்லை. அதுவல்ல! ஏனெனில் மந்திரவாதிகளும், பாம்புகளை கையாளுகிறவர்களும், பிசாசுகளும் அந்நிய பாஷையில் பேசுகின்றதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும், அது தேவனுடைய பிழையற்ற செயல் என்றும் சொல்லி விட முடியாது. ஆனால், இதை ஞாபகம் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளில் பேசுகிறார் என்பது உறுதி , ஆனால் பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதன் அத்தாட்சி நீங்கள் வாழும் வாழ்க்கையே, பாருங்கள். “ அவர்களுடையகனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:16). ஆவியின் கனி அந்நிய பாஷை பேசுதல் அல்ல (அவ்விதம் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை). ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், சமாதானம், இச்சையடக்கம் (கலா. 5: 22-23). பாருங்கள், அது தான் களி. அது எந்தவிதமான மரம் என்று கூறுவதற்கு, இதை தான் அந்த மரத்தில் காண்கிறீர்கள். பாருங்கள்? அது தான். 34மனிதர் பிரசங்கிகளாகிய உங்களை, டீகன்மார்களாகிய உங்களை, தர்மகர்த்தாக்களாகிய உங்களை, சுவிசேஷகர்களாகிய உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர். நீங்கள் இந்த தெருவில் நாள் முழுவதும் அந்நிய பாஷையில் பேசினாலும், அவர்கள் உங்களை நம்பமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ, அதை வாழ்ந்து காண்பித்து, கசப்பான வேர் அனைத்தையும் உங்களை விட்டு களைந்து போட்டு, இனிமையைக் காண்பீர்களானால், அப்பொழுது மனிதர் ஏதோ ஒன்று உள்ளதை உணருவார்கள். “அந்நிய பாஷையில் பேசுதல்”. தேவனுடைய பலி பீடத்தின் கீழ் தன்னை படைத்திருக்கும் ஆவியினால் நிறைந்த நபர் அந்நிய பாஷையில் பேசுவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் ஆனால் தேவனைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத அநேகர் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? அவரைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகின்றனர். இந்த வரங்களில் எந்த ஒன்றையுமே பாவனை செய்ய முடியும். பாருங்கள்? ஆனால் ஆவியின் கனியோ உள்ளில் உள்ள ஆவி எது என்பதை நிரூபிக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்கு சாட்சியாக இருக்கிறீர்கள். ஏனெனில், ஆப்பிள் மரத்தில் பீச் மரத்தின் சத்து இருக்குமானால், அது, உலகம் உள்ளது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக பீச் பழங்களைத் தான் கொடுக்கும். அது உண்மை . பாருங்கள், ஏனெனில் அது தான் அதற்குள் இருக்கும் ஜீவன். 35இப்பொழுது, இங்கும் அதே காரியம் தான். நாம் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசுவதற்காக, இதை நான் உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன். நான் விசுவாசிப்பது என்னவெனில். ... ஆவியின் அபிஷேகத்தினால் கிறிஸ்துவுக்குள் வரும் ஆவியில்நிறைந்த ஒருவன் வெறுமனே .... அதுவல்ல. அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட தன் அடையாளமல்ல. பாருங்கள்? அபிஷேகம் என்னும்போது, நீங்கள் பிசாசின் வல்லமையினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, இந்த பிசாசின் வஞ்சகஆவியின் அபிஷேகத்தின் மூலம் அந்நிய பாஷையில் பேச முடியும். அதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? அதை நான் எத்தனை முறை கண்டிருக்கிறேன்? அவர்கள் மனிதனின் மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து விட்டு, அந்நிய பாஷையில் பேசுவது எனக்குத் தெரியும். 36வனாந்தரத்திலுள்ள பாம்பாட்டிகள், பெரிய பாம்பை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மந்திரவாதிகள் அந்நிய பாஷையில் பேசி அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர். - நான் மந்திரவாதிகளின் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் ஒரு பென்சிலை கீழே வைப்பார்கள், ' ஓரு புத்தகத்தையும் கீழே வைப்பார்கள். பென்சில் புகை போக்கி குழாயில் மேலும் கீழும் ஓடி, “முகச்சவரம், மயிர். கத்தரித்தல், இரண்டு துண்டு” என்னும் பாடலை வாசிக்கும், அது அந்நிய பாஷைகளில் எழுதி, மந்திரவாதி அதற்கு அர்த்தம் உரைத்து என்ன நடந்ததென்று பிழையின்றி உரைப்பான். அது எனக்குத் தெரியும் : பாருங்கள்? எனவே நான்... பாருங்கள், உங்களால் ... பவுல், “அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்து போம், தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். இந்த வரங்கள் அனைத்தும் விரைவில் போய்விடும்' என்று கூறியுள்ளான் (அந்த கேள்வி சற்று பின்னால் நமக்கு வருகிறது, ஆனால் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்”. பாருங்கள்? எனவே, நமக்கு நிறைவானது வேண்டும், சகோதரரே. நாம் போலியான அநேக காரியங்களையும், அவை தவறான அர்த்தம் உரைத்ததையும் நாம் கண்டிருக்கிறோம். 37ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதை நீங்கள் முகத்துக்கு நேராக காண்பதனால், அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக நம்பி விடாதீர்கள். பாருங்கள்? ஆனால் அவர்களில்காணும் கனிகளைக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பதை தீர்மானியுங்கள். ஏனெனில் “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு உரைத்திருக்கிறார். பாருங்கள்? அது உண்மை . “அவர்களுடைய கனிகளினாலே”. இப்பொழுது, அதிலிருந்து நான் விலகிச் செல்லாதிருப்பேனாக. ஏனெனில் தேவன் அளித்துள்ள அந்த மகத்தான வரத்தை நான் அவமதிக்க விரும்பவில்லை. பாருங்கள்? நான் விசுவாசிப்பது என்னவெனில், தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழும் ஆவியில் நிறைந்த மனிதன் அல்லது ஸ்திரீ, அல்லது பிள்ளை எவருமே அந்நிய பாஷையில் பேசாமல் அங்கு நீண்ட காலம் வாழமாட்டார்கள். பாருங்கள்? அவனோ அல்லது அவளோ அதை செய்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 38நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது ஒருக்கால் அந்நிய பாஷை பேசாமல் இருந்திருக்கலாம். பாருங்கள்? ஆனால் நீங்கள் எந்நேரமும் தேவனுக்கு முன்பாக கிடக்கும் போது, அபிஷேகத்தின் மேல் அபிஷேகம் உங்களுக்கு கிடைக்கும் போது, ஏதோ ஒன்று நடக்கும். பாருங்கள்? என்றாகிலும் ஒரு நாள் நீங்கள் மிகவும் நிறைந்து, உங்களால் வேறொன்றையும் பேச முடியாத நிலை ஏற்படும். நீங்கள் ஏதோ ஒன்றைப் பேச முனைவீர்கள் ஆனால் உங்களால் அதை பேச முடியாது. ஜனங்கள் மாத்திரம் அது பரிசுத்த ஆவி என்பதை உணருவார்களானால், அவர்கள் முன் சென்று, தங்கள் இருதயத்தைத் திறந்து, தேவன் அவர்களிடம் பேசுவதற்கு விட்டுக் கொடுப்பார்கள். “பரியாச உதடுகளினாலும் (ஆங்கிலத்தில் ”stammering tongues“ - அதாவது நிதிக்கு வாயினாலும் - தமிழாக்கியோன்) அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்' என்று வேதம் உரைக்கிறது. ஏசா. 28:18ப் பாருங்கள் (ஏசா. 28:11 - தமிழாக்கியோன்). 39“திக்கு வாய் என்றால் என்ன? ஒருவர் தெளிவாக பேச முடியாமலிருப்பது (சகோ. பிரான்ஹாம் ஒருவர் திக்கு வாயினால் பேசுவதைப் போல் காண்பிக்கிறார் - ஆசி). நீங்கள்... நீங்கள் திக்கிப் பேசுகிறீர்கள். நீங்கள் தெளிவாக பேச முயல்கிறீர்கள். பாருங்கள் . ஆவியினால் முழுவதும் நிறைதல் அவர் பேச முயல்கிறார். . உதாரணமாக நான். ”சகோதரன் ஜா - ஜா - ஜாக்... ஜா... சகரன் ஜாக்... சகோதரன் ஜா - ஜா - ஜாக் - ஜாக் - ஜாக்ஸன்“ என்று கூறுவதுபோல. பாருங்கள். அது போல, நீங்கள் பேச முயல்கிறீர்கள். ஆனால் உங்களால் பேச முடிவதில்லை. பாருங்கள், அது ஆவியினால் மிக அதிகமாக நிறைந்திருத்தல்! அது... 40சகோதரரே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவி எப்பொழுதாகிலும் உங்களை மிகவும் அதிகமாக அசைத்து, உங்களால் ஒன்றும் பேச முடியாமல் போய், சிறிது நேரம் நீங்கள் அமைதியாக இருந்து, நீங்கள் உட்கார்ந்து அழுகின்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? அவ்விதம் நீங்கள் செய்திருக்கிறீர்களா? நல்லது. அதுதான் பரிசுத்த ஆவி . நீங்கள் மாத்திரம்... ஜனங்கள் அநேக நேரங்களில் அந்நிய பாஷையில் பேசாததன் காரணம், தங்களை எவ்வாறு ஆவிக்கு சமர்ப்பிப்பது என்பதை அறியாததனால் தான். அது அவர்கள் மேலேயே உள்ள போது, அவர்கள் தொலைவிலுள்ள ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? ஆகையால் தான் அவர்களால் முடியாமல்..... சிலர் உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமே இல்லாத சில வார்த்தைகளைக் கூறுகின்றனர். அவர்களுக்குப் பரிசுத்த ஆவி கிடையாது. இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக கூறிக் கொள்கின்றனர். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்“. பாருங்கள்? 41இப்பொழுது, ஏதாகிலும் கேள்வி உண்டா? (சகோ. ஜூனியர் ஜாக்ஸன், “சகோ. பிரான்ஹாமே” என்கிறார் - ஆசி). ஆம், சகோதரனே. அந்த கேள்வி கேட்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் தவறான ஒன்றை ஏற்றுக் கொண்டு போதிப்பதாக ஒருவர் சந்தேகித்தார். நீங்கள் எந்தவிதமாக போதித்தீர்களோ அதே விதமாகவே நானும் போதிக்கிறேன்) நன்றி, சகோ. ஜாக்ஸன். “நான் எத்தனை முறை அந்நிய பாஷையில் பேசினாலும், வேதம் உரைப்பதற்கு என் வாழ்க்கை சாட்சி பகராவிட்டால், தெருவில் போகும் ஒரு நாயை விட நான் சிறந்தவன் அல்ல) அது உண்மை . (”நான் அபிஷேகம் பெற்று ஆறு மாதங்கள் வரைக்கும் அந்நிய பாஷையில் பேசவேயில்லை எனக்கும் கூட அப்படித்தான் நேர்ந்தது, சகோ. ஜாக்ஸன். 42என் கொட்டிலில் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டேன். ஏறக்குறைய ஒரு ஆண்டுகழித்து - அப்படி ஏதோ ஒன்று - நான் அந்நிய பாஷையில் பேசினேன். அதற்கும் ஓரிரண்டு ஆண்டு கழித்து, நான் ஒரு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் இப்படி மேடையின் மேல் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இளைஞனாயிருந்தேன், இப்பொழுது உள்ளதைப் போல் வயதாகியும் விரைப்பாயும் இல்லை. அப்பொழுது என்னால் சிறிது நன்றாக மேடையில் நடமாட முடியும். அக்காலத்தில் நான் பிரசங்கிக்கும் போது அதிக உணர்ச்சி வசப்படுவதுண்டு. அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், ஒரு மேசையின் மேல் குதித்தேன். அது ஒரு பாப்டிஸ்ட் சபை , மில்டவுன் பாப்டிஸ்ட் சபை . நான் மிகவும் பலமாக பிரசங்கித்துக் கொண்டே உட் பாதைக்கு சென்றேன். நான் பிரசங்கத்தை நிறுத்தினவுடனே, ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டது. நான் சில வார்த்தைகளை - நான்கு, ஐந்து, ஆறு வார்த்தைகளை - அந்நிய பாஷையில் பேசினேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்கு முன், களைப்படையும் தேசத்தில் கன்மலை, புயலடிக்கும் நேரத்தில் ஒதுங்குமிடம்“ என்று நான் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. பாருங்கள்? 43அதன் பிறகு ஒரு நாள் நான் ரயில் பாதையின் வழியாக, ஸ்காட்ஸ்பர்குக்கு இந்த பக்கமாக, ரோந்து வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. ஓ. என்னே, ரயில் பாதையின் மேல் பனிக் கட்டி படர்ந்திருந்தது. எனக்கு நியமிக்கப்பட்ட முப்பத்து மூன்றாயிரம் எண் நெடுஞ்சாலையில் நான் நடந்து செல்வதற்காக, நான் ரயில் பாதையைக் கடந்து மறுபுறம் சென்றேன். அறுபத்தாறு எண் கொண்ட நெடுஞ்சாலை மற்றொரு பக்கம் சென்றது. அது ஏறக்குறைய ரயில் பாதைக்கு இணையாக சென்றது. நான் பாதையின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சடுதியாக... நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் பாடுவது வழக்கம். நான் ஜெபிக்க செல்ல எனக்கு வெவ்வேறு இடங்கள் இருந்தன. நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்த போது. திடீரென்று நான் அந்நிய பாஷையில் பேசுவதை உணர்ந்தேன், பாருங்கள். நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவேயில்லை. அந்நிய பாஷையில் பேசுதல் எரியும் நிலயில் (combustion) வருவதால், அந்த நபருக்கு தான் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. அவர்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. பாஷைக்கு அர்த்தம் உரைத்தலும் அவ்விதமாகவே உள்ளது. அர்த்தம் உரைப்பவர்கள் தாங்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்திருக்கவே மாட்டார்கள். அதைக் குறித்து அவர்களுக்கு எந்த எண்ணமும் இருக்காது. ஏனெனில் அது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று. பாருங்கள். நீங்கள் மாம்சத்தை அதில் நுழைப்பீர்களானால், அது மாம்ச சம்பந்தமாகி விடுகிறது. ஆனால் ஏதோ ஒன்று உங்களைப் பற்றிக் கொண்டு, உங்களை ஆட்கொள்ளும் போது, உங்களை அறியாமலேயே அதை நீங்கள் செய்கிறீர்கள். பாருங்கள்? 44[சகோ. நெவில், “சகோ. பிரான்ஹாமே, இப்பொழுது நான் ஒன்றைக் கூறலாமா?” என்று கேட்கிறார் - ஆசி]. நிச்சயமாக, சகோ. நெவில், நீங்கள் கூறலாம். (“நீங்கள் இவ்விதமாகக் கூறுகிறீர்கள். ஒரு மனிதன் அந்நிய பாஷை பேசும்போது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனால், அது ஆராதனையில் ஒழுங்கு முறையாக இருக்க வேண்டுமே, நீங்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில்.... ஒரு வரத்தையுடைய மனிதன் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறான் அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். ஆம். உதாரணமாக... ('அந்நிய பாஷையில் பேசவிருக்கும் ஒருவன். அவன் பேசப்போகிறான் என்பதை அறிந்திருக்க வேண்டும் ) ஆம். அது உண்மை . (”இல்லையென்றால், அவன் ஒழுங்கை மீறினவனாயிருப்பான்“]. அது உண்மை . அவனுக்கு அந்த உணர்வு தோன்றுகிறது. பாருங்கள்? ”அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஒருவன் இருந்தால், அதற்கு அர்த்தம் உரைக்கிறவன் இல்லாமல் போனால், அவன் அமைதியாயிருக்கக் கடவன்“ என்று வேதம் உரைக்கிறது. 45உதாரணமாக, நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அல்லது யாராகிலும் ஒருவர். நீங்கள் கூச்சலிடவிருக்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடத் தொடங்கும்போது, தேவனுடைய வல்லமை உங்கள் மேல் வரும்வதை நீங்கள் எப்பொழுதாகிலும் உணர்ந்ததுண்டா? எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? நல்லது. நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். பாருங்கள்? நீங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், வல்லமை உங்கள் மேல் வருவதை உண்ருகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் அணைத்து போட வேண்டிய நேரங்கள் உண்டு. அதாவது அதை நீங்கள் அடக்கிக் கொள்ள முடியும். பாருங்கள். அந்நேரத்தில் பேசுவது தகாததாயிருக்கும். நீங்கள் நின்று கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அல்லது நகரத் தந்தையுடன் அல்லது ஒரு கூட்டம் ஜனங்களுடன் ஏதோ ஒன்றைக் குறித்து இத்தெருவில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் திடீரென்று மேலும் கீழும் குதித்து. “மகிமை. அல்லேலூயா!” என்று கூச்சலிட்டு, எல்லாவற்றையும் உதைத்தெறிந்து. தெருவில் மேலும் கீழும் ஓடத் தொடங்கினால், நீங்கள் பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறுவார்கள். பாருங்கள், அந்த மனிதன் பைத்தியக்காரன் என்பார்கள். பாருங்கள்? 46நல்லது. அவ்விதம் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களைத் தோண்டிக் கொண்டேயிருந்து, உங்களால் அடக்கிக் கொள்ளவே முடியாது என்னும் நிலை ஏற்பட்டாலும், நீங்கள் எப்படியும் அதை அடக்கிக் கொள்வீர்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் நீங்கள்; “ஆம். ஐயா. ஆம். ஐயா . உ - ஊ, ஊ - ஊ. ஆம், ஆம், ஐயா . உ - ஊ ” என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அந்த நேரத்தில் அது உங்களை துண்டு துண்டாக தோண்டியெடுத்துக் கொண்டிருக்கும். இருப்பினும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்பதை அறிந்திருப்பீர்கள். பாருங்கள்? அண்மையில் நீதிமன்றத்தில், சில பெந்தெகொஸ்தேயினரை, அவர்கள் ஏதோ ஒன்றைச் செய்ததற்காக - அதிகமாக கூச்சலிட்டார்கள் என்பதற்காக, அப்படி ஏதோ ஒன்றிற்காக - கொண்டு நிறுத்தினர். அவர்கள் செய்தது முற்றிலும் நியாயமானது. பாருங்கள். ஆனால் நீதிபதி அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கூற முயன்ற ஒவ்வொரு முறையும். அவர்கள் அந்நிய பாஷை யில் பேசத் தொடங்கினர். பாருங்கள்? நீதிபதிக்கு கோபம் மூண்டு. “இந்தப் பைத்தியக்கார ஜனங்களை இங்கிருந்து கொண்டு போய் விடுங்கள் என்று கூறிவிட்டார். பாருங்கள்? 47அவர்கள் பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் உண்டாயிருந்து, அவர்கள் நீதிபதியிடம், “கர்த்தர் உரைக்கிறதாவது. இன்னின்ன காரியம் நடந்தது என்று உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றைக் கூறியிருந்தால்! ”கர்த்தர் உரைக்கிறதாவது, நேற்றிரவு நீர் ஒரு வேசியுடன் வாழ்ந்தீர். அவள் பெயர் சாலி ஜோன்ஸ். அவள் இன்னின்ன தெருவில் 44ம் எண் வீட்டில் வசிக்கிறாள். அப்படியிருக்க, நீர் எப்படி என்னை நியாயந்தீர்க்கலாம்? அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதை நீர் மறுதலிப்பீரானால், இங்கேயே விழுந்து சாவீர்“, ஓ, சகோதரனே! அப்பொழுது அங்கு வித்தியாசமான ஒன்று நடந்திருக்கும். ஆனால் நீங்கள் அங்கு நின்று கொண்டு அந்நிய பாஷை மட்டும் பேசுவீர்களானால், “நீங்கள் அவர்களுக்கு மூடர்களாயிருப்பீர்கள்” என்று பவுல் கூறினான். பாருங்கள்? நீங்கள் எப்பொழுது அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுது கடைபிடிக்காமலிருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது. அது... பாருங்கள், நான்... இப்பொழுது புரிந்து கொண்டீர்களா, நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். பாருங்கள்? நிச்சயமாக 48அந்த கேள்வி இங்கே கீழே வருகிறது. அதை நான் கூறாமல் பிடித்து வைத்திருந்த காரணம், அதே கேள்வி நமக்குள்ளது. “அவர்கள் அமைதியாயிருக்க வேண்டுமென்று கருதப்படுகின்றனரா?” பாருங்கள்? அதற்காகத் தான் நீங்கள் கேட்கும் வரைக்கும் அதற்கு பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இப்பொழுதே, பாருங்கள், இப்பொழுதே. கீழேயுள்ள இந்தக் கேள்வியையும் நாம் பார்க்கலாம், அப்பொழுது ஏற்கனவே கூறினவைகளை நாம் குறிப்பிடலாம். எல்லோரும் அந்தக் கேள்விக்கான பதிலை நன்றாக புரிந்து கொண்டீர்களா? (சகோ. ஃபிரட், “சகோ. பிரான்ஹாமே” என்று அழைக்கிறார் - ஆசி). ஆம், சகோ. ஃபிரட். (ஆவியில் பேசும் ஒருவர் (அவர் ஆங்கிலேயன் என்றும் அவர் ஆங்கிலம் பேசுகிறவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவர் ஆங்கிலத்தில் பேசும்படி ஆவியானவர் அவருக்குத் தந்தருளுவாரா?) நிச்சயமாக. ஆம், ஐயா. பாருங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் எல்லா பாஷைகளிலும் பேசக் கூடும்.பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில், வானத்தின் கீழ் காணப்படும் எல்லா பாஷைகளையும் பேசினவர்கள் அங்கு கூடியிருந்தனர், பாருங்கள். ஆங்கிலத்தில் பேசுவது... இப்பொழுது. சகோ. ஃப்ரட்டி, இதை நான் எப்பொழுதும் அறிந்திருக்கிறேன், அதாவது நான்... நான் அபிஷேகத்தின் கீழ் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கத்தால், அது ஆவியானவர் பேசும்படி தந்தருளுவதே, பாருங்கள். அது ஆங்கிலம் தெரியாதவனுக்கு அந்நிய பாஷையாயிருக்கும். இருப்பினும்... 49அந்நிய பாஷை என்பது (ஆங்கிலத்தில்; “unknown tongue” தெரிந்திராத பாஷை - தமிழாக்கியோன்) உண்மையில் அந்நிய பாஷை அல்ல. அது... அங்கு யாராகிலும் இருப்பார்கள்... பெந்தெகொஸ்தேநாளில் அங்கு கூடியிருந்தவர்கள், அந்த பாவிகள் அனைவரும், “இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்றனர் (அப். 2:7-8). அங்கு “அந்நிய பாஷை என்பது இருக்கவேயில்லை. பாருங்கள், அது வேதப்பூர்வமானது அல்ல. பாருங்கள்? அங்கு அந்நியமாக.... அது அந்நிய பாஷை அல்ல, அது ஒரு பாஷை. ”நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? அங்கு தெரிந்திராத பாஷை ஒன்றுமே இல்லை. பாருங்கள்? இதை நாம் விட்டுச் செல்லும் முன்பு, இதன் பேரில் ஏதாகிலும் கேள்வி இப்பொழுது இருக்கின்றதா? “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே”. பாருங்கள்? 50ஒரு சகோதரன், “மானிட பலவீனத்தின் காரணமாக ஒரு சிறு தவறு நேரிடுகிறது. ஜனங்கள். வேறெதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து, அதை அப். 2:4ன்படி தவிர, வேறெந்த விதத்திலும் விசுவாசிக்க மாட்டேன்' என்கின்றனர்' என்கிறார் - ஆசி) நல்லது. அவர்கள் தெரிந்திராத பாஷையில் நிச்சயம் பேசமாட்டார்கள் (”இல்லை, தெரிந்த ஒரு பாஷையில்). உ-ஊ . ஜனங்கள் நீங்கள் கூறுவதை கேட்கக் கூடிய பாஷையில் அவர்கள் பேச வேண்டும். பாருங்கள். ஏனெனில் “தங்கள் தங்கள் பாஷையில் அவர்கள் பேசுகிறதைக் கேட்டார்கள்” (அப். 2:6). இப்பொழுது, நான் இந்த இடத்திலே - பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேனானால்.... நான் சொல்வேன்....இங்குள்ள ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற அதை நாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன், அது சகோ. உட். அது சரிதானே, சகோ. உட்? உங்கள் பெயரை அறிவிக்க நான் நினைக்கவில்லை... என்னவிருந்தாலும் இங்குள்ள நாம் சகோதரரர்கள், இதை நாம் கூற விரும்புகிறோம். அவர் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது , சகோ. பாங்க்ஸ் அதை சரியான விதத்தில், வேதத்தின்படி பெற்றுக் கொள்வாரானால், அவர் எழுந்து நின்று ஆங்கிலத்தில் பேசுவார். அவர், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எழும்பினார்” என்று சொல்லுவார். அவர், “அவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் இப்பொழுது என் இருதயத்தில் வந்தார், அவர் தேவனுடைய குமாரன் ! என்னுடைய பாவங்கள் போய் விட்டன, எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது' என்னும் அனலுரைக்கும் தீர்க்கதரிசனமாக அதை கூறுகிறார். பாருங்கள்? பார்த்தீர்களா? அது பாஷை பேசுதல்.... “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 51இப்பொழுது இந்தியானாவிலுள்ள நாமும் கென்டக்கி நாட்டிலுள்ளவர்களும் வெவ்வேறு பாஷைகளைப் பேசுகிறோம். என்றும் சகோ. பாங்க்ஸ் கென்டக்கியைச் சேர்ந்தவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவரால் இந்தியானா பாஷையை பேச முடியாது. அவர் எழுந்து இந்தியானா பாஷையில் பேசுவாரானால் - அவருக்கு அந்த பாஷை தெரியாது என்பது தெரியும். பாருங்கள்? அவர் இந்தியானா பாஷையில் பேசுவதை நாம் கேட்கிறோம். அவர் கென்டக்கி பாஷையில் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார். அல்லேலூயா!” என்று கென்டக்கி பாஷையில் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாமோ அவர் கூறுவதை இந்தியானா பாஷையில் கேட்கிறோம். பெந்தெகொஸ்தே நாளில் அவ்விதமாகத்தான் இருந்தது. பாருங்கள்? “இவர்கள் எல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? ”இவர் கென்டக்கியை சேர்ந்தவர் அல்லவா? அப்படியிருக்க, இந்தியானா, ஒஹையோ, இல்லினாய், மெய்ன் .மசாசூசட்ஸ், கலிபோர்னியா நாட்டைச்சேர்ந்தவர்களாகிய நாம் நம்முடைய ஜென்ம பாஷைகளில் அவர் பேசுவதைக் கேட்கிறோமே, இதெப்படி? கருத்து புரிகிறதா? பாருங்கள், அது ஆவியின் ஏவுதல். பாருங்கள், அவர்கள் ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு அதை கேட்கின்றனர், 52பாருங்கள், அங்கு அளிக்கப்பட்ட செய்தி என்னவெனில், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த சாட்சியே. பாருங்கள். அது உண்மை . தேவன் உங்களில் வாசம் செய்யாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் அதைக் குறித்து சாட்சி சொன்னாலும், நீங்கள் இதை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. பாருங்கள்? அது உண்மை . நீங்கள் எவ்வளவு நன்றாக இப்பொழுது வேறு கேள்வி உண்டா? (சகோ. ராய் ராபர்ஃன், “நல்லது, சகோ. பிரான்ஹாமே, அதை நாம், அந்த ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த பெண்ணின் விஷயத்தில், ஜெப வரிசையில் கண்டோம் என்று எண்ணுகிறேன்” என்கிறார் - ஆசி) ஆம். மிகவும் நல்லது, சகோ. ராய். அங்குதான் நான் இப்பொழுது செல்லப் போகிறேன் - போமாண்டுக்கு. அது போமாண்ட் தானே? ஆம், ஐயா. அங்கு ஜெபவரிசை நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் மேடையின் மேல் வந்தாள். வெளிப்படையாகக் கூறினால், நான் வெளியே போகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். இல்லையா? ஹாவர்ட் என்னை வெளியே கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஸ்பானிய சிறுமி - அவளுக்கு பதினைந்து பதினாறு வயதிருக்கும் - அழுவதைக் கேட்டேன். நான் பார்த்த போது, நான் தொடர்ந்து சென்றிருந்தால், ஜெபவரிசையில் அடுத்தபடியாக அவளுக்கு ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கு அவள் ஜெப அட்டையை வைத்திருந்தாள். வரிசையில் நிறைய பேர் இருந்தனர், ஆனால் அவளுடையது தான் அடுத்த ஜெப அட்டை. நான், அவளைக் கொண்டு வாருங்கள்“ என்றேன். அவர்கள் அவளை மேடையின் மேல் கொண்டு வந்தனர். நான் வேறொரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ”அவளை மேலே கொண்டு வாருங்கள்' என்றேன். நான் அவளிடம் இப்படி ஏதோ ஒன்றைக் கூறினேன்: “நீ விசுவாசிப்பாயா? உனக்குள்ள கோளாறு என்னவென்று உன்னிடம் கூறுவதற்கு இயேசு எனக்கு உதவி செய்வாரானால், அவர்உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிப்பாயா?” என்று. அவள் தலை குனிந்து கொண்டிருந்தாள். அவள் செவிடு ஊமை என்று எண்ணினேன். பாருங்கள்? 53நான் மறுபடியும் அவளைப் பார்த்தபோது, “அவளுக்கு ஆங்கிலம் தெரியாது” என்று சொன்னேன். எனவே அவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை அங்கு கொண்டு வந்தனர். “அதை நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன். அவள் ஆம் என்று சைகை காட்டினாள். நான் கூறினதை அவளால் மொழிபெயர்ப்பாளரின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. பாருங்கள்? 126: நல்லது, நான் சொன்னேன். நான் பார்த்த போது, எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. நான், “ஒரு பழைய காலத்து அடுப்பைக் காண்கிறேன், அதன் மேல் ஒரு கிண்டி உள்ளது. அது மஞ்சள் சோளக்கதிரினால் நிறைந்துள்ளது . சகோ. ராய், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ”நீ சோளத்தை அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டாய். அப்பொழுது நீ மிகவும் வியாதிப்பட்டாய், உன் தாய் உன்னைக் கட்டிலில் படுக்க வைத்தாள். அப்பொழுது உனக்கு வலிப்பு வரத் தொடங்கினது. அன்று முதல் உனக்கு அந்த வலிப்பு இருந்து வருகிறது“ என்றேன். அவள் திரும்பி மொழிபெயர்ப்பாளரை நோக்கி, “அவருக்கு ஸ்பானிஷ்பாஷைபேசத் தெரியாது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றாள். மொழிபெயர்ப்பாளர் என்னை நோக்கி, “நீங்கள் ஸ்பானிஷ் பாஷையில் பேசவில்லை, இல்லையா?” என்றார். நான், “இல்லை” என்றேன். நாங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டதை போட்டுக் கேட்டோம். அது முற்றிலும் ஆங்கிலத்தில் இருந்தது. 54அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் அந்த பெண்ணை நோக்கி, “அப்படியானால் அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். பாருங்கள், அவளுக்கு சரியான அர்த்தம் கிடைத்ததா என்று அவர் பார்க்க வேண்டும். “அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். அவள் நான் சொன்ன வார்த்தைகளை அப்படியே அவரிடம் ஸ்பானிஷ் பாஷையில் எடுத்துக் கூறினாள். நான் ஆங்கிலத்தில் பேசினதை அவள் தன்னுடைய ஜென்ம பாஷையில் - ஸ்பானிஷ் பாஷையில் - கேட்டாள். “நாம் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக். கேட்கிறோமே, இதெப்படி? அந்த பெண் சுகமடைந்தாள். பாருங்கள், அதுதான், அது தேவனுடைய அற்புதமான கிரியை. ஒரு சகோதரன், “அப்படியானால், பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள அந்த பாண்டம் ஒரு பாண்டமாக மட்டுமே இருக்கும், அதை நிரப்புகிற ஒருவர் அதை எதை கொண்டும் ... என்று கேட்கிறார் - ஆசி). அவருடைய விருப்பத்திற்கேற்ப எதைக் கொண்டும். அது முற்றிலும் உண்மை. அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள், அப்பொழுது உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வீர்கள், பாருங்கள்? அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அந்த பாண்டம் அசுத்தத்தினால் நிறைந்திருந்தால், அது தேவனுடைய பாண்டம் அல்ல. அது சுத்தத்தினால் நிறைந்திருந்தால், அது தேவனுடைய பாண்டம். நான் கூறுவது விளங்குகிறதா? (அந்த சகோதரன், “சில நேரங்களில் அந்த பாண்டம் உபயோகிக்கப்பட்டு, அது அறியப்படாமலே இருக்க வகையுண்டு” என்கிறார் - ஆசி). ஓ, நிச்சயமாக. (அந்த சகோதரன் ஒரு சாட்சி கூறுகிறார் - ஆசி). உ-ஊ, உ-ஊள. அது முற்றிலும் உண்மை . நிச்சயமாக. ஓ, நாம் எல்லாருமே அதைக் கண்டிருக்கிறோம், அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. ஆம், ஐயா . நாம் எல்லாருமே ... இவை யாவும் நமக்குத் தெரிந்த விஷயமே. 55அது நான்காம் கேள்வி என்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அவர்கெளல்லாரிலும் அதிகமான பாஷைகளைப் பேசினதாக பவுல் கூறியிருப்பதைக் காண்கிறேன். இப்பொழுத, நான் நினைப்பது என்னவென்றால், இந்த சகோதரனின் கேள்விக்கு பதிலளித்து முடிக்க : அவர்களெல்லாரிலும் அதிகமாக பவுல் பாஷைகளைப் பேசுதல். பவுல் அறிவுள்ள ஒருவன், அவனுக்கு அநேக மனுஷகள் தெரிந்திருந்தது. பாருங்கள், அவனால்... அவன் நியாய விசாரணைக்குச் சென்றிருந்தபோது, அவன் இந்த பாஷையை, அந்த பாஷையை பேசினான். அது மற்றவர்களுக்கு அந்நிய பாஷையாக இருந்தது. அது ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு பேசப்பட்ட பாஷையல்ல. அவை வழக்கமாக பேசப்படும் மொழிகள். ஆனால்... மற்றும் ...... 56தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆவியின் நிறைவைப் பெற்றுள்ள எந்த ஒரு நபரும் விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசும் அனுபவத்தைப் பெற்றிருப்பார் என்பது என் கருத்து. ஏனெனில் பவுல் விவரித்துள்ளபடி அது தான் வரங்களில் மிகவும் தாழ்ந்த, மிகவும் குறைந்தவரம். நீங்கள் வரங்களை வரிசைப்படுத்தினால், வரங்களின் வரிசையில் பாஷைகளைப் பேசும் வரமே கடைசியான வரம் (1 கொரி. 12:28). இப்பொழுது, முதலாவதாக, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் வரங்களாக இருக்கிறீர்கள் என்றும், நான் வெளியே இருக்கிறேன் என்றும் வைத்துக் கொள்வோம். இப்பொழுது, “ஒரே வாசலினாலே, ஒரே ஆவியினாலே”. ஒரே வாசலின் வழியாக இந்த அறைக்குள் நுழைகிறேன். அது சரியா? நான் அந்த வழியாக வர முடியாது, இந்த வழியாக வரமுடியாது. பின்னால் உள்ள அந்த வழியாக வரமுடியாது. பாருங்கள்? நான் எப்படி இங்கே வருகிறேன்? சகோ. ராபர்ஸன் வழியாகவா? இல்லை, ஐயா . சகோ. லியோவின் வழியாகவா? அவர் அந்நிய பாஷை பேசும் வரம் என்று வைத்துக் கொள்வோம், பாருங்கள், நான் சகோ. லியோவின் வழியாகவா இதற்குள் வருகிறேன்? இல்லை, ஐயா. உ-ஊ . அப்படியானால், நான் எவ்வாறு உள்ளே வருகிறேன்? “ஒரே வசலினாலே, ஒரே ஆவியினாலே'. ஆவி என்பது எல்லாமே பாஷைகள் அல்ல. ஒ , இல்லை. ஹ! பாருங்கள்? பாருங்கள், ”ஒரே ஆவியினாலே இந்த சரீரத்திற்குள் நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன்“. 57இப்பொழுது, இது ஆவி, நீங்கள் எல்லோரும் வரங்கள். நீங்கள், “நல்லது. தேவனே ஸ்தோத்தரியுங்கள்” என்கிறீர்கள். நான் அங்கு செல்கிறேன், அங்கு சகோ. உட் இருக்கிறார், 'அவர் அற்புதங்கள் என்னும் வரம் என்று வைத்துக் கொள்வோம்.பாருங்கள்? “ஓ, நான் ஒரு அற்புதத்தை செய்தேன். நான் அற்புதத்தை செய்ததனால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று அறிந்திருக்கிறேன். ஒரு ”அற்புதத்தினாலே “ நாம் எல்லாரும் அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. நான் பிறகு சகோ. ஜூனியிடம் செல்கிறேன், அவர் அறிவு என்னும் வரம் என்று வைத்துக் கொள்வோம். “நல்லது. நல்லது, எனக்கு வேதாகம அறிவு உள்ளது. ஆகையால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று எனக்குத் தெரியும்”. இல்லை, நாம் பிரவேசிக்கும் வழி அதுவல்ல. சரி, சகோ. லியோவினாலும் அல்ல, சகோ. உட்டினாலும் அல்ல, சகோ. ஜூனியினாலும் அல்ல. பாருங்கள்? அல்ல. ஆனாலே ஒரே எதனாலே? (சபையோர்“ஆவியினாலே” என்கின்றனர் - ஆசி). இந்த சரீரத்திற்குள்ளாக நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன். இப்பொழுது நான் அதற்குள் இருக்கிறேன், இப்பொழுது பிதா என்னை எங்கே உபயோகிக்கப்போகிறார்? பாருங்கள்? ஒருவேளை லியோ (அந்நிய பாஷை பேசும் வரம் - தமிழாக்கியோன்) வாசலின் அருகே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடும். அந்நிய பாஷை பேசுதல் ஒரு வேளை முதலாவது காரியமாக இருக்கக் கூடும், அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம். நான் ஆவியை அதிகமாக பெற்றிருக்கக் கூடும், அப்பொழுது தேவன் மற்றெல்லாவற்றையும் கடந்து சென்று சகோ. உட்டை (அற்புதங்களைச் செய்யும் வரம் - தமிழாக்கியோன்) அடைய முடியும். எனக்கு பரிசுத்த ஆவி இல்லையென்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனெனில் ஞானஸ்நானத்தின் மூலமாக நான் இந்த சரீரத்திற்குள் இருக்கிறேன். நான், “நல்லது. தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக, இப்பொழுது நான் உட்கார்ந்து கொண்டு இளைப்பாறுவேன், நான் பரலோகத்திற்கு செல்வேன்” என்று சொல்வதற்காக தேவன் என்னை இங்கு கொண்டு வரவில்லை. ஹ! நான் கூறுவது விளங்குகிறதா? ஆனால் இங்கிருந்து அங்கு செல்ல முடியும். நான் கூறுவது புரிகிறதா? நான் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியும், அல்லது நடுபாகத்திற்கு செல்ல முடியும், எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் ஏதோ ஒன்று நடக்கும், ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும். அது என்ன? ஆவியின் ஞானஸ்நானம் நான் அந்த சரீரத்தில் இருக்கிறேன் என்பதைக் காண்பிக்கிறது. “ஒரே ஆவியினாலே”. சகோதரனே. இதை கிரகித்துக் கொண்டீர்களா? சரி! அது தானே நீங்கள் கேட்டது? சரி. 58அந்நிய பாஷைகளும் தீர்க்கதரிசனங்களும் ஆராதனையின்போது எந்த வரிசைக் கிரமத்தில் உபயோகிக்கப்பட வேண்டும் ... (ஆராதனையின்போது அவை உபயோகிக் கப்படவே கூடாது. பாருங்கள்?) தேவனை மகிமைப்படுத்த... (கூடவே கூடாது!). சபை பக்தி விருத்தியடையச் செய்ய? ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், தீர்க்கதரிசியினுடைய ஆவி... (இல்லை, என்னை மன்னிக்கவும். அது வேதாகமம், நான் “ஜனங்கள்” என்று சொல்லவிட்டேன், இல்லை). தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது“ என்று வேதாகமம் உரைக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆவியில் அந்நிய பாஷை பேசுதலும் தீர்க்கதரிசனம் உரைத்தலும் சபையை பக்திவிருத்தியடையச் செய்வதற்காகவே, ஆனால் அதற்குரிய சேவை ஒன்றுண்டு. பாருங்கள்? சபையில் தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருக்கும்போது... அது தொந்தரவு செய்யக் கூடாது. பாருங்கள்? அது கூட்டத்தை ஒருக்காலும் தடங்கல் செய்யக் கூடாது. இப்பொழுது, பாருங்கள், “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள்”. நமக்கு இப்பொழுது வேறொரு கேள்வி உண்டு, ஒரு நிமிடம் அதற்கு செல்வோம். பாருங்கள், இந்த வரங்கள் இயங்குவதற்கு... சரியான வழி என்னவெனில்.... இது அநேக வரங்களுக்கான பதில், பாருங்கள். நாம் அந்த கேள்விகளுக்கு வரும்போது, நாம் முதலாம் கேள்விக்கு அந்த பதில் உரைத்தோம், இந்த நபர் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் உரைத்தோம் எனலாம். பாருங்கள்? இது. ஐந்தாம் கேள்வி : . தேவனை மகிமைப்படுத்த ஆராதனைகளின் போது அந்நிய பாஷைகள் பேசுதலையும் தீர்க்கதரிசனம் உரைத்தலையும் உபயோகிக்கலாமா? பாருங்கள், இப்பொழுது, போதகர்... போதகர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, சபையானது ஒழுங்குக்குள் இருக்குமானால், சரியான முறை... நான், 'சபையை ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள்' என்று உங்களிடம் கூறினது உங்களில் அநேகருக்கு தெரியும். இந்த வரங்கள் ... கர்த்தருக்கு சித்தமானால், இதை தான் நாம் இந்த கூடாரத்தில் செய்யவிருக்கிறோம். நான் கவனித்து வருகிறேன். சகோ. நெவிலையும் மற்ற சகோதரரையும்ஒழுங்குக்குள் கொண்டு வந்து விட்ட பிறகு, நான் ஏதோ ஒன்றைக் காண்கிறேன். இப்பொழுது நீங்கள்... சகோதரராகிய உங்களில் அநேகர் வாலிப சகோதரராயிருக்கிறீர்கள். 59நான் உங்கள் எல்லாரையும் விட இந்த விதத்தில், அனுபவத்தில் மூத்தவன். இந்த ஊழியத்தில் நான் முப்பத்தோரு ஆண்டுகளாக இருக்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லை இங்கு நான் நட்டேன். சந்திக்க வேண்டிய எல்லாவற்றையும் நான் சந்திக்க வேண்டியதாயிற்று. நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் அதை அறிந்திருப்பது மாத்திரமல்ல, அதை நீங்கள் எடுத்துக் கூறும்போது, தேவன் அதை ஆதரிக்க வேண்டும். இதை நீங்கள் மிகவும் வெற்றிகரமாக செய்யக்கூடிய வழி என்னவெனில், நீங்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யலாம். அதை தான் அவர்கள் அங்கு 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் செய்தார்கள் என்று நினைக்கிறேன்: “அங்கே உட்கார்ந்திருக்க ஒருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், மற்றவன் பேசாமலிருக்கக்கடவன்”. (1 கொரி. 14:30). அது “வரங்களுக்கான சிறப்புக் கூட்டம்” என்று எண்ணுகிறேன். அவர்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை வைப்பார்களானால், அது சரியாயிருக்கும். வரங்களைப் பெற்றுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி, அதன் பிறகு சபைக்கு ஆராதனைக்காக வருவார்களானால் அது அருமையாயிருக்கும். அந்த கூட்டத்தை அவர்கள் வைக்கட்டும். அங்கு பிரசங்கம் எதுவும் இருக்காது. அது ஆவியின் வரங்களுக்காக மட்டுமே. 60அது வெளியாட்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் அல்ல. அவர்கள் உள்ளே வந்து, உட்கார்ந்து கொண்டு, சொல்லுவார்கள். ஒருவர் எழுந்து நின்று, “ஹா ஹா” என்று அந்நிய பாஷை பேசி, வேறொருவர் “ஹா - ஹா” என்பாரானால், உள்ளே வந்த இவர்கள், “என்ன நடந்து கொண்டிருக்கிறது? பாடல்கள் எங்கே? மற்றவை எங்கே?” என்று கேட்கக் கூடும். பாருங்கள்? இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிறவர்களில் அநேகர் (அதற்கு அர்த்தம் உரைப்பவர்கள் போன்றவர்) சுவிசேஷத்தில் குழந்தைகளாயுள்ளனர். பாருங்கள்? அவர்களை மனம் நோக வைக்க வேண்டாம், அவர்கள் வளரட்டும்... அந்த வரத்தில் சிலவற்றில், சாத்தான் உள்ளே பின்னிக் கொள்வதை நீங்கள்காணலாம். அனுபவம் பெற்றுள்ள நாம் அதை கண்டு கொள்ளலாம். பாருங்கள், அதை நாம் புரிந்து கொள்ளலாம், நீங்கள் அதை கவனிக்க வேண்டும். அண்மையில் ஒரு குறிப்பிட்ட போதகர், இங்கு தற்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவர், என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்று, என்னிடம் இதைக் கூறினார், அவர் மிகவும் விலையேறப்பெற்ற ஒரு சகோதரர். 61அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதனால் இதை நான் கூறவில்லை, நீங்கள் எல்லோருமே விலையேறப்பெற்ற சகோதரர்கள். அவ்விதம் நான் எண்ணாமல் போனால், உங்களிடம் நேரடியாக, “முதலில் நீங்களும் நானும் நமக்கிடையே இந்த காரியத்தை நேராக்கிக் கொள்வோம்” என்று கூறியிருப்பேன். பாருங்கள்? அது உண்மை . பாருங்கள்? உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் இதை, வேதத்தின்பால் உங்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மையுடன் கேட்டு, உதவி செய்யும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். பாருங்கள்? இந்த சகோதரன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ... அங்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ இருந்தாள், அவள் தவறாயிருந்தாள், இந்த... அந்த ஸ்திரீயை நான் அதற்கு முன்பு கண்டதில்லை, ஆனால் அவள் பேசினதை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன் - அந்நிய பாஷைகளுக்கு அவள் அர்த்தம் உரைப்பதும், ஏதோ ஒன்றைக் கூறுவதும். அதை கேட்கும்போது. அது என்னவென்று நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம். 62அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதனால் இதை நான் கூறவில்லை, நீங்கள் எல்லோருமே விலையேறப்பெற்ற சகோதரர்கள். அவ்விதம் நான் எண்ணாமல் போனால், உங்களிடம் நேரடியாக, “முதலில் நீங்களும் நானும் நமக்கிடையே இந்த காரியத்தை நேராக்கிக் கொள்வோம்” என்று கூறியிருப்பேன். பாருங்கள்? அது உண்மை . பாருங்கள்? உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் இதை, வேதத்தின்பால் உங்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மையுடன் கேட்டு, உதவி செய்யும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். பாருங்கள்? இந்த சகோதரன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ... அங்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ இருந்தாள், அவள் தவறாயிருந்தாள், இந்த... அந்த ஸ்திரீயை நான் அதற்கு முன்பு கண்டதில்லை, ஆனால் அவள் பேசினதை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன் - அந்நிய பாஷைகளுக்கு அவள் அர்த்தம் உரைப்பதும், ஏதோ ஒன்றைக் கூறுவதும். அதை கேட்கும்போது. அது என்னவென்று நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம். 63வேதம் கூறாத ஒன்றையும் நான் போதிக்கவோ அல்லது கூறவோ மாட்டேன். ஏதாவது ஒரு சகோதரன், ஒரு கிறிஸ்தவ சகோதரன், தவறான ஒன்றை நான் போதிப்பதைக் காண்பாரானால், ஆராதனை முடிந்த பின்பு அவர் என்னை ஒரு புறம் அழைத்துச் சென்று. “சகோதரனே, உமது அறைக்கு வந்து உம்மிடம் பேச விரும்புகிறேன், நீங்கள் ஒரு விஷயத்தில் தவறாயிருக்கிறீர்கள் என்று கூறுவாரானால், அதை நான் மெச்சுவேன். பாருங்கள், நான் நிச்சயம் அந்த சகோதரனின் செயலை பாராட்டுவேன். ஏனெனில் நான் சரியாயிருக்க விரும்புகிறேன். அது எனக்குத் தேவை. இப்பொழுது, நாம் எல்லோருமே சரியாயிருக்க விரும்புகிறோம், ஆகையால் தான் இந்த காரியங்களை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை வேதத்திலிருந்து வரவேண்டும். பாருங்கள், வேதவசனங்களை ஒன்றாக இணைக்க. 64இப்பொழுது, அந்நிய பாஷை பேசுதல் எவ்விதம் இருக்க வேண்டுமென்றால்... சிறிது காலம் கழிந்து... இப்பொழுது சிறிது காலத்துக்கு அது அவ்விதமே சென்று கொண்டிருப்பதற்கு விட்டு விடுங்கள். பாருங்கள், அது அவ்விதமே சென்று கொண்டிருக்க, அவ்விதமே இருக்க விட்டு விடும்படி ' உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். ஊழியக்காரராகிய உங்களுக்கு, மேய்ப்பர்களாகிய உங்களுக்கு நான் கூறுவது என்னவெனில், இந்த குழந்தைகள் சற்று பெரியவர்களாக வளரும் வரைக்கும். அது அப்படியே சென்று கொண்டிருக்கும்படிக்கு விட்டு விடுங்கள். ஒருக்கால், விரைவிலோஅல்லது காலந்தாழ்ந்தோ , சத்துரு அந்த நபரை வஞ்சிக்க முயல்வான் என்றால், அது அம்பலமாகி விடும். அதைக் குறித்து நமக்கு நிச்சயமாகத் தெரியாது. இப்பொழுது. இதற்குப் பிறகு, இதைத் தொடங்குவதற்கு முன்பு, அது என்னவென்று கண்டுபிடிக்க, ஞானத்தின் ஆவியுள்ள சிலரை, ஆவிகளை பகுத்தறியும் ஆவியுள்ளவர்களை கொண்டு வாருங்கள். முதலாவதாக, ஒரு சிறு தவறு உள்ளதாக யாராகிலும் ஒருவர் கவனிக்கத் தொடங்கினால், அதுதான் பகுத்தறிதல். அதை சிறிது காலம் வளர்த்து வாருங்கள். பாருங்கள்? அந்த பகுத்தறிதல் தவறாகின்றது என்பதை நீங்கள் கண்டால், அதை திருத்துங்கள். அந்த காரியம். அது தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்குமானால், அது வார்த்தையின் அடிப்படையில் திருத்துதலை ஏற்றுக் கொள்ளும். பாருங்கள்? 65இதை உதாரணமாகக் கூறுகிறேன். நாம் அந்நிய பாஷையில் பேசினோம் என்று வைத்துக் கொள்வோம் - யாரோ ஒருவர். நாம். இங்குள்ளவர்கள் வரங்களைப் பெற்றுள்ள ஒரு கூட்டம் மனிதர் என்று வைத்துக் கொள்வோம். லியோ எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார்; அதற்கு இங்குள்ள வேறொரு சகோதரன் - வில்லர்ட் - அர்த்தம் உரைக்கிறார். நல்லது , சகோ. நெவில், சகோ. ஜூனி, சகோ. வில்லர்ட் காலின்ஸ் பகுத்தறிபவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, லியோ அந்நிய பாஷையில் பேசினதால்.... இங்கு நாம் பரிசுத்தவான்களின் ஒரு சிறு கூட்டத்தை - வரங்கள் கூட்டத்தை - ஒழுங்கு செய்திருக்கிறோம். லியோ அந்நிய பாஷையில் பேசினார். அதற்கு வில்லர்ட் அர்த்தம் உரைத்து, கர்த்தர் உரைக்கிறதாவது, புதன் இரவன்று இங்கு ஒரு ஸ்திரீ வருவாள், அவள் மிகவும் மூர்க்கத்தனமுள்ளவளாய் இருப்பாள். அவளைக் கடிந்து கொள்ள வேண்டாமென்று சகோ. பிரான்ஹாமிடம் சொல் ஏனெனில் அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. அவளை அந்த மூலைக்கு அழைத்துச் செல்லும்படி சொல். ஏனெனில் அந்த மூலையில் தான் அவள் ஒரு பொல்லாத காரியத்தை செய்தாள். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்தது என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? அது மிகவும் நன்றாகத்தான் ஒலிக்கிறது. இல்லையா? பாருங்கள்? சரி. 66இப்பொழுது முதலாவதாக, என்ன தெரியுமா, பழைய ஏற்பாட்டின் காலத்தில், தீர்க்கதரிசி அல்லது வேறு யாராகிலும்என்ன உரைத்தாலும், அது முதலில் ஊரீம் தும்மினால் பரிசோதிக்கப்பட்டது. பாருங்கள், அது வார்த்தைக்குச் சென்றது. ஊரிம் தும்மீமின் ஒளிகள் பிரகாசிக்கவில்லையென்றால், அதை அப்படியே விட்டு விடுவார்கள். பாருங்கள்? முதலாவதாக நாம் செய்ய வேண்டியது என்னவெனில், அதை வார்த்தைக்குக் கொண்டு செல்வதே. இப்பொழுது, இந்த மனிதன் அந்நிய பாஷையில் பேசினார், அது நன்றாக ஒலித்தது. இந்த மனிதன் அதற்கு அர்த்தம் உரைத்தார், அதுவும் நன்றாக ஒலித்தது. ஆனால் வார்த்தை கூறுவது என்னவெனில், “அது இரண்டு அல்லது மூன்று நியாயாதிபதிகளால் முதலில் தீர்ப்பு கூறப்படட்டும்” என்று. அதை ஊரிம் தும்மீமுக்கு கொண்டு செல்லுங்கள். இப்பொழுது, முதலாவதாக, வில்லர்ட் காலின்ஸ், “அது தேவனால் உண்டானது என்கிறார். ஜூனியும் ”அது தேவனால் உண்டானது என்கிறார் - மூன்றில் இரண்டு பேர். அது ஒரு தாளில் எழுதப்பட்டு, இந்த சபையில் அறிவிக்கப்படுகிறது. அது நடக்கும் முன்பு அதை படிக்கக் கேட்கும் மக்கள், அது நடப்பதைக் காணும்போது, “சகோதரனே, அது தேவன் ! பாருங்கள், அது தேவன்” என்பார்கள். ஆனால் அது நடக்காமல் போனால், என்ன நடக்கிறது? பாருங்கள்? (நாம் இப்பொழுது மற்ற கேள்விக்குச் செல்லப் போகிறோம், அதை நான் இங்கேயே கூறிவிடலாம். “தீர்க்கதரிசனம் அனைத்துமே ... அர்த்தம் உரைத்தல் அனைத்தும் செய்திகளும் தீர்க்கதரிசனமாகுமா?) இப்பொழுது, ஒரு நிமிடம். அது நடக்காமல் போனால் என்ன? அப்படியானால், லியோ தவறான ஆவியில் அந்நிய பாஷை பேசினார். மற்றவர் தவறாக அர்த்தம் உரைத்தார்; நீங்கள் தவறாக அது சரியென்று நியாயந்தீர்த்தீர்கள். அதை உங்களிடமிருந்து விலக்கி விடுங்கள். அது உங்களுக்குத் தேவையில்லை, அது தவறானது. அதை தனியே விட்டு விடுங்கள். அது பிசாசு, பாருங்கள்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). ”நான் ஒரு பிரசங்கியல்ல. நான் அர்த்தம் உரைக்கிறவன், கர்த்தாவே. நான் ஒரு பிரசங்கியல்ல. நான் ... சகோ. லியோ, “கர்த்தாவே, நான் ஓரு பிரசங்கியல்ல. எனக்கு அந்நிய பாஷை பேசும் வரமுள்ளது, பிசாசு அதில் என்னைக் கவிழ்த்து விட்டான். தேவனே, அதை என்னை விட்டு அகற்றி விடும்” என்பார். நீங்கள், “கர்த்தாவே, எனக்குபகுத்தறிதலின் ஆவியைக் கொடுத்திருக்கிறீர், அதை நீர் அநேக முறை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது ஏன் இவ்விதம் நேர்ந்தது? பிதாவே, என்னைச் சுத்திகரியும்! இது ஏன் நேர்ந்தது? என்பீர்கள். பார்த்தீர்களா? அப்பொழுது நீங்கள் உண்மையானதைப் பெற்றுக் கொள்கிறீர்கள். பாருங்கள், அது வழக்கமான பரிசுத்தாவன்களின் கூட்டம். அதுதான் வேதத்தில் உள்ளதென்று நினைக்கிறேன். ஏனெனில் பவுல், “ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்து, ஏதாவதொன்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டால்... அங்கு உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசுகிறவன் முடிக்கும் வரைக்கும் இவன் பேசாமலிருக்கக்டவன். அவன் முடித்த பிறகு இவன் பேசலாம். நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம்” என்கிறான். அது வழக்கமாக நடைபெறும் ஆராதனையாக இருக்க முடியாது, அது உங்களுக்குத் தெரியும், ஒவ்வொருவராக ஆராதனையின் போது தங்கள் வரங்களை உபயோகிக்க முடியாது. 67இப்பொழுது. அது தேவனால் உண்டானது என்று நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டுமானால், பாருங்கள், அது மதியீனமாக இருக்குமானால், அது தேவனால் உண்டானதல்ல. அது நிறைவேறுமானால், அது தேவனால் உண்டானது. பாருங்கள்? அது நிறைவேறுமானால். எனவே நமது சபைகளில் பாருங்கள் , சகோதரனே, அப்படியானால் நமக்கு திடமான சபை உள்ளது, எவருமே நமது பேச்சிலும் செயலிலும் தவறு கண்டு பிடிக்க முடியாது. நான் பொது ஜனங்களுக்கு முன்பாக நிற்கையில், அது எவ்விதமான சூழ்நிலையில் என்னை நிறுத்துகிறது என்பதைப் பாருங்கள். அதைப் பாருங்கள். ஒரு தவறு நேர்ந்தால் என்னவாகும்? பாருங்கள்? நான் அவரை நம்பியிருப்பதால் தவறு ஏதும் ஏற்படுவதில்லை. பாருங்கள்? அவரை நான் நம்பியிருக்கிறேன். யாராகிலும் ஒருவர், “நீங்கள் தவறு செய்து விடுவோமா? என்று பயப்படுகிறீர்களா, சகோ. பிரான்ஹாமே” எனலாம். இல்லை, இல்லை, ஊ - ஊ, நான் தவறு செய்து விடுவேன் என்று பயப்படுவதில்லை. அவரை நான் நம்பியிருக்கிறேன். அவரே என் பாதுகாப்பு. இதை நான் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அதில் நான் நிலைத்திருப்பேன் 68நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தேவன் உங்களைத் தெரிந்து கொண்டிருப்பாரானால், அவரே உங்கள் பாதுகாப்பாயிருப்பார். பாருங்கள், அவர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்புவாரானால், நீங்கள் கூறும் வார்த்தைகளை அவர் ஆமோதிப்பார். அப்பொழுது நீங்கள் அவருடைய ராஜதூதராகி விடுகிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷைகள் பேசும் வரமுள்ள ராஜதூதர்; நீங்கள் பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் வரம் கொண்ட ராஜதூதர்; நீங்கள் பகுத்தறிதலின் வரத்தைப் பெற்ற ராஜதூதர், நீங்கள் மூவரும். நான் கூறுவது விளங்குகிறதா? அப்படியானால் உங்களுக்கு என்ன உள்ளது? உங்களுக்கு ஒரு திடமான சபை உள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் நிற்க பயப்படமாட்டீர்கள். இங்கு நான் ஒரு கூட்டத்தில் இருந்தேன். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயப் பையன் ஒருவன் அங்கு வந்திருந்தான், அவன் தற்கொலை செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தான். சகோ. பாங்க்ஸ் என்னிடம் வந்து, “அந்தப் பையன் நான்கைந்து நாட்களாக இங்கிருக்கிறான்' என்றார். எனக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டாயிருந்தன. அவரோ, ”அந்தப் பையன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்“ என்றார். அங்குள்ள வாட்டர் வயூ ஓட்டல் நிர்வாகிகள் அந்தப் பையனுடைய நிலைமையைக் குறித்து என்னிடம் அறிவித்துக் கொண்டேயிருந்தனர். 69நான் அவனுக்காக ஜெபிக்க அறைக்குள் சென்றேள். நான் அங்கு செல்வதற்கு முன்பு, “சகோ. பாங்க்ஸ், அந்தப் பையனை நான் கண்டதில்லை, அவனைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு அவனுக்குள்ள கோளாறு என்னவென்று உங்களிடம் சொல்லப் போகிறேன்” என்றேன். அது சரியா, சகோ. பாங்க்ஸ்? அங்கு நாங்கள் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அங்கு வந்து, அதைச் செய்தது எதுவென்றும், அவன் எங்கு சென்றிருந்தான் என்றும், அவனுடைய வாழ்க்கையைக் குறித்தும் எல்லாமே அவனிடம் கூறினார். அவன் ஏறக்குறைய மயக்கமுற்று விழுந்தான். “ஒரு மனிதனிடம் அவ்விதம் கூறும்போது தவறு நேர்ந்து விடும் என்று பயப்படுகிறீர்களா, சகோ. பிரான்ஹாமே?” மேடையின் மேல் நின்று கொண்டு ஒரு மனிதனிடம் அவன் தன் மனைவிக்கு உண்மையில்லாதவனாக நடந்து கொள்கிறான் என்றும், வேறொருஸ்திரீயின் மூலம் அவனுக்குக் குழந்தை உள்ளது என்றும், சொல்லி அது தவறாயிருக்குமானால், அவன் உங்களை சிறையில் போட்டு விடுவான். ஆகவே நீங்கள் சரியாக கூறவேண்டும். பாருங்கள்? பாருங்கள்? அது தேவனால் உண்டாயிருக்குமானால், நீங்கள் பயப்படாதீர்கள்! ஆனால் நீங்கள் பயப்படுவீர்களானால்... அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திராமல் போனால், அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திருக்கும் வரைக்கும் அமைதியாய் இருங்கள். அது சரியா? நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவர்களாய் இருந்து, அதன் பிறகு அதைக் கூறுங்கள். 70சகோதரனே, இது கடினமான போதகம், ஆனால் நீங்கள் என் சகோதரர். நீங்கள் முன்னேறிவரும் இளம் ஊழியக்காரர்கள், நானோ வயது சென்றவன், இந்நாட்களில் ஒன்றில் இவ்வுலகை விட்டுப் போக வேண்டியவன். பாருங்கள்? எனவே அது சரியென்று நிச்சயமுடையவர்களாய் இருங்கள். அறையை விட்டு வெளியே வருகையில் ... சிறிது நேரம் கழித்து இதை கூறுகிறேன். ஒரு பையன் .... நல்லது, அதன் ஒரு பாகத்தை இப்பொழுது கூறிவிடுகிறேன். நேற்று எனக்கும் சகோ. பாங்க்ஸுக்கும் அதிக வேலை உண்டாயிருந்தது . (ஓ, என்னே), நாங்கள் அதிக கடினமாக உழைத்தோம். நான் என்ன செய்ய வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன் என்பதை இந்த கூட்டத்தில் உங்களிடம் கூறுகிறேன். லியோவும், ஜீனும், சகோதரராகிய சிலரும் பன்றி வேட்டைக்காகப் போக உத்தேசித்திருக்கிறோம். நம்முடைய கூட்டம் முடிந்தவுடனே, அரிசோனாவில் ஜாவலினா பன்றி வேட்டைக்கென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஒதுக்கியுள்ளனர். நாங்கள் பீனிக்ஸுக்கு ஒரு நாள் கூட்டத்துக்கு செல்லப் போகிறோம். அடுத்த கூட்டம் தொடங்குவதற்கு இடையில் நான்கு நாட்கள் உள்ளன. நாங்கள் அரிசோனாவில் இருக்க வேண்டும். அப்பொழுது ஜாவலினா பன்றி வேட்டை காலம் துவங்குகிறது. 71எனவே என் துப்பாக்கி சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க அதை சுட்டுப் பார்க்க விரும்பினேன்; பாங்க்ஸ் என்னுடன் வந்திருந்தார். நாங்கள் வாசலுக்கு வெளியே வரும்போது, ஒரு மனிதன் உள்ளே வந்தார் (“தயவு செய்து 'சகோ. பிரான்ஹாம் இருக்கிறாரா? என்று கேட்காதீர்கள்” என்று எழுதி வைக்கப் பட்டிருந்த போதிலும்). பாருங்கள், அவர்கள் அதைச் செய்யக் காரணம்.... அது வியாதியஸ்தருக்கு அல்ல. என் வீடு, வேண்டுமானால் பாங்க்ஸை கேட்டுப் பாருங்கள், அவர் அடுத்த வீட்டில் வசிக்கிறார். ஜனங்கள் இரவும் பகலும் வந்த வண்ணம் இருக்கின்றனர், வியாதிப்பட்ட பிள்ளைகளையும் கொண்டு வருகின்றனர். நாங்கள் யாரையும் காணாமல் அனுப்பி விடுவதில்லை. ஆனால். லியோவும் ஜிம்மும் மற்றவர்களும் ட்ரெய்லர் வண்டியிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “இங்கு வியாதிப்பட்ட பிள்ளையுடன் ஒருவர் வந்திருக்கிறார். இங்குள்ள ஒரு மனிதனுக்கு புற்றுநேய் உள்ளது' என்றார்கள். நாங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு அவரைக் காணச் சென்றோம். 72நேற்றிரவு மருத்துவமனை அறைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தேன். யாரோ ஒருவர் அங்கிருந்து தொலைபேசியில் என்னை வரும்படி அழைத்தார். அங்கு நான் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் நான் அறைக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டார். பாருங்கள், வேறு யாரோ ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை கூப்பிட்டு விட்டார். அதனால் பரவாயில்லை, என்னவாயினும் நான் செல்கிறேன். பாருங்கள்? அப்படிச் செல்ல வேண்டியது என் கடமை , பாருங்கள், யாருக்காகிலும் உதவி செய்வதற்காக அப்படிப்பட்டவர்களுக்காக அங்கு அவ்விதம் எழுதி வைக்கப்படவில்லை. நாங்கள் காரில் ஏறப்போகும் தருணத்தில் இந்த மனிதன் வந்தார். சகோ. பாங்க்ஸுக்குத் தெரியும் நான்... நான் வீட்டில் காத்துக் கொண்டிருந்தேன். சகோ. பாங்க்ஸின் வீட்டுக்கு யாரோ ஒருவர் வந்து அவரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். அவரைக் காண நான் அங்கு சென்றிருந்த போது, நானும் பிடித்து வைக்கப்பட்டேன். நாங்கள் எங்கள் துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டு காரில் ஏறுவதற்காக புறப்பட்ட தருணத்தில், இந்த மனிதன் உள்ளே நடந்து வந்தார். 73நான் அவரிடம், அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று தொலைபேசியில் அந்த எண்ணைக் கூப்பிடச் சொல்ல (பட்லர் 2-1519 என்ற எண்) ஆயத்தமானேன். “நாங்கள் அவசரமாய்ப் போக வேண்டும்” என்றேன். அவர், “ஐயா, நீங்கள் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். நான், “என் பெயர்...” என்றேன். முதலாவதாக நான் அவரிடம் நடந்து சென்றேன். அவர், “எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் யாரென்று தெரியாது என்பதை அறிந்து கொண்டேன். “என் பெயர் பிரான்ஹாம்” என்றேன். “நீங்கள் தான் சகோ. பிரான்ஹாமோ?” என்று கேட்டார். “நான்தான்” என்றேன் .. அவர், “சகோ. பிரான்ஹாமே, உங்களைச் சந்தித்து பேச வேண்டுமென்றிருந்தேன். நீங்கள் வெளியே செல்ல ஆயத்தமாயிருப்பதைக் காண்கிறேன்” என்றார். நான், “ஆம், ஐயா, அப்படித்தான்” என்றேன். அவர், “நீங்கள் அவசரமாக போக வேண்டும் என்பதை, அறிகிறேன்” என்றார். நான், “ஐயா, நான் உடனே போக வேண்டும்” என்றேன். அவர், “எனக்கு சில நிமிடங்கள் உங்களிடம் பேச வேண்டும்” என்றார். நான், இப்பொழுது முடியாது என்று சொல்ல வாயெடுத்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் , “அவனை அறைக்குள் கொண்டு செல், அவனுக்கு நீ உதவி செய்ய முடியும்” என்றார். அது எங்கள் திட்டம் அனைத்தையும் மாற்றிவிட்டது. துப்பாக்கி ஒருபுறம் வைக்கப்பட்டு விட்டது. தேவனுடைய வேலை முதலில் பாருங்கள்? அவர் சொன்னார் .... “என்னுடன் வாருங்கள்” என்று அவரை அழைத்துச் செல்கையில் சகோ. பாங்க்ஸிடம், “சற்று கழிந்து வருகிறேன்” என்றேன். அந்த மனிதன், “இது என் ஆத்துமாவைக் குறித்த விஷயம், சகோ. பிரான்ஹாமே” என்றார். நான், “சரி, உள்ளே வாருங்கள்” என்றேன். நான் உள்ளே நுழைந்த போது, மேடா, “நீங்கள் இன்னும் புறப்படவில்லையா?” என்று கேட்டாள். நான், “இல்லை, இல்லை, இல்லை, யாரோ ஒருவர் என்னைக் காண வந்திருக்கிறார்' என்று கூறிவிட்டு, ”பிள்ளைகளைமற்ற அறையில் வைத்துக் கொள்“ என்றேன். அவரை நான் அந்த சிறு குகை அறைக்குள் கூட்டிச் சென்று, நாங்கள் உட்கார்ந்தோம். நாங்கள் உட்கார்ந்த மாத்திரத்திலே...” அந்த மனிதன் நேற்றிரவு சபைக்கு வந்திருந்தார். அவர் வந்திருந்தாரா பாங்க்ஸ்? நீங்கள், ஆம், நல்லது. நேற்றிரவு வருவதாக கூறியிருந்தார். அவர் .... 74முதலாவதாக பரிசுத்த ஆவியானவர் அவர் யாரென்றும், அவர் என்ன செய்தாரென்றும், அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்ததென்றும், அவரைக் குறித்து எல்லாமே, அவரிடம் கூறத் தொடங்கினார். அதற்கு பாங்க்ஸ் சாட்சி. அவர் வாயைத் திறந்து இரண்டு வார்த்தை கூட பேசவில்லை. அந்த மனிதரிடம், “நீ அலைந்து திரிகிறவன். நீ மாடிஸனில் வசிக்கிறாய், ஆனால் இப்பொழுது நீ இந்தியானாவிலுள்ள ஈவான்ஸ்வில் என்னுமிடத்திலிருந்து வந்திருக்கிறாய். அங்கு நீ ஒரு பிரத்தியேக கொள்கையை (cult) கடைபிடிக்கும் வேதப் பள்ளியில் சேர்ந்து, மிகவும் குழப்பமடைந்திருக்கிறாய். சில நிமிடங்களுக்கு முன்பு தான் நீ லூயிவில்லுக்கு வந்தாய். அங்கு ஒரு மனிதன் இருந்தார், அவருடன் நீ உட்கார்ந்து உணவு உண்டாய். அவர்தான் நீ இங்கு வந்து என்னைக் காணும்படியாகவும் 'அவர் உன் தொல்லை அனைத்தும் நேராக்கி லிடுகிறார்' என்று உன்னிடம் கூறினார். அது கர்த்தர் உரைக்கிறதாவது ” என்றேன். உட்கார்ந்து கொண்டிருந்த மனிதன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு என்னைப் பார்த்து, “ஆம், ஐயா” என்றார். “அது உங்களை பிரமிக்க வைத்தது. இல்லையா? என்றேன். ”ஆம், அது அப்படித்தான் செய்தது“ என்றார். “நீங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஐயா, நான் விசுவாசிக்க விரும்புகிறேன்” என்றார். “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களிடம் கூறட்டுமா?” என்றேன். அவர், “சரி, ஐயா' என்றார். நான் அவரிடம் அதைக் கூறினேன். அவர், ”சகோதரனே, அது உண்மை “ என்றார். “உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றேன். அவர், “சரி, நான் மாற்றிக் கொண்டு விட்டேன்” என்றார். “இதுதான் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது” என்றேன். “அது உண்மை ! அது உண்மை !” என்றார். 75“உங்களுக்கு ஒருதரிசனம் தேவையில்லை, நீங்கள் நேராக்கப்பட வேண்டியது மட்டுமே” என்று சொல்லிவிட்டு, அவர் செய்த ஒரு காரியத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது மிகவும் மோசமான, பயங்கரமான காரியம், அதைச் செய்தது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். கர்த்தர் எனக்கு ஜனங்களைக் குறித்து கூறுவதை நான் வெளியே சொல்வதில்லை. நான் அவரிடம், “சரி, அதைச் செய்வீர்களா?” என்று கேட்டேன். அவர், “நான் செய்வேன்” என்றார். நான், “நீங்கள் போகலாம்” என்றேன். நாங்கள் அந்த அறையில் பத்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை, இல்லையா சகோ. பாங்க்ஸ்? ஏழு நிமிடங்களுக்கும் பத்து நிமிடங்களுக்கும் இடையே. நாங்கள் வெளியே வந்து, சாலையில் ஒன்றாக காரில் பயணம் செய்த போது - அவரும் நானும், சகோ. பாங்க்ஸும், என் சிறிய மகன் ஜோவும் என்று நினைக்கிறேன் - அவர் என்னிடம் திரும்பி, “மிஸ்டர், உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார். நான், “சரி, கேளுங்கள்” என்றேன். அவர், “எனக்கு சிறிது குழப்பமாயுள்ளது. என்னைப் பொறுத்த எல்லா விஷயங்களையும் நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார். பாருங்கள்? பாங்க்ஸ் கூட இருந்தார். நான், “மிஸ்டர். நீங்கள் எப்பொழுதாகிலும் என் தரிசனங்களைக் குறித்தும் என் ஊழியத்தையும் கேள்விப்பட்ட துண்டா?” என்று கேட்டேன். அவர், “ஒரு மணி நேரம் முன்பு வரைக்கும் உம்முடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. லூயிவில்லில் யாரோ ஒருவர் இங்கு போகும்படி கூறினார். நான் நடந்து பாலத்தைக்கடந்து வந்தேன்” என்றார். அது சரியா, சகோ. பாங்க்ஸ்? “உம்முடைய பெயரையும் நீங்கள் யாரென்றும் நான் அறிந்திருக்கவேயில்லை” என்றார். நான், “என் ஊழியத்தில் அது தேவன் அனுப்பின்வரம்” என்றேன். அவர், “அது அவ்விதம் இருக்குமானால் நான் .... என் குழப்பம் எல்லாம் போய் நான் சரியாயிருக்கிறேன். அது என்னவென்றால், தேவன் உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார். “அது மிகவும் சரி என்றேன். அவர், “நான் வேதத்தில் படித்திருக்கிறேன். ஒரு முறை இயேசு சீஷர்களிடம் பேசி” அவர் “ஜனங்கள்” என்று சொல்வதற்கு பதிலாக “சீஷர்கள்” என்று சொல்லிவிட்டார் - “அவர் சீஷர்களிடம் பேசி அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த காரியங்களைக் கூறினார்” என்றார். பாருங்கள்? “அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார்” என்று வேதத்தில் கூறியுள்ளதை தான் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து, “அது அவருடைய பிதா அவர் மூலம் பேசுதல் என்பதாக அவர் கூறினார்” என்றார். “அது உண்மை ” என்றேன். 76அவர், “அப்படியானால், இப்பொழுது, இப்பொழுது, என்னிடம் இந்தக் காரியங்களை அறிவித்து, நீர் கூறினது உண்மை என்பதை நான் விசுவாசிக்கும்படி செய்வதற்காக தேவன் உம்மை ஒரு கருவியாக உபயோகித்து உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார். “அது உண்மை தானா?” என்று கேட்டேன். அவர், 'ஆம், அது தேவனாயிருக்க வேண்டும்“ என்றார். நான், “சகோதரனே (நானும் பாங்க்ஸும் இவ்வாறு கூறினோம்), கூட்டங்களுக்கு பத்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் சிலரை விட இப்பொழுது உமக்கு அதிகம் தெரிகிறது. அவர்கள் இதைக் குறித்து இன்னும் அறியாமலிருக்கிறார்கள்” என்றேன். அந்த மனிதன்! அதுதான் அது. பாருங்கள்? ஆவியின் மூலம் அந்நிய பாஷை பேசுதலும் (கிரமமாக) தீர்க்கதரிசனம் உரைத்தலும் ஆராதனையின் போது உபயோகிக்கப்படலாமா? இல்லை. அது இந்த விதமாக உபயோகிக்கப்பட்டு, ஆராதனையின் போது அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது, தற்பொழுது, அவர்கள் ஆராதனையில் பேசட்டும். ஆனால் அது கட்டுக்கு மீறும் நிலை ஏற்பட்டால், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது தேவனாயிருக்கலாம். சிறு குழந்தை நடக்க முயற்சி செய்யும்போது, நான்கைந்து முறை கீழே விழுந்தால்.... இந்த சபைக்கு இப்பொழுது வந்த முதற் கொண்டு இதை காண்கிறேன். நல்லது. அதை அப்படியே விட்டு விடுகிறேன். ஆனால், பாருங்கள், சகோ. பிரான்ஹாமே, அதை ஏன் நீங்கள் திருத்தக் கூடாது?“ என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, இல்லை . 77பில்லி பால் முதலில் நடக்கத் தொடங்கின் போது, அவன் விழுந்து எழுந்திருப்பான். அவன் நடப்பதைக் காட்டிலும் விழுவது தான் அதிகமாக இருந்தது. அவனுக்கு நடக்கத் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு நடக்கும் வரம் இருந்தது என்று நான் எண்ணுகிறேன். அவனை சிறிது காலம் நடக்கவிடுகிறேன் . அவனுடைய கால்கள் தடுக்கி விழும்போது, அவனிடம் கூறுகிறேன். நான் கூறுவது விளங்குகிறதா? பாருங்கள்? அவன் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டு தடுக்கி விழுந்தால், அவனிடம், “எழுந்து நட, நீ எங்கே இருக்கிறாய் பார்?” என்பேன். பாருங்கள்? அது தான் வித்தியாசம், பாருங்கள். இப்பொழுது அவர்கள் சிறிது காலம் தடுக்கி விழுந்து தடை செய்யட்டும். அவர்களை நீங்கள் திருத்தும் நேரம் வரும் போது. அவர்கள் அதை ஆட்சேபித்தால், அது தேவன் அல்ல என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் தேவனுடைய ஆவி அடங்கியிருக்கிறது. இங்கு நீங்கள் சிறிது குறிப்பிட்டுள்ள வண்ணமாக, “தீர்க்கதரிசனத்தின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது”. பாருங்கள்? அது உண்மை . (சகோ. ஸ்ட்ரிக்கர், “சகோ. பிரான்ஹாமே, இதை தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் - ஆசி). சரி. சகோதரனே. (“அநேக சமயங்களில், நான் ஆராதனைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, அந்நிய பாஷைகள் பேசப்படுவதையும் அதற்கு அர்த்தம் உரைத்தலையும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும், அதைக் குறித்து எனக்கு மோசமான உணர்வு இருந்து வந்திருக்கிறது. நான் வீடுதிரும்பும்போது, வழி நெடுக நான் மனஸ்தாபப்பட்டது போல் தோன்றினது. அது தேவனால் உண்டானதல்ல என்னும் காரணத்தினாலா, அல்லது அது ஒழுங்கின்படி இல்லை என்பதற்காகவா? 78இருக்கலாம், சகோதரனே, இவ்விரண்டில் ஏதாவதொரு காரணம் இருக்கலாம். பாருங்கள்? இதை நான் கூற முற்படுகிறேன். இப்பொழுது. இது வில்லியம் பிரான்ஹாம் கூறுவது, பாருங்கள். நான் வேதவசனங்களுக்கு செல்லும் வரைக்கும், அது வரைக்கும் நான் கூறுவது என் சொந்த அபிப்பிராயமே. சகோ. ஸ்ட்ரிக்கர், இதை கூற விரும்புகிறேன், இது இவ்விரண்டில் ஏதாவதொரு காரணமாயிருக்கலாம். அது ஒழுங்கின் படி இல்லத்தனால் இருந்திருக்கலாம், அல்லது உங்களில் ஏதாவது தவறு இருந்திருக்கலாம். அந்த நபரில் ஏதாவது தவறு இருக்கக் கூடும்; அல்லது செய்தியில் தவறு இருக்கக் கூடும்; ஏதாவதொன்று உங்களுக்கு மோசமான உணர்வு ஏற்பட காரணமாயிருந்திருக்கும். இப்பொழுது. இப்பொழுது, உங்களுக்கு இங்கு சிறிது உதவி செய்ய விரும்புகிறேன், சகோ. ஸ்ட்ரிக்கர். பாருங்கள்? எப்பொழுதுமே... உணர்வைக் கொண்டு எதையுமே தீர்ப்பு செய்யாதீர்கள், பாருங்கள். அதன் தன்மைகளைக் கொண்டு தீர்ப்பு செய்யுங்கள்; அது என்ன கனி கொடுக்கிறது என்பதன் அடிப்படை யில், பாருங்கள். ஏனெனில் சில நேரங்களில்.... சில சமயங்களில் நமக்கு உணர்ச்சி உண்டாகிறது என்பது உண்மைதான் - பிசாசின் உணர்ச்சியைப் போல. அது எனக்கும் கூட உண்டாகிறது, அப்பொழுது நான் அதை எளிதாக எடுத்துக் கொள்வேன், அதைக்குறித்து ஒன்றுமே சொல்லமாட்டேன், அதை தனியே விட்டு விடுவேன். ஏனெனில் அது என்னவென்று எனக்கு நிச்சயமாய் தெரியும் வரைக்கும், அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது, உதாரணமாக, அநேகர், “வயூ! சகோதரனே, எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று தெரியும். அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லிக் கொள்கின்றனர். அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அந்நிய பாஷை பேசுகின்றனர். கூச்சலிடுகின்றனர். ஆவியில்நடனமாடுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் விழுகிறது. அது உணர்ச்சியினால் அல்ல, அவர்களுடைய கனிகளினாலே. 79அங்கு ஒரு ... அதைக் குறித்து நான் கண்ட தரிசனம் ஞாபகமுள்ளதா? எப்படி அந்த... எபிரேயர் 6ம் அதிகாரம், பாருங்கள், “தன் மேல் அடிக்கடி பெய்கின்ற மழையைக் குடித்து பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” (எபி. 6:7-8). என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சிறிது காற்றை நான் அறைக்குள் விடுகிறேன். நீங்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டும் களைப்பாயும் இருக்கிறீர்கள் என்று அறிவேன். எனவே இப்பொழுது, பொறுங்கள், இதை சிறிது வேகமாக முடிக்க வேண்டும், இல்லையென்றால் மற்ற கேள்விகளுக்கு நான் வரவே முடியாது. இந்த கேள்விக்கு நாம் இங்குள்ள கேள்விகள் அனைத்திலும் நாம் தொடக்கக் கேள்விகளிலேயே இருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகள்... பாருங்கள் ... 80இங்கு கோதுமை வயல் ஒன்றுள்ளது. அதில் ஜிம்ஸன் களை, காக்கில்பர் களை, இன்னும் மற்றகளைகளும் உள்ளன. நல்லது, இப்பொழுது வறட்சி ஏற்பட்டுள்ளது. கோதுமையைப் போலவே ஜிம்ஸன் களைக்கும் காக்கில்பர் களைக்கும் தாகம் உண்டாகிறதல்லவா? எந்தவிதமான மழை... கோதுமையின் மேல் ஒரு விசேஷித்த மழையும், காக்கில்பர் களையின் மேல் மற்றொரு விசேஷித்த மழையுமா பெய்கிறது? இல்லை, ஒரே மழை தான் இவ்விரண்டின் மேலும் பெய்கிறது. அது சரியா? அது போன்று ஒரே ஆவிதான் மாய்மாலக்காரன் மேலும் கிறிஸ்தவன் மேலும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய “கனிகளினாலே”. சகோதரனே, அது ஆழமாக பதிந்து விட்டதா? பரிசுத்த ஆவியின் அடையாளம் அதன் கனிகளே, ஆவியின் கனிகள். நல்லது, அது நல்லது. நீங்கள், “நான் ஒரு தண்டு, நான் ஒரு காக்கில்பர். கோதுமை தண்டைப்போலவே நானும் ஒரு தண்டு' எனலாம். ஆனால் எந்தவிதமான ஜீவன் உனக்குள் உள்ளது? அதற்குள் இருக்கும் ஜீவன் முட்களைப்பிறப்பித்து, எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டும், புண் படுத்திக் கொண்டும், நீச்சத்தனமாயும் மோசமாயும் உள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? கர்வம், பாருங்கள், அது ஆவியின் கனியல்ல. ஆவியின் கனியோ சாந்தம், பொறுமை, தயவு, பாருங்கள். இவையெல்லாம். பாருங்கள்? அவர், ஒருவேளை, “நல்லது. உங்களைப் போலவே என்னால் உரத்த சத்தமாய் கூச்சலிட முடியும். தேவனுக்கு ஸ்தோத்திரம். பரிசுத்த ஆவி என் மேல் விழுகிறது எனலாம். அது முற்றிலும் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர் வாழ்கின்ற வாழ்க்கை அவர் கூறுவதை ஆதரிக்கவில்லை. பாருங்கள்? அவர் ஒரு களை, அவர் தொடக்கத்திலேயே களையாக இருந்தார். இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப்படுதல் என்னும் பெரிய கேள்வியை அடைகிறோம், பாருங்கள். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? 81அவர்கள் தொடக்கத்திலேயே களைகளாக இருந்தனர், இவரோ தொடக்கத்தில் கோதுமையாக இருந்தார். வறட்சி வந்தது; பிறகு மழை நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிந்தது. சரி, புரிந்து கொண்டீர்களா? (ஒரு சகோதரன், “ஒரு பிரசங்கியின் கனிகளைக் குறித்தென்ன?... வார்த்தையைப் பிரசங்கிக்கும் ஒருவர்” என்று கேட்கிறார் - ஆசி). ஒரு பிரசங்கி அங்கு எழுந்து நின்று வார்த்தையை ஒரு பிரதான தூதனைப் போல் பிரசங்கித்து, பாருங்கள், வேதத்திலுள்ள இரகசியங்களை அறிந்து, ஒரு நல்ல மேய்ப்பனாக விளங்கி, ஜனங்களைச் சந்தித்து மற்ற காரியங்களைச் செய்திருந்தாலும், அவர் இழக்கப்பட்டவராயிருக்கக் கூடும். பாருங்கள்? அவருடைய கனி ஒவ்வொரு முறையும் அதைத் தெரியப்படுத்தும், சகோதரனே. பாருங்கள்? அவர் எவ்வளவு நல்லவராயிருந்தாலும், அவர் என்னவாயிருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் அவர் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்” என்று இயேசு கூறவில்லையா? (மத். 7: 22), அவர் அந்நிய பாஷை பேசினார், அற்புதங்களைச் செய்தார், பாஷைக்கு அர்த்தம் உரைத்தார், தேவனுடைய பரமரகசியங்களை அறிந்திருந்தார், இன்னும் மற்ற காரியங்கள் அனைத்தையும் செய்தார். இருப்பினும் இயேசு அவர்களை நோக்கி, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்” என்கிறார் (மத். 7:23). நான் கூறுவது விளங்குகிறதா? [சகோ. டெய்லர், “தவறான செய்தியைக் கொண்டு வரும் ஒரு மனிதனைக் குறித்தென்ன? அதாவது, அவர் சரியன்று நினைத்துக் கொண்டு, தவறானதைப் பிரசங்கிப்பவர் என்று கேட்கிறார் - ஆசி]. நல்லது, அந்த மனிதன் உத்தமமாயிருப்பாரானால் இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த சகோதரன் திரும்பிச் சென்று இவைகளை மீண்டும் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறது போல. அந்த மனிதன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவராயிருந்து, அவர் எப்பொழுதாகிலும் சத்தியத்தின் முன்னிலையில் கொண்டு வரப்படுவாரானால், அவர் அதை அடையாளம் கண்டு கொள்வார். பாருங்கள்? “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது”. உங்களுக்கு புரிகி... நான் கூறுவது விளங்குகிறதா, சகோ. டெய்லர்? அதைக் குறித்து தானே நீங்கள் கேட்டீர்கள்? பாருங்கள்? 82இப்பொழுது, உதாரணமாக, சகோ. க்ரேஸ் ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கி என்றும் அவருக்கு பரிசுத்த ஆவியைக் குறித்தும், இன்னும் மற்ற காரியங்களான ஆவியின் வரங்கள் போன்றவைகளைக் குறித்து ஒன்றும் தெரியாதென்றும் வைத்துக் கொள்வோம். அவர் நல்லவர், விசுவாசமுள்ள பாப்டிஸ்ட் பிரசங்கி. பாருங்கள்? முதலாவதாக என்ன தெரியுமா, இவை அவருடைய முன்னிலையில் கொண்டு வரப்படுகிறது. நான் விசுவாசிப்பது என்னவெனில், தேவனுடைய பிள்ளை ஒவ்வொருவரும்... ஒவ்வொரு காலத்திலும், தேவன் அவரைப் பிடிக்கும் வரைக்கும் வலை போடப்படும். தேவனுடைய சித்தம் செய்து முடிக்கும் வரைக்கும், ராஜ்யம் வர முடியாது. அது உண்மை. அவர்களில் ஒருவரும் அழிந்து போக முடியாது, பாருங்கள், அது தான் வழி. பரலோக ராஜ்யம் கடலில் வலையைப் போடும் ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வலையை இழுக்கும்போது. அதில் எல்லாவிதமான கடல் ஜந்துக்களும் இருக்கின்றன. அவன்மீனை மட்டும் வைத்துக் கொள்கிறான். ஆமைகளும், மற்றவைகளும் தண்ணீரில் போடப்பட்டு அங்கு சென்று விடுகின்றன. அவன் மறுபடியும் வலையைக் கடலில் போடுகிறான். அவனுக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்கிறது. ஒருவேளை அவனுக்கு ஒரே மீன் மட்டும் கிடைத்திருக்கும். எல்லாம் பிடிக்கப்படும் வரைக்கும் அவன் வலையைப் போட்டுக் கொண்டேயிருந்தான். இப்பொழுது நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஆனால் அந்த மீன் தொடக்கத்திலேயே மீனாக இருந்தது. அது எஜமானின் உபயோகத்திற்காக போடப்பட்டது. அவ்வளவு தான், அவைகளை இன்னும் தெளிவான சுத்தமான குளத்தில், வேறொரு குளத்தில் போட்டார்கள். ஆனால் அவனோ எல்லா மீன்களையும் பிடித்து வெளியே கொண்டு வரும் வரைக்கும், இந்த தவளை குளத்தில் வலையை வீசிக் கொண்டேயிருக்கிறான். நான் கூறு வது விளங்குகிறதா . சகோ. டெய்லர்? அங்குள்ள உங்கள் குடும்பத்தினரின் மூலமாகவே இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சரி, இப்பொழுது. 83அவர் எப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு எல்லா நேரங்களிலும் ஆவியின் மீது கட்டுப்பாடு உள்ளதா? ஆம், ஐயா. ஆம், ஐயா. பரிசுத்த ஆவி கட்டுப்படுத்துகிறது. ஆம், ஐயா. அதற்கு உங்கள் மீது கட்டுப்பாடு உண்டு, உங்களுக்கும் அதன் மீது கட்டுப்பாடு உண்டு. நீங்கள் வேதத்திற்கு முரணாக நடந்து கொள்ளும்படி அது ஒருக்காலும் செய்யாது. அது... “ஆவி அயோக்கியமானதைச் செய்யாது. அது உண்மை . சரி. “உங்களை நேசிக்கும் ஒருவரிடமிருந்து.... ஆம், அது, அதை பார்ப்போம். சரி, நாம் வேறொரு கேள்விக்குச் சென்று நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காண்போம். இப்பொழுது, அதற்கு ஒரு அடிப்படை இருந்ததென்று நினைக்கிறேன். இந்த கேள்விகளை நான் இப்பொழுது படிக்கவிருக்கும் போது, வேறெதாகிலும் கேள்வி... இதன் பேரில் வேறெதாகிலும் கேள்வி உண்டா? நாம் எல்லோரும் புரிந்து கொண்டு விட்டோமா? இதை நாம் எவ்விதம் விசுவாசிக்கிறோம் என்று நம் எல்லோருக்கும் புரிந்து விட்டதா? 84ஒரு சகோதரன், “எனக்கு ஒரு கேள்வி உண்டு” என்கிறார் - ஆசி. சரி. கூறுங்கள். இதன் பேரிலா? சரி. ஆம், இதன் பேரில்தான். நான் சற்று தயங்கினேன். ஆனால்...“] தயக்கம் வேண்டாம், இது ஒரு... ”நீங்கள் பிரசங்கிக்கும் ஒரு மனிதனைக் குறிப்பிட்டீர்கள். அவருடைய ஊழியத்தில் என்ன நடந்தாலும், அவர் கிறிஸ்து கொண்டு வந்த செய்தியைப் பிரசங்கிக்காமல் இருந்து, அவர் சத்தியத்துடன் தொடர்பு கொள்ளும் தருணம் உண்டாகி, அவர் அதை புறக்கணிப்பாரானால், அப்பொழுது என்ன நடக்கும்?) அவர் இழக்கப்படுகிறார். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் .... (“முன் குறித்தலின் சம்பந்தமாக, இவ்வுலகில் அவர் வருவதற்கு அவர் முன் குறிக்கப்பட்டதன் சம்பந்தமாக) அது தான், அதுதான். பாருங்கள்? அப்படியானால் அவர் அவ்விதமாக இருக்கமுன் குறிக்கப்படவில்லை”). அவ்விதமாக இருக்க தொடக்கத்திலேயே அவர் முன் குறிக்கப்படவில்லை. “அவர்கள் நம்முடைய வர்களாயிருக்கவில்லை, அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். (1 யோவான் 2: 19). 85உதாரணமாக, இது இப்படி உள்ளது, எபிரேயர் 6ம் அதிகாரத்திலும் அதே காரியம் தான். பாருங்கள்? ஜனங்கள் அந்த வேதவசனத்துக்கு தவறாக அர்த்தம் உரைத்து, அது “கூடாத காரியம்” என்று நினைக்கின்றனர். அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று சொல்லியிருக்கிறார். பாருங்கள், அவர்கள் முதலாவதாக அது என்னவென்று விளங்கிக் கொள்ளவேயில்லை. அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்; அவர்கள் தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர்” என்று கூறியுள்ளார் (எபி. 6:4-6; 10:29). நல்லது, என்னைப் பொறுத்தவரையில், அது ஒரு வெளிப்பாடு. அது அப். 2: 38ம் மத் 28:19ம் போன்றது. அதை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும், பாருங்கள். இப்பொழுது பாருங்கள், அது இங்குள்ளது, அதே காரியம்தான். நல்லது, இப்பொழுது அவன். எபிரேயரிடம் பேசுகிறான், பாருங்கள்? அந்த அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பீர்களானால், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” என்று உரைக்கப்பட்டுள்ளது (எபி. 10:31). இங்கு ஒரு மனிதன் இருக்கிறான், அவன் அந்த எல்லைக்கோடு விசுவாசியைப் போன்றவன். இங்கு... இங்கு அதே காரியம்தான், அதுவே பிழையற்ற உதாரணமாக என் மனதில் தோன்றுவதை நான் காண்கிறேன். 86தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார். அந்த ஜனங்கள் அனைவரும் வெளியே வந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர். அது சரியா? சிவந்த சமுத்திரம்... அவர்கள் மோசேயின் செய்திக்கு செவிகொடுத்து, ஆயத்தமாகி அணிவகுத்து நடக்கத் தொடங்கினர் (நீதிமானாக்கப்படுதல்), அவர்கள் திசைத் திரும்பி, இங்கிருந்து தொடங்கினர். அவர்கள் சிவந்த சமுத்திரத்தை அடைகின்றனர் (இரத்தம்), அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து விடுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களைக் கடினமாக வேலை வாங்கினவர் அனைவரும் மரித்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய மூன்று நாட்கள் பிரயாணம் மாத்திரமே இருந்தது. பாருங்கள்? அது நாற்பது மைல்கள் தூரம்தான். இருந்தது, அவ்வளவு தான் அவர்களுக்கு இருந்தது, பாருங்கள். அதோ அவர்கள் உள்ளனர், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் அதை அடைந்திருப்பார்கள். இன்னும் சில நாட்களில் பீனிக்ஸில் நடைபெறவிருக்கும் வர்த்தகரின் கூட்டத்தில் அதைக் குறித்து தான் இந்த மலையின் மேல் தங்கியிருத்தல் என்னும் பொருளின் பேரில் பேசலாம் என்று எத்தனித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் இருக்கும்படி அவர் செய்துவிட்டார், ஏனெனில் அவர்கள்... உ - ஊ ! பாருங்கள்? 87அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வந்து திரும்பிப் பார்க்கின்றனர் (பரிசுத்தமாக்கப் பட்டவர்களாய்). “ஓ, அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவனுக்கு மகிமை! அல்லேலுயா! என்னை ஒரு காலத்தில் தொல்லைப்படுத்தின அந்த பழைய காரியங்களெல்லாம் மரித்துப் போய் அங்கு கிடக்கின்றன.நான் முன்பு புகைத்திருந்த சிகரெட்டுகள் போய்விட்டன. நான் முன்பு குடித்திருந்த அந்த மதுபானம் இவையனைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய சிவந்த சமுத்திரத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. ஓ, தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” என்கின்றனர். கானானைச் சுதந்தரிக்க அவர்கள் ஒவ்வொருவரும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வருகின்றனர். நல்லது, மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியைத் தெரிந்து கொண்டான். அது சரியா? அவன் அவர்களை அங்கு அனுப்பினான். நல்லது, அவர்களில் சிலர், “ஆ, ஆ, ஆ, நம்மால் அதைச் செய்ய முடியாது. முடியாது. அது - அது. அவர்களுக்கு முன்னால் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறோம்” என்றனர். பாருங்கள்? 88“இப்பொழுது, நான் பரிசுத்த ஆவியைக் குறித்தும் அந்த காரியங்கள் அனைத்தைக் குறித்தும் பிரசங்கித்தால், நான் எப்படிப்பட்ட சபைக்கு அதை பிரசங்கிப்பேன்? ஏன், எனக்கு காலி இருக்கைகள் மட்டுமே இருக்கும். என் மெதோடிஸ்டு ஜனங்கள் வெளியே நடந்து சென்று விடுவார்கள், என் பாப்டிஸ்டு ஜனங்களும், என் பிரஸ்பிடேரியன்களும் கூட எனலாம். அவர்கள் வெளியே நடந்து செல்லட்டும். அவர்கள் துவக்கத்திலேயே வெள்ளாடுகள்! உங்களுக்கு வேண்டியது செம்மறியாடுகளே, பாருங்கள், பாருங்கள்? நீங்கள் வெள்ளாடுகளுக்கு மேய்ப்பனாக, இல்லை, நீங்கள் செம்மறியாடுகளுக்கே மேய்ப்பனாயிருக்கிறீர்கள்! மேய்ப்பதற்கு செம்மறியாடுகள் இருக்கும்போது, வெள்ளாடுகளை மேய்ப்பதால் என்ன பயன்? பாருங்கள்? நான் சத்தியத்தை சபையில் நான்கு கம்பங்களுக்கு பிரசங்கித்தாலும் எனக்கு அக்கறையில்லை என்று நான் அடிக்கடி கூறியதுண்டு. ஆம், ஐயா. இப்பொழுது பாருங்கள். அவன் என்ன செய்தான்? அவர்கள் திரும்பி வருகின்றனர், யோசுவாவும் காலேபும், இரண்டு சதவிகிதம், அது சரியான சதவிகிதம் தானா... பன்னிரண்டில் இரண்டு பேர். நல்லது. அவர்கள் பன்னிரண்டு பேர் இருந்தனர், அந்த பன்னிரண்டு பேர்களில் இரண்டு பேர் விசுவாசித்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று, “இது தங்குவதற்கு மிகவும் நல்ல இடம்” என்றனர். யோசுவாவும் காலேபும் வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவன் அதை அவர்களுக்கு கொடுத்து, “அது உங்களுடையது” என்றார். அவர்கள் அங்கு சென்று ஒரு பெரிய திராட்சைக் குலையை வெட்டி இப்படி அதை சுமந்து கொண்டு வந்து, “வாருங்கள், தோழரே! இது மிகவும் அருமையான இடம்! இதை குடித்துப் புசியுங்கள்” என்றனர். பாருங்கள், இவ்வளவு பெரிய திராட்சை பழங்கள். 89ஓ, அந்த திராட்சம் குலையைக் கண்ட மற்றவர்கள், “ஆ. நம்மால் செய்ய முடியாது என்றனர். அவர்கள் திரும்பிச் சென்றவுடன் மற்றவர்களிடம், ”இல்லை, சகோதரனே, இந்த மோசே நம்மை வனாந்திரத்துக்கு அழைத்து வந்து விட்டான்“ - அவன் பிரதிநிதியாக இருந்த இந்த பரிசுத்த ஆவி - ”அவன் நம்மை வனாந்திரத்துக்கு அழைத்து வந்துவிட்டான். இதோ நாம் இங்கிருக்கிறோம். நமது ஊழியம் பாழாகி விட்டது, அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாது' என்றனர். பாருங்கள், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் மறுதலிக்கின்றனர். பாருங்கள், அவர்கள் இந்த இரண்டாம் பலி பீடத்துக்கு வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் காண்கின்றனர். ”ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு பரம ஈவை ருசி பார்த்தவர்கள். பாருங்கள், “ருசி பார்த்தவர்கள்”. அதை அவர்கள் அங்கிருந்து கொண்டு வந்தனர். அது சரியென்று நாம் காண் கிறோம், அதைக் கண்கூடாக காண்கிறோம். “பரம ஈவை ருசி பார்த்து, இந்த காரியத்தில் பங்கு கொண்டவர்கள். பாருங்கள், இந்த பரிசுத்த ஆவியில் பங்கு கொண்டவர்கள். “ அது நல்லது, அந்த மனிதனைப் பாருங்கள். அவன் குருடனாயிருந்தான் என்று எனக்குத் தெரியும், இப்பொழுது அவன் பார்வையடைந்திருக்கிறான். அந்த வயோதிபனைப் பாருங்கள். அந்த ஆசாமிக்கு என்ன நேரிட்டது? யார் நினைத்தது, படிப்பில்லாத இவர். ... அவர் அக்கினியைக் கொண்டவராய் உலகத்தில் நின்று கொண்டிருக்கிறார்”. பார்த்தீர்களா? பாருங்கள்? பாருங்கள்? 90அதன் பிறகு மறுதலிக்கிறவர்கள் (ஆங்கிலத்தில் “fall away” “விழுந்து போதல் - தமிழாக்கியோன்), பாருங்கள், அவர்களை ... மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது ... அவர்களுக்கு மீண்டும் மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர் ... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் போன்றவைகளுக்கு மறுபடியும் அஸ்திபாரம் போடுதல் என்பதைக் குறித்து உங்களுக்குத் தெரியும். தேவனுக்கு சித்தமானால், அதை நாம் செய்வோம். நாம் திரும்பிச்சென்று அந்த அஸ்திபாரத்தை மறுபடியும் போடுவோம். ஆனால் இவர்களோ அதில் பங்கு கொண்டதற்காக மனஸ்தாபப்படுகின்றனர். ”அங்கு நான் சென்றிருந்ததற்காக வருந்துகிறேன். இவர்கள் தங்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர். சகோதரனே, அவன் போய்விட்டான்! அவ்வளவுதான். அவன் முடிந்து விட்டான். பாருங்கள்? தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு பிள்ளை அவ்விதம் செய்வது கூடாதகாரியம். அவன் அதை செய்யவேமாட்டான். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அது கானானுக்குள் அல்லது வேறெங்காகிலும் செல்வதற்கு அழைக்கப்பட்டால், அவர்கள் போவார்கள். பாருங்கள்? ”என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது“. ஒரு சகோதரன், “அவர்கள் அப். 2: 38லும் விசுவாசம் கொண்டிருத்தல் அவசியம் இல்லையா?” என்று கேட்கிறார் - ஆசி) அவர்கள் ஒவ்வொரு வேதவாக்கியத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது முற்றிலும் சரி, சகோதரனே. 91இரண்டுவிதமான வேதாகம பாஷைகள் உண்டா? தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா? பெந்தெகொஸ்தே நாளில் பேசப்பட்ட பாஷை வெவ்வேறு ஜாதியினரால் புரிந்து கொள்ளப்பட்டது; ஆனால்1 கொரிந்தியர் 14:2ல் அந்நிய பாஷை தேவனிடம் பேசப்படுகிறது, மனிதரிடம் அல்ல, 1 கொரிந்தியர் 13 :1... (அது கொரிந்தியர் 13 என்று. எழுதப்பட்டுள்ளது என்று தான் நினைக்கிறேன்)... மனுஷர் பாஷை என்றும் தூதர் பாஷை என்றும் குறிப்பிடுகிறதே. ஓ, ஆமாம். பாருங்கள்? நல்லது, அது... இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், நீங்களே உங்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்லி விட்டீர்கள். பாருங்கள்? இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டா? (அநேக பாஷைகள் உண்டு பாருங்கள்?) வேதாகமத்தில் இரண்டு விதமான பாஷைகள் உண்டா? பெந்தெகொஸ்தே நாளில் வானத்தின் கீழிருந்த வெவ்வேறு பாஷைக்காரர் அங்கு குழுமியிருந்தனர். பாருங்கள்? சரி. தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா? ஆம். 92பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் - அதைக் குறித்து உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் - “தூதர் பாஷை உண்டு, மனுஷர் பாஷை உண்டு' என்று கூறியிருக்கிறான். தூதர் பாஷை என்பது மனிதன் தனிமையில் தனக்கும் தேவனுக்கும் இடையே ஜெபத்தை ஏறெடுக்கும்போது. ஆனால் அவன் சபையில் ஒரு பாஷையைப் பேசும்போது, அது சபையின் பக்திவிருத்திக்காக அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். ”அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் போகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்“. (1 கொரி. 14 : 4). எனவே பவுல், ”நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்“ என்கிறான் (1 கொரி. 14:19). அப்பொழுது அது தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டு பக்திவிருத்தி உண்டாக்குகிறது. நான் கூறுவது விளங்குகிறதா? 93இப்பொழுது... இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டு. அது மனுஷர் பாஷை, தூதர் பாஷை. பாருங்கள்? பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் என்கிறான் (1 கொரி 13:1), பாருங்கள், மனுஷர் பாஷை, தூதர் பாஷை இவ்விரண்டுமே... இப்பொழுது அங்கு தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள். அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதன் அடையாளம் என்று கூறுகிறவர்கள்; அவர்கள் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் குழப்பமடைந்திருக்கிறீர்கள்” என்றனர். நான் அவர்களிடம், “நீங்கள் அப். 2:4ன்படி அதை பெறுவீர்களானால், அப்பொழுது அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் நீங்கள் பேசுகிறதை அவர்கள் கேட்க வேண்டும்” என்றேன்.அவர், “ஓ, இல்லை! இல்லை!” என்றார். நான், “நிச்சயமாக அப்படித்தான் . ஆம், ஐயா” என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் மிகவும் குழப்பமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்றால் ... தூதர் பாஷை என்று ஒன்றுண்டு. அது பரிசுத்த ஆவி தூதன் இறங்கி வந்து உங்களிடம் பேசுவது என்றார். அது நன்றாக ஒலிக்கிறது, பாருங்கள், அதில் நிறைய சத்தியம் உள்ளது போல் அது தொனிக்கிறது. ஆனால் அது முற்றிலும் சத்தியமல்ல. சாத்தான் ஏவாளிடம், “நீங்கள் நிச்சயம் சாவதில்லை” என்று கூறின போது, அது... அவன் அவளிடம் நிறைய சத்தியத்தை கூறினான், ஆனால் அது சத்தியமல்ல. பாருங்கள்? பவுல், “மனுஷர் பாஷை, தூதர் பாஷை என்கிறான். அவன் குறிப்பிடும் தூதன்.... 94அது எப்படி வேதவாக்கியங்களுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடுவதில்லை (jive) என்று நாம் பார்ப்போம். பாருங்கள்? அது “ஒத்துப் போவதில்லை” என்னும் அர்த்தத்தில் தான் கூறுகிறேன். நான் “வேதவாக்கியங்களுடன் சேர்ந்து நடனமாடுவதில்லை” என்று கூறினதால் என்னை மன்னிக்கவும். நான் வேதவாக்கியங்களுடன் “ஒத்துப் போவதில்லை” என்னும் அர்த்தத்தில் தான் இதை கூறுகிறேன். “வேதவாக்கியங்களுடன் இணைவதில்லை' என்பது மிகச் சிறந்த வார்த்தையாகும். அவர், “தூதர் பாஷைகளைப் பேசுகிற மனிதன், அதுதான் பரிசுத்த ஆவியின் பாஷை, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது அதைப் பேசுகிறோம்” என்றார். நான், “அதை எப்பொழுது எங்கே பெற்றுக் கொண்டீர்?” என்று கேட்டேன். அவர் பெற்றுக் கொண்ட இடத்தையும், எந்த மணி நேரம், எந்த நிமிடத்தில் அதைப் பெற்றுக் கொண்டார் என்பதையும் எனக்குத் தெரிவித்தார். அதை நான் சந்தேகிக்கவில்லை. பாருங்கள்? எனக்கு எந்த ... அவருக்கு நான் நியாயாதிபதி அல்ல. பாருங்கள்? அவர், “ அங்கு தான் அதை பேசினேன்” என்றார். அவர் எந்த இடத்தில் பேசினார் என்பதை சரியாக அறிந்திருந்தார். அவர், “எனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்தது” என்றார். “அதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் மகனே, அதுவல்ல நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் என்றேன். அவர், “ஓ, ஆமாம்!. அதுதான் அடையாளம்” என்றான். நான், “இல்லை” என்றேன். அவர், “இப்பொழுது பாருங்கள், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், சகோதரனே!' என்றார். நான், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக கூறும் அந்த இந்தியானாபோலீஸ் சபையில் இருந்தவர்கள், நீங்கள் உயிர்த்தெழுதலைக் குறித்தும் தேவனுடைய வல்லமையைக் குறித்தும் இன்னும் மற்றவைகளைக் குறித்தும் பேசினதை அவர்கள் ஆங்கில பாஷையில் கேட்டனரா?” என்றேன். அவர், “இல்லை, நான் அவர்கள் அறிந்திராத அந்நிய பாஷையில் பேசினேன் ” என்றார். நான், 'அப்படியானால் நீங்கள் அப். 2: 4ன்படி அதை பெற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் .... ஒரு வார்த்தையும் கூட அறியப்படாமல் இருக்கவில்லை. “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே”. . 95அவர், 'ஓ சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எங்கு குழப்பமடைந்திருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது காண்கிறேன். பாருங்கள், தூதர்பாஷை என்று ஒன்றுண்டு. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது அந்த பாஷையில் பேசுகிறீர்கள், அதற்கு யாரும் அர்த்தம் உரைக்கத் தேவையில்லை, அது பரிசுத்த ஆவியானவர் பேசுவதாகும். பாருங்கள்? பிறகு அந்நிய பாஷை பேசும் வரம் ஒன்றுண்டு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்“ என்றார். நான், 'அப்படியானால் நீங்கள் தலைகீழாக இதைக் கூறுகிறீர்கள். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் அதை தலை கீழாக பெற்றுக் கொண்டார்கள். அதாவது யாருமே அறிய முடி யாத பாஷையில் அவர்கள் பேசுவதற்கு முன்பு, எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய பாஷையில் அவர்கள் பேசினார்கள். அப்படித்தானே? என்றேன். பாருங்கள். எனவே அது உண்மையில்... 96இரண்டு விதமான பாஷைகள் உண்டு. ஒன்று தூதர் பாஷை. அது மனிதன் தனி ஜெபத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவனிடத்தில் பேசும் தூதர் பாஷையாகும். நடந்த ஒரு சம்பவத்தை இப்பொழுது நான் உங்களிடம் கூற முடியும், ஆனால் எனக்கு நேரமில்லை. டாக்டர் அலெக்சாண்டரின் இடமாகிய சீயோன் என்னுமிடத்தில் அந்தஸ்திரீ அரங்கத்துக்கு வந்திருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அங்கு நான் சென்றிருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த கூட்டத்துக்கு என்னைக் கொண்டு செல்ல பில்லி வந்திருந்தான். நான், 'பில்லி, போய் விடு“ என்றேன். நான் ... அவன், “நீங்கள் எதற்காக கூச்சலிடுகிறீர்கள்? யாராகிலும் இங்கு வந்திருந்தார்களா?” என்றான். நான், “இல்லை, ஐயா. நீ திரும்பிப் போய் சகோ. பாக்ஸ்டரிடம் இன்றிரவு பிரசங்கிக்கும்படி கூறிவிடு” என்றேன். நான் தரையில் முழங்கால்படியிட்டு, “ஆண்டவரே, எனக்கு என்ன நேர்ந்தது?” என்றேன். அப்பொழுது திடீரென்று யாரோ ஒருவர் கதவண்டையில் வேறொரு பாஷையில் பேசுவதைக் கேட்டேன். நான் நினைத்தேன் .... அது ஜெர்மன் பாஷை. “அந்த ஆளுக்கு ஏதோ தேவை போலிருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறார்” என்று நினைத்தேன். நான் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு, அங்கு இப்படி நின்றுகொண்டு அவர் பேசுவதை உற்றுக் கேட்டேன். “அந்த விடுதி முதலாளிக்கு அது எப்படி புரியும்?” என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் அந்த விடுதி முதலாளியை எனக்குத் தெரியும், அது நகரத்தை விட்டு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது என்னைச் சுற்றிலும் அந்த சிறு நகரத்தில் ஜனக்கூட்டம் அதிகமாக இருந்ததனாலே, அங்கு நான் சென்று விட்டேன். நான், “இது விசித்திரமாயுள்ளதல்லவா? என்று எண்ணினேன். நான், ”இந்த ஆள் மூச்சு விடாமல் பேசுகிறாரே என்று நினைத்தேன். பாருங்கள், அப்படித்தான் நான் நினைத்தேன், வேகமாக பேசுகிறாரே!“ என்று. நல்லது. நான், 'இது என்ன, அது நான் தான்' என்று கூறிக் கொண்டேன். நான் அமைதியாக இருந்தேன். சிறிது கழிந்து அவர் பேசி முடித்தார். அவர் முடித்த போது, நான் ஒரு சேனையின் வழியாக ஓடி மதிலைத் தாண்ட முடியும் என்பது போன்ற உணர்வு எனக்குண்டாயிற்று. நான் வெளியே சென்றேன். அப்பொழுது, பில்லி 'கேட்டை (gate) விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான். நான், “ஒரு நிமிடம் நில்” என்று அவனை நோக்கி கூச்சலிட்டேன். 97அவன் திரும்பி வந்தான். அவன் 'சோடா பாப்' குடித்துக் கொண்டிருந்தான். அவன், “அப்பா, என்ன விஷயம்?” என்றான். நான், “ஒரு நிமிடம் நில், ஒரு நிமிடம் நில், உன்னுடன் நான் வருகிறேன்” என்றேன். நான் முகத்தை வேகமாக கழுவினேன். அவன், “என்ன விஷயம்?” என்றான். கூட்டத்துக்குச் செல்லும் விஷயத்தில் என்னுடன் பேசி எந்த பயனும் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அவன், “என்ன விஷயம்?” என்றான். நான், “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. கூட்டத்துக்குப் போகலாம் வா” என்றேன் நாங்கள் கூட்டத்துக்குச் சென்றோம். அங்கு சகோ. பாக்ஸ்டர் உட்கார்ந்து கொண்டு, “என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் இடையே ஒன்றுமில்லை” என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். அவர், “வயூ! நீங்கள் வரமாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்!” என்றார். நான் “உஷ்” என்று சொல்லிவிட்டு, மேலே சென்று பிரசங்கிக்கத் தொடங்கினேன். 98நான் பிரசங்கித்து முடிக்கும் தருணத்தில் அந்த பெரிய அரங்கத்தின் பின்பக்கத்தில் யாரோ ஒருத்தி பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் ஒலிபெருக்கியை அது வரைக்கும் கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஸ்திரீ மேலும் கீழும் நடந்து, தன்னால் முடிந்த வரைக்கும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். பார்க்கப் போனால், அவளுக்கு காசநோய் இருந்தது. அவள் இரட்டை பட்டினம், செயிண்ட் பால்ஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டாள். நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர மறுத்து விட்டது. ஏனெனில் அவளுடைய சுவாசப்பைகள் வெடித்து விடும் என்று அவர்கள் பயந்தனர். மருத்துவர், “அவளுடைய சுவாசப் பைகள் தேன் கூடு போல் ஆகி விட்டது. அது வெடித்து விட்டால்இறந்து போவாள்” என்று கூறிவிட்டார். சில பரிசுத்தவான்கள் 38 மாடல் செவர்லே காரைக் கொண்டு வந்து, பின்னால் உள்ள இருக்கையை நீக்கிவிட்டு, அங்கு படுக்கை போல் ஒன்றை உண் டாக்கி, அவளை அதில் படுக்க வைத்து காரை சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தார்கள். மேடு போன்ற ஒரு இடத்தின் மேல் கார் மோதி, குலுக்கல் ஏற்பட்ட போது, அவள் இரத்தம் கக்கத் தொடங்கினாள். அந்த இரத்தம் மூக்கின் வழியாகவும் வெளியேறியது. அவள் பலவீனமடைந்து கொண்டே வந்தாள். முடிவில்... அவளுக்கு காரில் இறக்க விருப்பமில்லை. அவள் காரை நிறுத்தச் சொல்லி, புல் தரையில் தன்னை கிடத்தும்படி கூறினாள். அவர்கள் அவளை வெளியே தூக்கி புல் தரையில் கிடத்தினர். அவர்கள் எல்லோரும் அவளைச் சுற்றி நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று, அவள் மேல் ஏதோ ஒன்று பட்டதாக அவள் கூறி, எழுந்து நின்றாள். அவள் தன்னால் இயன்ற வரை உரக்க சத்தமிட்டுக் கொண்டே சாலையில் பயணம் செய்யத் தொடங்கினாள். அவள் சபையை அடைந்து உட்பாதையில் மேலும் கீழுமாக நடந்தாள். நான், “சகோதரியே, அது நடந்தது எத்தனை மணிக்கு?” என்று கேட்டேன். பரிசுத்த ஆவியானவர் என் மூலம் பேசின அதே மணி நேரத்தில் அது நடந்தது. அது என்ன? வரங்கள். 99அது என்ன - அந்த 'ஆப்போஸம் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக வாசலில் வந்து படுத்துக் கொண்டிருந்த சம்பவம்! (ஆப்போஸம்' என்பது கங்காருவைப் போன்ற ஒரு அமெரிக்க மிருகம் - தமிழாக்கியோன்). ஒன்றும் அறியாத அந்த மிருகம், அதற்கு ஆத்துமா கிடையாது. நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறியாத ஒன்று; பாருங்கள், அதற்கு ஆத்துமா கிடையாது (அதற்கு ஆவி உள்ளது), ஆத்துமா கிடையாது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்தல். தேவன் ஒரு வரத்தை பூமிக்கு அனுப்பினார், பரிசுத்த ஆவியானவரால் மேலும் காத்திருக்க முடியவில்லை. எனவே அவர் வந்து என்னை ஆட்கொண்டு, அவரே அந்தவிதமாக பேசத் தொடங்கி, அவரே வேண்டுதல் செய்தார். நாங்கள் நேரத்தை ஒப்பிட்டுப் பார்த்த போது, அதே நேரத்தில் அவள்.... அவர்கள் அவளைப் புல்தரையில் கிடத்தி, என்ன நேரத்தில் அது நடந்தது என்று காண விரும்பினர். ஏனெனில் அவள் மரித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால், அவள் எந்த நேரத்தில் மரித்துப் போனாள் என்று அவர்கள் கூறவேண்டும். பரிசுத்த ஆவியானவர் என் மேல் விழுந்து அந்த வார்த்தைகளை உரைத்து வேண்டுதல் செய்த அதே நிமிடத்தில் அவள் சுகமடைந்தாள். அவர் வேண்டுதல் செய்தபோது உரைத்த சொற்கள் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அது பரிசுத்த ஆவியானவர் பேசுதல். அதை நான் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாருங்கள், எனக்குப் புரியவில்லை. அது ஒருக்கால் அவளுடைய தூதனாக இருக்கலாம். இன்னும் சில நிமிடங்களில் அந்த விஷயத்துக்கு நாம் வரப் போகிறோம். அந்த தூதன் வந்து அந்த செய்தியை அளித்திருக்கலாம், பாருங்கள்? இப்பொழுது - இப்பொழுது, அது-அது சரி. இரண்டு விதமான பாஷைகள் உண்டு. அவைகளில் ஒன்று..... 100ஏதாகிலும் கேள்வி உண்டா? சரி, தேவன் என்ன உரைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முயலுதல், பாருங்கள். இப்பொழுது நான் .... சகோ. ஸ்ட்ரிக்கர், இந்த விஷயத்தில் நான் கூற விரும்புவது என்னவெனில், அதைக் குறித்து சிந்திக்க முயற்சி செய்யாதீர்கள், பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் பேசுவதற்கு விட்டுக் கொடுங்கள். அது என்னவென்று புரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். தொடர்ந்து உங்களை பரிசுத்த ஆவிக்கு முழுவதுமாக சமர்ப்பியுங்கள். பாருங்கள்? “ஹெ, நீர் என்ன கூறுகிறீர்?” என்று நீங்கள் கேட்க முனைகிறீர்கள். “ஹெ, நீர் என்னிடமா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” பாருங்கள், அவர். அவர் புரிந்து கொள்ள முயல்கிறார். 101மற்றவர்களுக்காக பீடத்தண்டையில் ஜெபிக்கையில், ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவது சரியா? ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) இங்கு நான் என்ன எழுதிவைத்திருக்கிறேன் என்பதை காணட்டும், அதை நான் பார்க்க வேண்டும். அர்த்தஞ்சொல்லுகிறவன் இல்லா விட்டால், அவர்கள் பேசாமலிருக்கக்கடவர்கள். 1 கொரிந்தியர் முதலாம் அதிகாரம்.... 14ம் அதிகாரம் 28ம் வசனம். யாரிடம் வேதாகமம் உள்ளது? (ஒரு சகோதரன் கீழ்கண்ட வசனத்தைப் படிக்கிறார் - ஆசி).அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், அவன் சபையிலே பேசாமல் ... சரி, எப்பொழுதாவது எங்காவது சபையில் அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், பேசாமலிருங்கள் - அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாமல் போனால். 102பீடத்தண்டையில், ஒரே ஒரு காரியம், யாராகிலும்.... ஜனங்கள் பீடத்தண்டையில் செல்வதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அண்மையில் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் பீடத்தண்டையில் சென்று எவராகிலும் ஒருவரை முதுகில் தட்டி, அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டேன். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அந்நிய பாஷையில் பேசுபவர் காண்பிப்பது போல் தோன்றினது. பாருங்கள், அது செயற்கையாக பரிசுத்த ஆவியை ஜனங்களிடம் கொண்டு வர முயல்வது போல் உள்ளது. அவ்விதம் செய்யாதீர்கள். பாருங்கள்? செய்ய வேண்டியது என்னவெனில், அந்த நபரைத் தனியே விட்டு விடுங்கள். பரிசுத்த ஆவியானவர் வரும் வரைக்கும், அவர்கள் கரங்களை உயர்த்திக் கொண்டிருக்கட்டும். பாருங்கள். எனவே அது தவறாகும். இல்லை, அவர்கள் சபையில் பேசாமலிருக்க வேண்டும், பாருங்கள். 103(ஒரு சகோதரன், “சகோ. பிரான்ஹாமே” என்கிறார் - ஆசி). ஆம், சகோதரனே. ஒரு நபர் ஆராதனைக்கு வந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு செய்தி வரும் போது, அது வழக்கமாக ஆராதனையின் முடிவில் தான் வருகிறது. அப்படி வரும் போது, இந்த வரத்தையுடைய நபர், தூதரின் பாஷைக்கும் அல்லது அளிக்கப்படுகின்ற செய்திக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா?) இப்பொழுது, இதைப் பார்ப்போம்... (ஒலி நாடாவில் 'காலியிடம் - ஆசி).... அவர்கள் உள்ளே வந்து அதை எழுதி என் மேசையின் மேல் வைக்க வேண்டும். பாருங்கள்? அதை நான் இவ்விதம் பகிரங்கமாக படிப்பேன். சகோதரனே, அந்த அறைக்குள் நான் சென்று விட்டால், அவ்வளவு தான். பாருங்கள்? 104அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு, அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். எல்லோரும் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அங்கு சகோதரி ஐரீன் மீட்பர் மரித்த குருசண்டை' என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருப்பாள்.வாயில் காப்போர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பார்கள். யாராகிலும் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டால், அவர்கள் “உஷ், உஷ், உஷ்” என்பார்கள். பாருங்கள்? சிறு பிள்ளைகள் சத்தம் செய்தால்... வாயில் காப்போர் அவர்கள் பக்கத்தில் இனிமையாக அமர்ந்து, “தேனே, இது கர்த்தருடைய வீடு, நீ அவ்விதம் செய்யக் கூடாது. கர்த்தருடைய வீட்டில் நீ நல்லபடி நடந்துக் கொள்ள வேண்டும்” என்பார்கள். மனிதர் அவர்களுடைய மனைவிகள், எல்லோருமே, தங்கள் 'கோட்'களை தொங்க விடுவதற்கு அவர்கள் உதவி செய்வார்கள். கதவு திறக்கப்பட்டவுடன், உள்ளே வரும்போது, அவர்களை வரவேற்க கதவண்டையில் யாராகிலும் இருப்பார்கள்... எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய ஆயத்தமாகி, சபையை சரியான விதத்தில் வைப்பார்கள். எல்லோருக்கும் உட்கார இடம் கிடைத்து அவர்கள் உட்காருகின்றனரா என்று கவனித்துக் கொள்வார்கள். 105நான் அறைக்குள் ஜெபித்துக் கொண்டிருப்பேன் - சில சமயங்களில் பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணியிலிருந்து. யாருமே என்னைத் தொந்தரவு செய்வதில்லை. என் செய்தியுடன் நான் சபைக்கு வருவேன். ஆராதனை தொடங்கும் போது, பாடல் தலைவர், “இன்னின்ன எண் பாடலுக்கு நாம் பாட்டுப் புத்தகத்தைத் திருப்புவோம்” என்று அறிவிப்பார். உதாரணமாக, “மீட்பர் மரித்த குருசண்டை ' என்னும் பாடலுக்கு, அவர்கள் அதைப் பாடிக் கொண்டே இருப்பார்கள். இரண்டு விசேஷித்த பாடல்களைப் பாடின பிறகு... நாங்கள் பாடல்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை, வார்த்தையில் தான் செலவிடுவோம். அவர்கள் ஞானப்பாட்டுகளைப் பாடுவார்களானால், அதற்காகத்தான் அவர்கள் வழக்கமான ஞானப்பாட்டுகள் பாடும் நேரத்தை வைத்திருக்கின்றனர். நாம் - நாம்... ஜனங்கள் அங்கு முக்கியமாக வருவது வார்த்தைக்காகவே. அது திருத்தும் வீடு. 106அதன் பிறகு ஒரு கூட்டாளி, உதாரணமாக சகோ. ஜார்ஜ் டீ ஆர்க் எழுந்து ஜெபிப்பார். அதன் பிறகு ஒரு விசேஷித்த பாடல் இருக்கும் - தனியார் பாடல் போன்ற ஒன்று. அதன் பிறகு செய்திக்கான நேரம். யாராகிலும் ஒருவர் என்னிடம் வந்து, அறையை விட்டு வெளியே வர நேரமாகி விட்டது என்றுஅறிவிப்பார். நான் அபிஷேகத்தின் கீழ் புத்துணர்ச்சியுடன் வெளியே வருவேன், பாருங்கள்? நல்லது. ஒருக்கால் அந்த வாரத்தில் அவர்கள் சபையில் ஒரு கூட்டம் நடத்தியிருக்கக் கூடும் - தங்கள் சொந்தக் கூட்டம் ஒன்றை . அல்லது ஒருக்கால் அன்றிரவு ஆராதனை தொடங்கும் முன்னர், அவர்கள், கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கக் கூடும். அது இங்கே இருக்கும். அதை நான் இங்கு பெற்றிருப்பேன். நான், “அடுத்த வாரம் இந்த இடத்தில் ஒரு புயல் உண்டாகும் என்று இந்த தாளில் எழுதப்பட்டிருக்கிறது” என்று அறிவிப்பேன், அல்லது வேறெதாகிலும் ஒன்று நடக்கும் என்று. “அது அந்நிய பாஷையில் பேசப்பட்டு, இந்த சபையில் உள்ள இரு பரிசுத்தவான்களால் - சகோ. இன்னார் இன்னார், சகோ. இன்னார் இன்னார் அவர்களால் அர்த்தம் உரைக்கப்பட்டு இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதை ஆமோதிக்கும் வகையில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட்டுள்ளனர்.”இது தேவனால் உண்டாயிருக்க வேண்டும். அது இன்னின்னது, அது இன்னின்னது“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது என் முதல் பாகம். 107பிறகு நான் “சரி, இதற்காக நாம் ஆயத்தமாயிருப்போம், எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். பாருங்கள்? யாருக்காகிலும் விசேஷித்த விண்ணப்பம் உள்ளதா?” என்று கேட்டுவிட்டு, “நாம் ஜெபம் செய்வோம்” என்பேன். எழுந்து ஜெபித்த பிறகு, நேராக வார்த்தைக்கு சென்று விடுவேன். ஆராதனை முடிந்தவுடனே, பீட அழைப்பு கொடுக்கப்படும். பாருங்கள்? பீட அழைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். ஜனங்களை பீடத்தண்டையில் வரவழைத்தல், பீட அழைப்பு முடிந்த பிறகு, ஒருவேளை நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். அது போல் ஏதோ ஒன்று. ஆராதனை இவ்வாறு நன்றாக முடிவு பெறும், ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. 108அதைக் குறித்து தான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன் ... அந்த தூதன் என்னிடம் நடந்து வந்ததாக நான் அன்றிரவு கண்ட தரிசனம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த அறையில் நான் உட்கார்ந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது நள்ளிரவு. “தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு... என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அது எப்படி முடியும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அந்த ஒளி பிரகாசிப்பதை நான் கண்டேன். இதோ அவர் நான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு நடந்து வந்தார். பாருங்கள்? அப்பொழுது தான் இந்த கூட்டங்களுக்காக எனக்குக் கட்டளை கொடுத்தார். இப்பொழுது, இல்லை, செய்தியை அளிக்கும் நபர். அது உங்கள் கேள்வி என்று நினைக்கிறேன். “செய்தியை அளிக்கும் அந்த நபர், அவருக்கு ... ”செய்தியை அளிக்கும் அந்த நபர். அது கர்த்தருடைய தூதனா இல்லையா என்று அறிந்து கொள்ள முடியுமா?“ (ஒரு சகோதரன், “இப்பொழுது, கேள்வி என்னவெனில், தூதர் பாஷைகள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்... ”ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). அவரால் முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால், பாருங்கள். அவ்விதமாகத்தான் அதை நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். அது இருக்க வேண்டிய விதத்தில் அதை நாம் பெற்றிருப்போமானால், அதற்காக ஒரு வழக்கமான கூட்டத்தை நீங்கள் கொண்டிருப்பீர்களானால்.... 109பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியம் உண்டு. நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். நீங்கள் இங்குள்ள சபையோர், ஆனால் உங்களுக்கு ஒரு ஊழியம் உண்டு. உங்களுக்கு ஏதோ ஒன்றுண்டு, நீங்கள் தேவனுடைய ராஜ்யத்துக்கு உதவி செய்ய முயன்று. அதற்காக ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள், பாருங்கள், எனவே சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடுகிறீர்கள். ஆகையால்தான் மேய்ப்பர்களாகிய நாங்கள் ஒன்று கூடுகிறோம். எங்களுக்கு பொதுவாக ஏதோ ஒன்றுண்டு. சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடி, வேதத்தைப் படித்து, அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து. செய்தியை அளிக்கிறீர்கள், பாருங்கள். 110ஆனால், இப்பொழுது, இந்த மனிதன், அவர் உணர்ந்தால்.... அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார், அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரமுண்டு. நல்லது. அவர் கூட்டத்துக்கு வந்து.அந்நிய பாஷையில் பேசுகிறார், ஆனால் அதற்கு அர்த்தம் உரைக்கப்படுவதில்லை. அர்த்தம் உரைப்பவருக்கு அது என்னவென்று புரிவதில்லை. [ஒரு சகோதரன், “அப்படியானால் இந்த மக்கள் சரீரம் பக்தி விருத்தியடையச் செய்கின்றனர், ஆனால் மேய்ப்பர்கள், போதகர்கள் போன்ற உத்தியோகங்கள் சரீரத்தை பரிபூரணப் படுத்துகிறது என்றா கூறுகிறீர்? என்று கேட்கிறார் - ஆசி]. ஆம், அதற்காகத்தான் அவையுள்ளன, பரிபூரணப்படுவதற்காக பாருங்கள்? பரிபூரணப்படுவதற்கென்றே இவை அளிக்கப்பட்டுள்ளன. பாருங்கள். சபை பரிபூரணப்படுவதற்காகவே ஆவி அளிக்கப்பட்டுள்ளதென்று நான் நம்புகிறேன். 111இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிறவர்கள் ஆவியில் நிறைந்தவர்கள், அதில் சந்தேகமில்லை. இப்பொழுது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறார், அவர் இந்த கூட்டத்தில் அந்நிய பாஷையில் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அவர் அர்த்தம் உரைப்பவர்களுக்கு முன்னால் தான் இருக்கிறார், பாருங்கள், இருப்பினும் யாருமே அதற்கு அர்த்தம் உரைக்கவில்லை என்றால், எங்கோ தவறுள்ளது. அர்த்தம் உரைப்பவர் ஒன்றும் செய்ய முடியாது. பாருங்கள். அவர் ஆவியின் ஏவுதலினால் மட்டுமே அர்த்தம் உரைக்க முடியும். அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஆவியின் ஏவுதலினால் எப்படி பேசுகிறாரோ, அதே போல. அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரம் இருக்கலாம், ஆனால் வழக்கத்தில் உள்ள ஒரு பாஷையைப் பேசும் வரம் அவருக்கு இல்லை . அவர் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், அவர் இந்த அந்நிய பாஷையை உபயோகிக்கும் போது, அப்பொழுது அவர் காண்கிறார். இப்பொழுது, அவர் முயற்சி செய்யக் கூடாது. அவர் மறுபடியும் அதை பேசத் தொடங்கினால், அவர் பெருமையுள்ளவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் செய்யக் கூடாது... அவர் தொடக்கத்திலேயே தவறாயிருக்கிறார். பாருங்கள், அவரை அது எங்கும் கொண்டு செல்லாது. பாருங்கள், அவர் நினைக்கலாம், “நல்லது. தேவனுக்கு ஸ்தோத்திரம், அந்த ஆளுக்கு நான் பேசின பாஷைக்கு அர்த்தம் உரைக்க பிரியமில்லை. அவ்வளவு தான் ” என்று. இப்பொழுது பாருங்கள், அவர் தொடக்கத்திலேயேதவறாயிருக்கிறார். அங்கே தவறான நோக்கம், தவறான குறிக்கோளை உடையவராயிருக்கிறார். பாருங்கள்? 112ஆனால் அவர் இனிமையும் தாழ்மையும் உள்ளவராக இருப்பாரானால், அவர், “நல்லது, ஒருக்கால் கர்த்தர் தமது சேவையில் என்னை உபயோகிக்க விரும்பவில்லை. இருப்பினும் நான்.... இதன் மூலம் அவர் என் ஆத்துமாவை ஆசிர்வதிக்கிறார், அவர் நான் பக்திவிருத்தியடைய விரும்புகிறார். நான் அந்நிய பாஷையில் பேசும் போது அவருக்கு அருகில் நான் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். தோட்டத்துக்கு நடந்து சென்று, 'ஓ. தேவனே! என்பேன். அப்பொழுது வல்லமை என் மேல் விழுந்து, நான் அந்நிய பாஷையில் பேசி, புத்துணர்ச்சி பெற்றவனாய் உள்ளே வருவேன். ஓ, கர்த்தாவே, நீர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறீர். அந்நிய பாஷையில் பேசுவதன் மூலம் என்னை நேர்க் கோட்டில் வைத்திருக்கிறீர்” என்பார். பாருங்கள்? “கர்த்தாவே, இன்றைக்கு நான் அந்த மனிதனிடம் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாததற்காக என்னை மன்னிக்கவும், ஆண்டவரே. நான் அதை செய்யாமல் விட்டு விட்டேன், அப்படி நான் செய்திருக்கக் கூடாது. பிதாவே, என்னை தயவு கூர்ந்து மன்னிப்பீராக” என்பார். இப்பொழுது அது அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறது. “ஆ, வ்யூ, இப்பொழுது அதைக் குறித்து நல்லுணர்வு தோன்றுகிறது”. பாருங்கள், அப்படியானால் பரவாயில்லை, பாருங்கள், உங்களுடைய அந்த வரம் சபையில் உபயோகிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக. “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் பாருங்கள், அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லா விட்டால், அப்பொழுது... நான் கூறுவது விளங்குகிறதா? பாருங்கள், அது தான். அவனுக்கே அது தெரியாது. அவன் .... ஆனால் அவன் தவறாயிருக்கும் போது அதை அறிந்து கொள்கிறான். இப்பொழுது, இவ்விரண்டை நீங்கள் பிரிக்கும் வரைக்கும், இவை ஒன்றாக போகும்படி விட்டு விட வேண்டும். அந்த ஒன்றை தான் நீங்கள் செய்ய முடியும். அதன் காரணத்தால் தான் நான் நினைக்கிறேன் .... 113கொரிந்தியர் 14:5க்கு விளக்கம் தாருங்கள். இந்த வேதவசனத்தை யார் வேகமாக எடுக்க முடியும்? யாராகிலும் ஒருவர் எடுத்து விட்டாரா? (ஒலி நாடாவில் காலியிடம். ஒரு சகோதரன் 1 கொரி. 14:5ஐப் படிக்கிறார் - ஆசி). நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும் அந்நிய பாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். சரி, “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும் படி விரும்புகிறேன்' பவுல் என்ன சொல்ல முயல்கிறான் என்றால் .... உதாரணமாக சபை, நீங்கள் என் சபை. பவுலுக்கிருந்த சபைகளில் சில, இப்பொழுது நமக்கு இங்குள்ள அங்கத்தினர்களைப் போல் அவ்வளவு அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டதல்ல. சில வேளைகளில் பத்து அல்லது பன்னிரண்டு பேர். பாருங்கள்? பாருங்கள்? அவன், ”நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்“ என்கிறான். அது உங்களைத் திகைப்படையச் செய்து விட்டதல்லவா? பாருங்கள், அப்போஸ்தலர் 19ல் கூறப்பட்டுள்ள அந்த சபையில் ஏறக்குறைய ஒரு டஜன் அங்கத்தினர்கள் இருந்தனர் என்று நினைக்கிறேன். பாருங்கள்? வெகு சொற்பப் பேர், ஊழியக் களத்தில், பாருங்கள். அது எப்பொழுதுமே சிறுபான்மையோராக இருந்து வந்துள்ளது. அவர்கள் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய பன்னிரண்டு பேராயிருந்தார்கள் என்று அங்கு கூறப்பட்டுள்ளது (அப். 19:7) என்பதை நீங்கள் காணலாம். 114இப்பொழுது, நீங்கள் காண்பீர்களானால், பவுல் இங்கு, “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” என்கிறான். “நீங்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆயினும் அதற்கு அர்த்தம் உரைக்கப்படாவிட்டால், நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன் என்கிறான். அது எவ்விதம் அங்கு எழுதப்பட்டுள்ளது? யார்... அந்த வசனத்தை எடுத்து விட்டீர்களா? சரி, அதை நாம் மறுபடியும் படிப்போம். இப்பொழுது கவனியுங்கள். ஒரு சகோதரன் 1 கொரி. 14:5ஐப் படிக்கத் தொடங்குகிறார். “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும் படி விரும்புகிறேன்... - ஆசி). அங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். ”நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்“ (”நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்... “நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்” (ஏனென்றால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அந்நிய பாஷைகளைப் பேசுகிறவனிலும் மேன்மையுள்ளவன்...'] இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறதைவிட மேன்மையுள்ளது வேறெது? அங்கு தானே நீங்கள் என்னை நிறுத்தச் சொன்னீர்கள்? ஒரு சகோதரன், “அது வித்தியாசமான ... என்று நான் கூறிக் கொண்டிருந்தேன்” என்கிறார் - ஆசி). ஆம், பாருங்கள், ஆம். பாருங்கள்? 115இப்பொழுது. உதாரணமாக, கல்லாதவர் இருவர் இன்றிரவு நமது மத்தியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. நான் உள்ளே வருகிறேன், நீங்கள் எல்லோரும் ... இந்த கூட்டத்தை நாம் ஆரம்பித்தோம், நீங்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நல்லது. அது என்ன? பாருங்கள். அந்த கல்லாதவன், “ஊ! இவர்களெல்லாரும் பைத்தியக்காரர் - என்பான். பாருங்கள்? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனஞ் சொன்னால், இந்த கல்லாதவன் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை அவன் சொல்கிறான். இப்பொழுது, அந்த வசனத்தின் எஞ்சியுள்ள பாகத்தைப் படியுங்கள். அந்த சகோதரன் தொடர்ந்து படிக்கிறார். “... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்... - ஆசி). பார்த்தீர்களா? ”சொல்லாவிட்டால், பாருங்கள். நான் .... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். தொடர்ந்து படியுங்கள் ... சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு....). பார்த்தீர்களா? சபை பக்தி விருத்தி அடைகிறது. இப்பொழுது. வேறு விதமாகக் கூறினால், ஏன், சபை... இங்குள்ள இந்த ஆள்.... இங்குள்ள இத்தனை பேர் கல்லாதவர்என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் இன்றிரவு நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்; இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள நாமனைவருமே கர்த்தர் என்ன கூறப் போகிறார் என்பதை நாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லோருமே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். யாருமே ஒன்றும் சொல்லவில்லை. அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். பவுல், “நீங்கள் அறிய வேண்டியது... நான் .... அது நல்லது தான். நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷையில் பேசினீர்கள், அது நல்லது தான் என்கிறான். ஆனால் உங்களில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று ”கர்த்தர் உரைக்கிறதாவது, இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் நமக்கு அந்நியர். அவருடைய பெயர் ஜான்டோ. அவர் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறார். அவர் தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் இன்றிரவு இங்கு வந்துள்ள காரணம், அவர் உதவியை நாடுகிறார். அவர் இன்று டென்னஸியிலுள்ள மெம்பீஸில் ஒரு மருத்துவரைக் கண்டார். அவருக்கு சுவாசப் பைகளில் புற்று நோய் உள்ளதென்றும் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர் கூறிவிட்டார்' என்று கூறினால் எப்படியிருக்கும்? 116இப்பொழுது. உதாரணமாக, கல்லாதவர் இருவர் இன்றிரவு நமது மத்தியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. நான் உள்ளே வருகிறேன், நீங்கள் எல்லோரும் ... இந்த கூட்டத்தை நாம் ஆரம்பித்தோம், நீங்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நல்லது. அது என்ன? பாருங்கள். அந்த கல்லாதவன், “ஊ! இவர்களெல்லாரும் பைத்தியக்காரர் - என்பான். பாருங்கள்? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனஞ் சொன்னால், இந்த கல்லாதவன் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை அவன் சொல்கிறான். இப்பொழுது, அந்த வசனத்தின் எஞ்சியுள்ள பாகத்தைப் படியுங்கள். அந்த சகோதரன் தொடர்ந்து படிக்கிறார். “... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்... - ஆசி). பார்த்தீர்களா? ”சொல்லாவிட்டால், பாருங்கள். நான் .... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். தொடர்ந்து படியுங்கள் ... சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு....). பார்த்தீர்களா? சபை பக்தி விருத்தி அடைகிறது. இப்பொழுது. வேறு விதமாகக் கூறினால், ஏன், சபை... இங்குள்ள இந்த ஆள்.... இங்குள்ள இத்தனை பேர் கல்லாதவர்என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் இன்றிரவு நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்; இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள நாமனைவருமே கர்த்தர் என்ன கூறப் போகிறார் என்பதை நாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லோருமே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். யாருமே ஒன்றும் சொல்லவில்லை. அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். பவுல், “நீங்கள் அறிய வேண்டியது... நான் .... அது நல்லது தான். நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷையில் பேசினீர்கள், அது நல்லது தான் என்கிறான். ஆனால் உங்களில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று ”கர்த்தர் உரைக்கிறதாவது, இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் நமக்கு அந்நியர். அவருடைய பெயர் ஜான்டோ. அவர் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறார். அவர் தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் இன்றிரவு இங்கு வந்துள்ள காரணம், அவர் உதவியை நாடுகிறார். அவர் இன்று டென்னஸியிலுள்ள மெம்பீஸில் ஒரு மருத்துவரைக் கண்டார். அவருக்கு சுவாசப் பைகளில் புற்று நோய் உள்ளதென்றும் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர் கூறிவிட்டார்' என்று கூறினால் எப்படியிருக்கும்? 117“அதற்கு அர்த்தஞ்சொன்னாலன்றி பாருங்கள், அர்த்தம் சொல்லுதல் பக்திவிருத்தி உண்டாக்குகிறது. பாருங்கள்? அப்பொழுது அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் .... அந்த ஆள் வெளியே சென்று, ”உங்களிடம் ஒன்றைக்கூற விரும்புகிறேன். அந்த ஜனங்களிடம் தேவன் இல்லை என்று என்னிடம் கூறாதீர்கள். நிச்சயமாக அவர் இருக்கிறார்! அவர்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது' என்பார். பாருங்கள்? “ எனவே நமக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் அதனுடன் கூட அந்நிய பாஷைகளில் பேசும் வரங்களும் அவசியமாயுள்ளது. ஆனால் அந்நிய பாஷையில் பேசும் போது, அதற்கு அர்த்தம் சொல்லுதல் அவசியம். அதற்கு அர்த்தம் சொல்லும் போது அது தீர்க்கதரிசனமாகிவிடுகிறது. பாருங்கள்? அது தீர்க்கதரிசனம். அதைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது, அதை நாம் ஒரு நிமிடத்தில் பார்ப்போம், விரைவில் அதற்கு வருவேன் (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). 118மத்தேயு 18: 10. (ஒரு சகோதரன் மத்தேயு 18:10ஐப் படிக்கிறார் - ஆசி]. “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'. சரி. இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், பெயர்கள் எழுதப்படுவதில்லை, சிறு காகிதத் துண்டுகள் மாத்திரமே, பாருங்கள், இதைக் கேட்டவர் யாராயிருந்தாலும், நான் நிச்சயமாக இதை நீங்கள் இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம், பாருங்கள். ஆனால் நான் நினைக்கிறேன். இதன் விளக்கம்; “இதற்கு விளக்கம் தாருங்கள்” என்று என்னைக் கேட் பீர்களானால், இது தான் என் விளக்கம். இப்பொழுது நீங்கள் 2 கொரிந்தியருக்குத் திருப்புங்கள், யாராகிலும் 5: 1க்குத் திருப்பினால், “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும்” என்று எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது”. சரி. 119இப்பொழுது அவர் .... நீங்கள் மத்தேயு 18:10ஐக் கவனிப்பீர்களானால் அவர் “சிறு பிள்ளைகளைக் குறித்து இங்கு பேசுகிறார். அவர்கள் சிறு பிள்ளைகள், மூன்று அல்லது நான்கு வயதுள்ளவர்கள், அவர்களைக் கொண்டு வந்தார்கள். ”சிறு பிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். “சிறு பிள்ளைகள் என்பது ”சிறு பிள்ளை“ என்பதன் பன்மைச் சொல். சிறு பிள்ளை என்றால் சிறுவன் அல்ல - கைக்குழந்தை அல்ல, அதற்கும் பதின்மூன்று வயதுக்கும் இடையே உள்ள ஒரு பருவம். பாருங்கள்? அதுதானாக பொறுப்புள்ளதாயிருக்கும் பருவத்தை எட்டவில்லை. அவர், “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்றார். அந்த சொல்லுக்கு உண்மையான அர்த்தம் “மோசமாக நடத்தாதீர்கள்” (mistreat). பாருங்கள், “இவர்களில் ஒருவனை மோசமாக நடத்துதல்” ஒரு சிறு பிள்ளையை நாம் மோசமாக நடத்தக் கூடாது. அவர்கள் சிறு பிள்ளைகள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள், அவர், “அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்” என்றார். பார்த்தீர்களா? வேறு விதமாகக் கூறினால், அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய சரீரங்கள், அவர்கள் மரித்தால் அவர்கள் செல்லவிருக்கும் அந்த தூதனைப் போன்ற சரீரங்கள், பரலோகத்தில் என் பரமபிதாவின் சமுகத்தில் எப்பொழுதும் இருக்கின்றன“. பாருங்கள்? 120இப்பொழுது, “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும் நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது” அது சரியா? அது ஒரு சரீரம். இங்கு பாருங்கள். இதை விவரிக்க எனக்கு மட்டும் நேரமிருந்தால்! எனக்கு நேரமில்லை என்பதை அறிவேன். ஆனால், 'இங்கே, இதை ஒலிப்பதிவு செய்வதால், இதை சிறிது விளக்குகிறேன், அப்பொழுது நீங்கள் எப்படியும் புரிந்து கொள்வீர்கள். பாருங்கள், ஒரு இரவு பேதுரு சிறையிலிருந்தான். அவர்கள் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானின் வீட்டில் ஜெபக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். கர்த்தருடைய தூதன் - அந்த அக்கினி ஸ்தம்பம் - சிறைச் சாலைக்குள் வந்தார். ஒரு வெளிச்சம் இறங்கி வந்தது. அந்த ஒளி அவனிடம் வந்த போது.பேதுரு சொப்பனம் காண்கிறதாக நினைத்தான். அது... வேதம், “அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது” என்கிறது (அப். 12:7). பாருங்கள்? நம்முடன் இன்றுள்ளவரும் அவரே என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள், அவர் இறங்கி வந்தார். நாமும் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டால், அதே விதமாக நமக்கும் நேரிடலாம். பாருங்கள்? அவர் அங்கு வந்து, “என் பின்னே வா” என்றார். எனவே பேதுரு, “இப்பொழுது நான் சொப்பனம் கண்டு கொண்டிருக்கிறேன், இந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்” என்று எண்ணினான். அவன் காவலாளர்களைக் கடந்து சென்றான். அவன் “உ - ஊ. இப்பொழுது நான் நடந்து கொண்டே செல்கிறேன். கதவுதானாக திறக்கிறதே என்று எண்ணினான். அவன் அடுத்த காவலுக்குச் செல்கிறான், அதுவும் தானாக திறவுண்டது. அவன் நகர வாசலை அடைந்த போது, அதுவும் தானாக திறவுண்டது. பேதுரு சொப்பனம் காண்கிறதாக அப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு நின்ற போது, ”நல்லது. இப்பொழுது நான் விடுதலையாகி விட்டேன். எனவே நான் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான் வீட்டுக்குச் சென்று அங்கு ஐக்கியத்தில் கலந்து கொள்வேன்“ என்றான். 121அவர்கள் அங்கு, “ஓ கர்த்தாவே, உமது தூதனை அனுப்பி பேதுருவை விடுவியும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய அதே நேரத்தில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. சகோ. பிரான்ஹாம் தட்டுகிறார் - ஆசி]. ஒரு பெண் கதவண்டையில் வந்து, “யார் அங்கே? என்று கேட்டாள். அவள் ஜன்னல் சட்டங்களைத் திறந்து பார்த்த போது அது பேதுரு என்று அறிந்து கொண்டாள். அவள் திரும்பிச் சென்று நீங்கள் ஜெபம் பண்ணுவதை நிறுத்திக் கொள்ளலாம், பேதுரு அங்கு நின்று கொண்டிருக்கிறார்” என்றாள். அவன், “இது என்ன! திறவுங்கள். நீங்கள் - நீங்கள்...' என்றான். பாருங்கள்? [சகோ. பிரான்ஹாம் மறுபடியும் தட்டுகிறார் - ஆசி]. அவன் “கதவைத் திறவுங்கள், நான் உள்ளே வர வேண்டும்” என்றான். எனவே அவன் சொன்னான் ....அவள் திரும்பவும் வந்து, “கதவண்டையில் நின்று கொண்டிருப்பவர் பேதுருதான்” என்று சாதித்தாள். அவர்கள், “ஓ, அவர்கள் பேதுருவை ஏற்கனவே சிரச்சேதனம் செய்து விட்டார்கள். அது அவருடைய தூதன்” என்றனர். பாருங்கள், பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்த போது, அவன் அதை பெற்றுக் கொண்டான் என்று அவர்கள் எண்ணினர். ஏனெனில் அவன் வருவதற்காக அது பரலோகத்தில் காத்திருந்தது. அன்றொரு நாள் நான் கடந்து சென்று அந்த தரிசனத்தைக் கண்டேன். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால், நமக்கு வேறொன்று இருக்கிறது”. இந்த சிறுவர்கள் பாவமே செய்யாதவர்கள், பாருங்கள் ... பாருங்கள்? 122ஒரு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் போது, அது அங்கு வைக்கப்பட்ட வுடன் ... பாருங்கள்? பாருங்கள்? ஆனால், அது முதலில் ஆவியாயுள்ளது. அந்த ஆவி மாம்சத்தை தரித்துக் கொள்ளும் போது, ஒரு சிறு ஜீவகிருமி மாம்சத்தைத் தரித்துக் கொண்டு, அதன் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும் போது... கர்ப்பத்தில் அது உதறுகின்றது. குலுக்குகின்ற சிறு தசைகளைக் கொண்டதாயுள்ளது. அது நமக்குத் தெரியும். அவை ஜீவ அணுக்கள். ஒரு குதிரை மயிரை நீங்கள் தண்ணீரில் போட்டால், அது மிதக்கி, அசைந்து கொண்டிருக்கும். அதை நீங்கள் தொடும் போது அது குதிக்கும். அப்படித் தான் தாயின் வயிற்றிலுள்ள ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் அது இந்த உலகத்தில் பிறந்து அதன் முதல் சுவாசத்தை சுவாசிக்கும் போது, அது ஜீவாத்துமாவாகிறது. பாருங்கள்? ஏனெனில் பூமிக்குரிய சரீரம் இவ்வுலகில் பிறந்தவுடனேயே, அதை ஏற்றுக் கொள்ள வானத்துக்குரிய ஒரு சரீரம், ஆவிக்குரிய சரீரம் ஒன்றுள்ளது. மாம்சத்துக்குரிய சரீரம் விழுந்தவுடனே, அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால் அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. ஒரு குழந்தை பூமிக்கு மாம்சத்தில் வந்தவுடனே, அதை ஏற்றுக் கொள்ள ஆவிக்குரிய சரீரம் ஒன்று காத்திருக்கிறது. இந்த ஆவிக்குரிய சரீரம்...மாம்சத்துக்குரிய சரீரம் அழிந்து போனவுடனே, ஆவிக்குரிய சரீரம் ஒன்று மறுபுறத்தில் காத்திருக்கிறது. பாருங்கள்? அதை நாம் 'தியாஃபனி' (theophany) என்று அழைக்கிறோம், பாருங்கள், தியாஃபனி. (ஒரு சகோதரன், “நல்லது, அப்படியானால், இந்த சரீரம் உயிர்த்தெழும் வரைக்கும், அது ஒரு தற்காலிகமான சரீரமா? என்று கேட்கிறார் - ஆசி]. ஆம், பாருங்கள்? ஆம். ஓ, ஆமாம். (”உயிர்த்தெழுதல்வரைக்கும் அந்த நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போமா?] அது சரி. பாருங்கள்? பாருங்கள்? 123அது இன்னும் மனுபுத்திரருக்கு வெளிப்படவில்லை. நான் நினைக்கிறேன். அதை நான் கண்டேன் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? ஆனால் அது என்ன விதமான சரீரம் என்று எனக்குத் தெரியவில்லை, உங்கள் கைகளையும் மற்ற உறுப்புகளையும் உணர முடிவதைப் போல அவர்களையும் என்னால் தொட்டு உணர முடிந்தது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது. நான் உலகத்தை விட்டுச் சென்று அநேக ஆண்டுகள் கழித்தும் இதை நீங்கள் போட்டுக் கேட்க வகையுண்டு. பாருங்கள்? ஆனால்... அது என்னவாயிருப்பினும், அந்த ஜனங்களை நான் தழுவினேன், அவர்கள் கைகளைப் பிடித்தேன். நீங்கள் தத்ரூபமாயிருப்பது போல் அவர்களும் தத்ரூபமாயிருந்தனர். இருப்பினும் அது .... அவர்கள் புசிக்கவில்லை, குடிக்கவில்லை, அங்கு நேற்று என்றோ நாளை என்றோ இருக்கவில்லை. பாருங்கள், அது நித்தியம். இப்பொழுது, அந்த கூடாரம் ... அவர்கள் அந்த சரீரத்தில் புறப்பட்டு, பூமிக்குத் திரும்ப வருகின்றனர், அந்த விதமான சரீரத்தில் அவர்கள் அழியாமையைப் பெற்றிருந்தனர். பூமியின் மண்ணானது எப்படியோ அந்த 'தியாஃபனியாக ஒன்று கூடி, அவர்கள் மீண்டும் மானிடராக, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசித்ததைப் போல் புசிக்கின்றனர். பாருங்கள்? “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக ஒன்று ஏற்கனவே காத்திருக்கிறது. 124எனவே பாவமே இல்லாத இந்த சிறு பிள்ளைகள் - அவர்களுக்கு இன்னும் பாவம் இருக்கவில்லை - அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய “சரீரங்கள்” (பேதுரு அந்த சரீரத்தில் திரும்பி வந்ததாக கருதப்பட்டான்...) காத்திருக்கின்றன. “பரலோகத்தில் பரம பிதாவின் சமுகத்தை தரிசித்தவைகளாய்” அவைஎப்பொழுதும் அவருடைய சமுகத்தில் உள்ளன. அவர்கள் அதை அறிந்திருக்கின்றனர். ஒரு சகோதரன், “இயேசு அவருடைய உயிர்த்தெழுதலின் முதலாம் கட்டத்தில் 'என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறப் போகவில்லை' என்று சொல்லிவிட்டு அதன் பிறகு அறைக்குள் வந்தபோது தோமாவிடம் 'உன் கையை நீட்டி என் விலாவிலே போடு' என்று சொன்னதைப் புரிந்து கொள்ள சிறிது கடினமாயுள்ளது என்கிறார் - ஆசிர. அது உண்மை . அவர் இன்னும் ஏறிப் போகவில்லை. (”ஓரிடத்தில் அவர், அவரைத் தொட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தோமாவிடம் அருகில் வந்து அவரைத் தொடும்படி சொல்லுகிறாரே, இவ்விரண்டிலும் வேறுபாடு காணப்படுகிறதே). அவர் இன்னும் ஏறிப் போகவில்லை, பாருங்கள். நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை) 125அது உண்மை, பாருங்கள், அது வரைக்கும் அவர் தொடப்படக் கூடாது. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின்பு. அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்து மனிதர் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்தார், அவர் இன்னும் ஏறிப் போகவில்லை. அவர் சொன்னார். அவர் மரியாளிடம், “என்னைத் தொடாதே” என்றார். அவள், “ரபூனி” என்றாள். அவர், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன்” என்றார். அதன் பிறகு அன்றிரவு - அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த பிறகு - தேவனுடைய சமுகத்துக்கு ஏறிப் போனார். அங்கிருந்து திரும்பி வந்து, அவரைத் தொடும்படி தோமாவை அழைத்தார். பாருங்கள், அவர் தேவனிடத்திற்கு ஏறிப் போனார். அது உண்மை . சரி. 126கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில், 'அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்“ என்று கூறப்பட்டுள்ளது. வெப்ஸ்டர் அகராதியில் தீர்க்கதரிசனம் உரைத்தல்: வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைத்தல், முக்கியமாக தெய்வீக ஏவுதலினால்' என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி... ஆம், அப்படித்தான் வெப்ஸ்டர் கூறியுள்ளார், அதை தான் அந்த சகோதரன் கேட்டார். வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைக்காத செய்தி ”தீர்க்கதரிசனம்“ என்று அழைக்கப்படலாமா? இல்லை, ஐயா... “தீர்க்கதரிசனம் உரைத்தல்” என்றால் “முன்னுரைத்தல்” பாருங்கள்? சரி. 127இப்பொழுது, 1 கொரிந்தியர் 14:27ன் படி, அந்நிய பாஷைகளில் அளிக்கப்படும் எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும், எந்த ஒரு ஆராதனையிலும் அந்நிய பாஷைகளில் மூன்று செய்திகளுக்கு மேல் கொடுக்கப்படக் கூடாதென்று நினைக்கிறேன். அப்படித் தான் வேதம் கூறுகிறது. அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அதை நாம் அதைக் குறித்து நமக்கு நன்றாகத் தெரியும், பாருங்கள். அது ... ஆம், ஐயா, அது... மூன்று பேர் மட்டும் அது 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் உள்ளது. பாருங்கள்? அது உண்மை. “மூன்று பேர் மட்டும். சகோதரரே, அதை உங்கள் கூட்டங்களில் கவனித்துக் கொள்ளுங்கள். அநேகம் பேர் அந்நிய பாஷையில் பேச முற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.. அவர்களுக்குப் பரிசுத்த ஆவி இல்லை என்று இப்பொழுது சொல்லி விடாதீர்கள். கொரிந்து சபையை ஒழுங்குபடுத்துவதற்காக பவுல் சென்றிருந்தான். அது நம்மெல்லாருக்கும் தெரியும், இல்லையா? அதை அவன் ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டியதாயிருந்தது. அவன், ”சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப் படக்கடவது “ என்றான் (1 கொரி. 14:40). நீங்கள் கவனிப்பீர்களானால், பவுலுக்கு கொரிந்து சபையினால் எப்பொழுதுமே தொல்லை உண்டாகிக் கொண்டிருந்தது. அந்த விதமாக அவனுக்கு.... அவன் எபேசு சபைக்கு அப்படிப்பட்ட எதையும் கூறவில்லை, அவர்களுக்கு அவன் நித்திய பாதுகாப்பைக் குறித்து போதித்தான். ஆனால் கொரிந்து சபைக்கு அவன் எழுதின நிரூபத்தில், நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே காணப்படவில்லை. அவர்கள் எப்பொழுதுமே குழந்தைகளாயிருந்தனர் - “ஒருவன் அந்நிய பாஷையைப் பேசுகிறான்.ஒருவன் சங்கீதம் பாடுகிறான் என்பதாய் (1 கொரி 14:26). அது சரியல்லவா? பாருங்கள்? உங்கள் சபையோர் அவ்விதம் தொடங்கும் படி நீங்கள் விட்டு விடுவீர்களானால்.... 128மார்டின் லூத்தரைப் போல. அவர் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசினார். அவர் தன்னுடைய நாள் குறிப்பு புத்தகத்தில் (diary), “நான் அந்நிய பாஷையில் பேசினேன். ஆனால் அதை நான் என் ஜனங்களுக்குப் போதித்தால், அவர்கள் வரத்தைக் கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரத்தை நாடிக் கொண்டிருப்பார்கள்” என்று எழுதி வைத்தார். அவர் கூறினது உண்மை , பாருங்கள், அவர்கள் வரத்தை கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரங்களை நாடுவார்கள். அதை தான் ஜனங்கள் பெற்றுக் கொள்கின்றனர், அவர்களை அந்நிய பாஷையில் பேச அனுமதிக்கும் போது, அவர்கள் பெருமை கொள்கின்றனர். அது தேவனால் உண்டாகாமல் போனால்... அது ஒன்றுமில்லாமல் போய் விடும். ஆனால் நாம்... நவீன சபைகள் அதை தலைகீழாக செய்து விடுகின்றன, நாமோ அவ்விதம் செய்வதில்லை. அது தேவனுடைய வரம் என்றும், அது தேவனுடைய ஆவியால் அங்கு அளிக்கப்படக் கூடும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். சகோ. ராய், அப்படித் தானே? அது உண்மை . ஆம், ஐயா. அதை சபையில் வையுங்கள்! அதுசபைக்கு உரிமையானது. அந்நிய பாஷையில் பேசும் வரம் தேவனுடைய சபைக்கு உரிமையான ஒன்று. இப்பொழுது, அவருடைய கேள்வி என்னவென்று பார்ப்போம். அது என்ன கூறுகிறதென்றால்: எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்... அது சரி... அதுவும் முன்று பேர் மட்டில் என்று நினைக்கிறேன். 129அது சரி, பாருங்கள், ஏனெனில் நீங்கள் அதற்கு மேல் அனுமதித்தால் ... உதாரணமாக, நீங்கள் கூட்டம் ஒன்றை நடத்துகிறீர்கள் என்றும், நாமெல்லாரும் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். இவரை அந்நிய பாஷையில் பேசவிட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை அந்நிய பாஷையில் பேசவிடுவதனால் என்ன பயன்? நாமெல்லாரும் மிகுந்த குழப்பமடைந்து, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்என்பதை அறியாமல் இருப்போம். பாருங்கள்? மூன்று பேர். மட்டில்... உதாரணமாக, ஹாலின் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார்.... அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் அந்நிய பாஷைக்கு நீங்களே அர்த்தம் உரைக்கலாம், இல்லையென்றால் அதற்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்கலாம். இப்பொழுது நீங்கள்.... “அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்” (1 கொரி. 14:13). அவன் தான் பேசின அந்நிய பாஷைக்கே அர்த்தம் உரைப்பதென்பது, வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைப்பது எவ்வளவு முறையோ, அவ்வளவு முறையானது. ஆனால், அந்நிய பாஷையில் பேசுவதற்கு முன்பு, அங்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருந்தாக வேண்டும். அந்நிய பாஷையில் பேசுகின்ற சிலர் அங்கு இருந்து அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதற்கு நீங்களே அர்த்தம் உரைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். 130நீங்கள் பெருமைக்காக அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் பக்திவிருத்திக்காகவே இதை செய்கிறீர்கள், பாருங்கள். பெருமைக்காக செய்யாதீர்கள். தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்கும் ஏதுவாக அப்படிச் செய்யுங்கள். பாருங்கள், இவையனைத்தும் ஒரு பெரிய நோக்கத்துக்காக, சகோதரனே. இந்த வரங்கள் தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்காகவும், ஜனங்களை தேவனிடத்தில் கொண்டு வருவதற்காவும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவுமே. அவர் மரித்துப் போன தேவன் அல்ல, அவர் ஜீவனுள்ள . தேவனாய் நமது மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். பாருங்கள்? அதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம், ஏனெனில் உண்மையான வரங்கள் கிரியை செய்வதைக் காண்பதை பிசாசு வெறுக்கிறான். வரங்கள் பலவீனமானவை, எனவே இந்த வரங்களை அவன் உபயோகித்து அவனால் கிரியை செய்ய முடியும். என்னே, ஓ.என்னே. இவை ஒவ்வொன்றையும் அவனால் உண்மையில் பாவனை செய்ய முடியும். அதன் காரணத்தால் தான் ..... 131இப்பொழுது பாருங்கள், தீர்க்கதரிசன வரம் பெற்றுள்ள ஒருவருக்கும். ஒரு தீர்க்கதரிசிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் அளிக்கப்படுவதற்கு முன்பு ... தீர்க்க தரிசன வரம் பெற்ற ஒருவர் என்ன கூறினார் என்பதை சபைக்கு அறிவித்து, இரண்டு அல்லது மூன்று பேர் அதை பகுத்தறிந்து, அது உண்மை என்பதை ஆமோதிக்க வேண்டும். ஆனால் தீர்க்கதரிசிக்கு அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? தீர்க்கதரிசி என்பது ஒரு உத்தியோகம். தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம். ஒரு தீர்க்கதரிசி பிறப்பின் போதே தீர்க்கதரிசியாகப் பிறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறான், சகோதரனே. அது தான் தீர்க்கதரிசி. ஆனால் தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம், பாருங்கள். ஒன்று தேவனால் அளிக்கப்பட்ட உத்தியோகம். மற்றது தேவனால் அளிக்கப்பட்ட வரம். பாருங்கள்? அது தான் வித்தியாசம். 132இப்பொழுது, செய்திகள் இவ்விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக, சகோ. ஜூனி இன்றிரவு அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அர்த்தம் உரைப்பவர் என்று நமக்குத் தெரியும். சகோ. நெவிலும் அர்த்தம் உரைப்பவர் , பாருங்கள், பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பவர். நல்லது. அது நமக்குத் தெரியும். இன்றிரவு இங்கு நாம் உட்கார்ந்து கொண்டிருக்கையில், ஓ, தேவ ஆவியானவர் பேசுவதற்கு துடி துடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னே! நாம். இதை நாம் பெற்றிருக்கிறோம்... சபை ஆராதனை இன்னும் சில நிமிடங்களில் துவங்கப் போகின்றது. பாருங்கள், அது துவங்குவதற்கு முன்பாக நாம் கூடியிருக்கிறோம். இங்கு நாம் கடைபிடிக்கும் ஒழுங்கின் பிரகாரமாகவே இதை வரிசைப்படுத்தி கூறிக் கொண்டிருக்கிறேன். - நல்லது. முதலாவதாக என்ன தெரியுமா, சகோ. ரட்டல் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார். அவர் பேசி முடித்தவுடன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள்? ஜூனி குதித்தெழுந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னின்ன காரியம் நடக்கப் போகிறது” என்கிறார், அல்லது இங்குள்ள யாராகிலும் ஒருவரைக் குறித்து சொல்லுகிறார். அப்பொழுது பதிவாளர்கள், என்ன கூறப்பட்டதோ அதை எழுதிக் கொள்கின்றனர்; உ - ஊ , இதை வேகமாக பார்ப்போம்.... அவர் என்ன சொன்னார் என்பதை.சரி, அது மறுக்கப்பட்டால், அதை விட்டு விடுங்கள், பாருங்கள், அதை கிழித்துப் போட்டு விடுங்கள். ஆனால் அது மறுக்கப்படவில்லை என்றால், அதை இரண்டு பேர் அங்கீகரிக்கின்றனர். அதன் பிறகு அது இங்கு எழுதப்படுகின்றது. அந்த இரண்டு பேர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். பாருங்கள்? அது - அது - அது உங்கள் சபைக்கு. அது ... உங்கள் நன்மைக்காகவே இதை எல்லாம் உங்களிடம் கூறுகிறேன், பாருங்கள், அவர்கள் அவ்விதம் தொடக்கத்திலே செய்தார்களோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. - 133முதலாவதாக என்ன தெரியுமா, ஹாலின் குதித்தெழுந்து அந்நிய பாஷையில் பேசுகிறார். அர்த்தம் உரைக்கிறவர் முன்பு கூறின அதே செய்தியை கூறலாம். பாருங்கள். அது அதே செய்தியாக இருக்கக் கூடும், நடக்கப் போகிற ஒரு குறிப்பிட்ட காரியம், ஒரு தீர்க்கதரிசனம், பாருங்கள். நடக்கவிருக்கும் ஏதோ ஒரு சம்பவம், அல்லது நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒன்று. பின்னால் உள்ள சகோ. ராபர்ஸன் குதித்தெழுகிறார். அவரும் அந்நிய பாஷையில் பேசுகிறார். சரி, அதுவும் முன்பு மற்றவரால் அளிக்கப்பட்ட அதே செய்தியாக இருக்கக் கூடும், அதற்கு அதே அர்த்தம் உரைக்கப்படக்கூடும். அல்லது இவை மூன்று வெவ்வேறு செய்திகளாக இருக்கலாம். இப்பொழுது, தேவன் ஒரே இரவில் ஐம்பது செய்திகளை அளிக்கமாட்டார். அது நமக்குத் தெரியும், ஏனெனில் அதை நம்மால் கிரகித்துக் கொள்ள முடியாது. பாருங்கள்? ஆனால் சபையை ஏதாகிலும் துன்புறுத்திக் கொண்டிருந்தால், உதாரணமாக.... அல்லது அது எதாகிலும் ஒன்றைச் செய்து கொண்டிருந்தால், அது சபை சீர்பொருந்துவதற்காகவே, பாருங்கள்? அதற்கு மேல் நான் அந்நிய பாஷையில் பேசுவதை அனுமதிக்க மாட்டேன் , பாருங்கள். ஏனெனில் மூன்று பேர் மட்டில் என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? 134மூன்று பேர் மட்டில். அதன் பிறகு நான், “அவைகளை எழுதி பிரசங்க பீடத்தின் மேல் வைத்து விடுங்கள்' என்பேன். பாருங்கள்? பிறகு அடுத்த நாள் இரவு நாம் மறுபடியும் கூடுகிறோம். இன்றைக்கும் நாளை இரவுக்கும் இடையே ஏதாகிலும் ஒன்று நடக்க விருந்தால் தேவன் அச்செய்திகளில் ஒன்றில் அதை கூறியிருப்பார். நான் கூறுவது விளங்குகிறதா? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும். இப்பொழுது நான் நினைக்கிறேன். வெப்ஸ்டர் என்ன கூறுகிறார் என்றால், தீர்க்கதாசினமானது...வரப்போவதை முன்னுரைக்காத செய்தி தீர்க்கதரிசனம் என்று அழைக்கப்படலாமா? இல்லை, அது தீர்க்கதரிசனமாக, தீர்க்கதரிசனம் உரைத்தலாக இருக்குமானால், அது வரப்போவதை அறிவிக்க வேண்டும். அது உண்மை . 135சரி. நான் நினைக்கிறேன். இதுவே கேள்வியின் கடைசி பாகம் என்று நினைக்கிறேன். நாம் அடுத்த கேள்விக்குச் செல்வோம். சகோதரன் பிரான்ஹாமே, இவைகளில் ஏதாவதொன்று... இது தட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது, இது அழிந்து போயிருக்கிறது.... சகோ. பிரான்ஹாமே, இக்கேள்விகளில் ஏதாவதொன்றுக்கு பதில் சொல்லவோ அல்லது விளக்கம் கூறவோ உங்களுக்கு ஏவுதல் இல்லாமல் போனால், அதை ஒருபுறம் தள்ளி வைத்து விடுங்கள். நான் தவறாக நினைக்கவே மாட்டேன். வேதத்தின்படி, ஒரு டீகனின் முழு வேலை என்ன? நல்லது, அவர்கள் அதை அங்கு வைத்திருக்கின்றனர். அது. இக்கேள்வியைக் கேட்டது நமது சபையின் டீகன்மார்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும். கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு என்னவென்பதை அங்கு எழுதி வைத்திருக்கின்றனர். அதில் இன்னும் நில நகல்களை எடுத்து, நமது டீகன்மார்கள் ஒவ்வொருவருக்கும் அதை கொடுக்க வேண்டும் - நம்மிடம் வேறு பிரதிகள் இல்லையென்றால், ஜீன், நாம் ஒரு நகல் எடுக்க முடியுமா என்று வியக்கிறேன் .... அல்லது நீங்கள், அல்லது சகோ. லியோ யாராகிலும் ஒருவர். ஏழு அல்லது எட்டு நகல்கள் எடுத்து அவைகளை நமது டீகன்மார்களுக்குக் கொடுங்கள். வேதத்தின்படி, ஒரு மகன் என்ன செய்ய வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது. 136ஒழுங்குக்கு அப்பாற்பட்ட தீர்க்கதரிசனம் உரைத்தல், அல்லது அந்நிய பாஷையில் செய்தி அளித்தல் இருக்குமானால், அதை நாம் எவ்விதம் திருத்த வேண்டும்? இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, பாருங்கள். இதைக்கேட்ட மகனே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக, ஏனெனில் இது ஒரு நல்ல கேள்வி. அதை நீங்கள் ரப்பர்கையுறையைக் கொண்டு கையாள வேண்டும். இப்பொழுது, நீங்கள் ஒரு ... இங்குள்ள நமது சபைக்கு யாராகிலும் ஒருவர் வந்து ஒழுங்கின்படி இல்லாத அந்நியபாஷையில் ஒரு செய்தியையோ அல்லது தீர்க்கதரிசனமோ உரைப்பாரானால், அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. பாருங்கள்? நீங்கள். அவர்கள் ஒழுங்கில் இல்லை என்று அவர்களுக்குத் தெரிகிறது, அது ... ஆராதனையை பாழாக்கி விடக் கூடும். பாருங்கள்? அவ்விதம் அது பாழாக்குகிறதென்றால், டீகன்மார்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம், அமைதலாயிருப்பதே. பாருங்கள். ஏனெனில் மேடையின் மேலுள்ள தீர்க்கதரிசி தான் உண்மையில்... நீங்கள் அவருக்குப் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் அவருக்கு போலிஸ்காரர்கள், நீங்கள் சுற்றிலும் காவலராய் இருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது, அது யாராகிலும் நம்முடைய ... அது யாராகிலும் நம்முடைய சபையைச் சேர்ந்தவர்களாயிருந்தால், அந்த நபர் இதைக் குறித்து பயிற்சி பெறாதவர், பாருங்கள், அவர்கள் பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். நமது ஜனங்களுக்கு எவ்விதம் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று நமக்குத் தெரியும். ஆனால் அது நமது சபையில் இல்லாத ஒருவராக இருக்குமானால், அந்த நபர் எவ்விதம் பயிற்சி பெற்றிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது. 137உதாரணமாக... கலிபோர்னியாவிலுள்ள கோஸ்டா மீஸா என்னுமிடத்தில் நடந்த சம்பவம். பில்லிக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் பீட அழைப்பு கொடுக்க ஆயத்தமான போது, ஒரு ஸ்திரீ குதித்தெழுந்து, உட்பாதையில் மேலும் கீழும் ஓடி, அந்நிய பாஷையில் பேசி, பீட அழைப்பை சுக்குநூறாக கிழித்தெறிந்தாள். நான் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. ஆவியானவர் துக்கமடைந்ததை நீங்கள் அங்கு காணலாம். ஒழுங்கின்படி ஒன்று இருக்குமானால், அது தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தாது. பாருங்கள்? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) … அவள் தொடங்க ஆயத்தமாவதற்கு முன்பே அவள் தன்னை எவ்விதம் ஆயத்தப்படுத்திக் கொண்டாள்! ஏனெனில் அவளை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். ஒழுங்கின்படி இல்லாத ஒன்றைக் காணும் போது, எந்த ஊழியக்காரனும் அவ்விதமே செய்வார். அந்த ஸ்திரீ புறப்பட்டுச் சென்று பில்லியிடம் கூறினாளாம், அன்றிரவு நாங்கள் திரும்பி வரும் போது பில்லி என்னிடம், “அப்பா, பீட அழைப்பை இரண்டு இரவுகள் தடை செய்த அந்த ஸ்திரீ உங்களுக்கு ஞாபகமுள்ளதா?” என்று கேட்டான். நான், “ஆம்” என்றேன். அவன், “அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் 'தேவனுக்கு மகிமை, பில்லி, இன்றிவு என்னிடம் வேறொரு செய்தி உண்டு' என்றாள்” என்றான். நல்லது, பாருங்கள், அவளை கூட்டத்தினரின் மத்தியில் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். அங்கு டானி மார்டன் சுகமடைந்ததைக் குறித்துதான் 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிக்கை 'டானி மார்டினுக்கு நடந்த அற்புதம் என்னும் தலைப்பில் வெளியிட்டது. எனவே அந்த ஸ்திரீயை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன், பீட அழைப்பைக் கொடுக்க நான் தொடங்கின் போது, அவள்... அவள் சரியான பயிற்சி பெறவில்லை; அவள் நல்லவள் என்பதில் சந்தேகமில்லை. அவள் சுற்றுமுற்றும் பார்த்து, தலைமயிரை ஒதுக்கிக் கொண்டாள். அவள் கலைமயிரை கத்தரித்துக் கொண்டிருந்தாள். அப்படியானால் அவள் அதை அனுமதிக்கும் அசெம்பிளீஸ் சபையையோ அல்லது வேறெதாவது சபையையோ சேர்ந்திருக்க வேண்டும். அவள் தலைமயிரை மேலே கட்டிக் கொண்டு, காலுறையை இழுத்து விட்டுக் கொண்டு ஆயத்தமானாள். நான் பீட அழைப்பைக் கொடுக்கத் துவங்கின நேரத்தில் ... நான், “இங்குள்ள எத்தனை பேர் முன்னால் வந்து உங்கள் இருதயங்களை கர்த்தராகிய இயேசுவுக்கு அளிக்க விரும்புகிறீர்கள்?” என்றேன். 138அவள் குதித்தெழுந்தாள். நான், “உட்காரு” என்றேன். அவள் மறுபடியும் செய்யத் தொடங்கினாள். நான், “உட்காரு” என்றேன். பாருங்கள்? என்னே, எல்லோருமே ... நான் அமைதியாக நின்றேன். அவள் நான் சொன்னதைக் கேளாதது போல் மறுபடியும் எழும்பினாள். நான் மறுபடியும் கூச்சலிட்டேன். இந்த முறை அவளுக்கு கேட்டது. ஏனெனில் அங்கிருந்த பெரிய ஒலிபெருக்கியின் மூலம் நான் போட்ட சத்தம் கட்டிடத்தையே குலுக்கியிருக்கும். அவள் உட்கார்ந்து கொண்டாள். நான் தொடர்ந்து, “நான் கூறின் வண்ணமாக, எத்தனை பேர் பீடத் தண்டையில் வந்து உங்கள் இருதயங்களை தேவனுக்கு அளிக்க விரும்பிகிறீர்கள்?' என்றேன். நான் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினேன். பாருங்கள். அன்றிரவு நான் வண்டியில் புறப்பட ஆயத்தமான போது, ஒரு கூட்டம் ஸ்திரீகள் என்னைச் சூழ்ந்து கொண்டு, கோழிக்குஞ்சுகளின் கூட்டம் சத்தமிடுவதைப் போல், “நீங்கள் பரிசுத்த ஆவியை நிந்தித்து விட்டீர்கள்” என்றனர். - நான், “நானா? வேதம் கூறியுள்ள ஒழுங்கை நான் பின்பற்றும் போது, நான் எப்படி பரிசுத்த ஆவியை நிந்திக்க முடியும்?” என்று கேட்டேன். பாருங்கள்? இந்த ஸ்திரீ, “நான் தேவனிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியைப் பெற்றிருந்தேன்” என்றாள். நான், “ஆனால், அதை தவறான நேரத்தில் கொடுத்தீர்கள், சகோதரியே” என்றேன். “அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல என்றா கூறுகிறீர்கள்?” என்றாள். நான், “என்னால் சொல்ல முடியாது. அது அவரிடமிருந்து வந்தது என்று நினைக்கிறேன். உன் நன்மைக்காக இதை சொல்லுகிறேன். அது அவரிடமிருந்து வந்தது என்று நினைக்கிறேன். நீ ஒரு நல்ல பெண்மணி என்று நம்புகிறேன், ஆனால் நீ ஒழுங்கைத் தவறி விட்டாய்” என்றேன். அவளுடைய மேய்ப்பர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் அவளுடைய மேய்ப்பர் தான் என்று எனக்குத் தெரியவந்தது. நான் சொன்னேன். நான், “ஒன்றுமட்டும் என்னால் கூற முடியும். நீ மாம்சத்தில் அதை செய்தாய், அல்லது வேதத்தைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத ஒரு மேய்ப்பர் உனக்கு பயிற்சி அளித்திருக்கிறார். அவர் எங்களிடம் வந்து, சிறிது நேரம் வேதத்தைக் குறித்து பேசினால் நலமாயிருக்கும். நீ செய்தது தவறு. நீ ஒழுங்கை மீறி விட்டாய். நேற்றுக்கு முந்தின இரவும், நேற்று இரவும் நீ அநேக ஆத்துமாக்களை இழந்து விட்டாய், இன்றிரவும் நீ அதையே செய்திருப்பாய்' என்றேன். அவளுடைய மேய்ப்பர் என்னிடம், “நீங்கள் கூறுவதை என்னால் ஆமோதிக்க முடியவில்லை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றார். “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “நீங்கள் முடித்து விட்டீர்கள். எனவே அவளுக்கு செய்தி அளிக்க உரிமையுண்டு' என்றார். நான், “நான் மேடையின் மேல் இருந்தேன். தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்க வேண்டும். நான் மேடையின் மேல் அப்பொழுது இருந்தேனே” என்றேன். “ அவர், ”நல்லது...' என்றார். நான், “எனக்கு இன்னும் செய்தி இருந்தது. நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தேன், அவர்களை மண்ணைக் கூட்டுவது போல் கூட்ட. நான் வலையை வீசி, அதை இழுத்துக் கொண்டிருந்தேன். அதை தடுக்க நீங்கள் எந்த தடுக்கலையும் போடக் கூடாது. நான் வலையை இழுத்துக் கொண்டிருந்தேன். அவளோ ஆத்துமாக்களை உள்ளே கொண்டு வருவதில் தலையிட்டுக் கெடுத்து விட்டாள். பாவிகள் வருவதற்கு அழைப்பு விடுக்காமல் போனால், பிரசங்கிப்பதனால் என்ன பயன்?” என்றேன். அவர், “நல்லது. அவள் செய்தி உங்கள் செய்திக்குப் பிறகு அளிக்கப்பட்டது. அது மேடைக்குப் புறம்பே அளிக்கப்பட்ட செய்தி... அது நேரடியாக தேவனிடமிருந்து வந்த செய்தி” என்றார். நான் பவுல் உரைத்ததை மேற்கோள் காட்டி, “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் கூறுவது கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லை'. இல்லை, ஐயா. எதையும் புதிதாக நுழைக்கக் கூடாது! அவர்... இயேசு, 'நானே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்' என்று சொல்லியிருக்கிறார். பவுல், 'இங்கு கூறப்பட்டுள்ளதைத் தவிர, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் வேறெதாவது கூறினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று சொல்லியிருக்கிறான். மிஸ்டர், நீங்கள் வரிசையிலிருந்து நிச்சயமாக விலகியிருக்கிறீர்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட சபை உள்ளது? அது குழப்பமாகத் தான் இருக்கும் என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஜனங்கள் இதைச் செய்ய நீங்கள் அனுமதித்தால், உங்கள் பீட அழைப்பை நீங்ள் எவ்விதம் கொடுப்பீர்கள்? அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஊழியம் உண்டு, ஆனால் உங்களுடைய ஊழியத்துக்கு ஒரு நேரம் உண்டு” என்றேன். 139எனவே அது உண்மை. அந்நிய பாஷையில் பேசும் நமது சகோதரர்களாலோ அல்லது சகோதரிகளாலோ இப்படிப்பட்ட ஒன்று நமது சபையில் நேர்ந்தால், ஆராதனை முடிந்த பின்பு டீகன்மார்கள் அல்லது நிர்வாகக் குழு அவர்களைச் சந்தித்து, “ஒரு சில நிமிடங்களுக்கு, ஒலிநாடாவைப் போட்டுக் காண்பிக்க விரும்புகிறேன்” என்று கூறவேண்டும். பாருங்கள்? நீங்கள் அதை.. அல்லது போதகர்... “போதகர் உங்களிடம் பேச விரும்புகிறார். எனவே படிக்கும் அறையில் எங்களைச் சில நிமிடங்கள் சந்திப்பீர்களா, சகோதரனே?” என்று கூறுங்கள். அங்கு சென்று அவரிடம் நல்ல விதமாகப் பேசுங்கள். பாருங்கள்? அவரிடம் எடுத்துக் கூறுங்கள்... ஆனால் எல்லோருமே ஒழுங்கை மீறி உங்கள் போதகரை தொந்தரவு செய்வார்களானால், அப்பொழுது மூப்பர்களாகிய நீங்கள் அவர்களிடம் நடந்து சென்று, “ஒரு நிமிடம்” என்று சொல்ல வேண்டும். அவர்களை நிறுத்தக் கூறும்படி போதகர் உங்களுக்கு சைகை காட்டினால், அது என்ன ஆவியென்பதை அவர் கிரகித்துக் கொண்டார். அதாவது அவர்கள் கூட்டத்தின் ஆவியை முறிக்கிறார்கள் என்று, பாருங்கள். 140போதகர் பிரசங்கத்தை நிறுத்தி விட்டு, பயபக்தியுடன் தலைகுனிவாரானால், அப்பொழுது ஒன்றும் சொல்லாதீர்கள். பாருங்கள்? ஒன்றும் சொல்லாதீர்கள். உங்கள் போதகர் அவ்விதம் செய்ய விட்டு விடுங்கள். உங்கள் போதகரை கவனித்துக் கொண்டேயிருங்கள். அவர் உங்களுக்கு இப்படி சைகை காட்டி அதை நிறுத்தச் சொன்னால், அப்பொழுது கிறிஸ்தவ அன்புடன் நடந்து சென்று, “என் சகோதரனே, என் சகோதரியே , அது யாராயிருந்தாலும், ”நீங்கள் ஒழுங்கை மீறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன், ஏனெனில் நீங்கள் தீர்க்கதரிசிக்கு தொந்தரவு விளைவிக்கிறீர்கள். அவர் தேவனிடமிருந்து செய்தியைப் பெற்றிருக்கிறார். அவர் செய்தியை பிரசங்கித்து முடித்த பின்பு, சிறிது நேரம் கழித்து அதைக்குறித்து நாம் பார்ப்போம்“ என்று கூறுங்கள். பாருங்கள், அது அவருக்கு தொந்தரவு விளைவிக்குமானால், ஆனால் யாராகிலும் பேசும் போது, போதகர் மரியாதையுடன் பிரசங்கத்தை நிறுத்தி ஒரு நிமிடம் காத்திருந்தால், அப்பொழுது அவர் ... ஒருவேளை அவர் உடனடியாக தொடங்கிவிடலாம். எனவே நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த சம்பவங்களில் தொண்ணூறு சதவிகிதம், அர்த்தம் உரைத்தல் போன்றவை, வேத வசனங்களையே எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும். அது இரு சாராரிடையேயும் ஒருக்கால் மாம்சமாக இருக்கக்கூடும். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? சரி. - 141அர்த்தம் உரைத்தல் இல்லாமல், ஒருவருக்கும் அதிகமானவர்கள் அந்நிய பாஷைகளில் செய்தியைப் பேச அனுமதி உண்டா? கிடையாது. அவை ஒன்றன் பின் ஒன்றாக வர வேண்டும். பாருங்கள்? ஒருவர் அந்நிய பாஷையில் பேசி அதன் பிறகு அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். பாருங்கள்? அதன் பிறகு வேறொருவர் அந்நிய பாஷையில் பேசினால், அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். நீங்கள் அவ்விதம் செய்யாமல் போனால், அர்த்தம் உரைப்பவருக்கு என்ன செய்வதென்று தெரியாது, ஏனெனில் இரண்டு அல்லது மூன்று செய்திகள் ஒரேயடியாக அவர் மேல் மோதும் போது, அவருக்கு அது குழப்பமாக இருக்கும். தேவன் குழப்பத்துக்கு காரணம் அல்ல, பாருங்கள். எனவே ஒருவர் அந்நிய பாஷையில் பேசட்டும், அதற்கு வேறொருவர் அர்த்தம் உரைக்கட்டும். பாருங்கள்? அதன் பிறகு... மூன்று செய்திகளை அளியுங்கள். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உரைக்கப்படட்டும். 142அப்பொழுது நமக்கு ... உதாரணமாக சகோ. ரட்டல் அந்நிய பாஷையில் பேசி அதற்கு சகோ. நெவில் அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சகோ. ஃபிரட் அப்பொழுது அமைதியாக இருப்பார். அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலாவதாக, இது தேவனால் உண்டானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பாருங்கள்? சரி. இப்பொழுது, சகோ. ரட்டல், சகோ. பீலர், சகோ. நெவில் ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போனால், அர்த்தம் உரைப்பவருக்கு வரிசையாக மூன்று செய்திகள் இருக்கும். அவருக்கு என்ன செய்வதென்று எப்படி தெரியும்? பாருங்கள்? அவரைத் தனியே விடுங்கள். செய்தியை அளித்த பிறகு அமைதியாயிருங்கள். சற்று காத்திருங்கள். அவருக்கு பக்கத்தில் உள்ளவருக்கு ஏதாவதொன்று வெளிப்பட்டால், அவர் அமைதியாயிருக்கட்டும். பாருங்கள்? முதலாவதாக பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைக்கப்படட்டும். அவ்விதம் அர்த்தம் உரைக்கப்படும் போது, அதை எழுதிக் கொண்டு, பகுத்தறிபவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள், “நல்லது. அது தேவனால் உண்டானதுஎன்பார்களானால், ஒரு செய்தி அளிக்கப்பட்டு விட்டது. அதை கீழே வைத்து விடுங்கள். ஒரு நிமிடம் காத்திருங்கள். முதலாவதாக என்ன தெரியுமா, ஆவியானவர் அடுத்ததாக யார் மேல் அசைவாடுகிறாரோ, அவர் அந்நிய பாஷையில் பேசுவார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்ன கூறப் போகிறார் என்று அறிய அர்த்தம் உரைப்பவர் ஒரு நிமிடம் காத்திருப்பார். அதன் பிறகு அவர் அந்த செய்தியை உரைப்பார் , பாருங்கள். அதை எழுதி வைக்க வேண்டும், பாருங்கள்? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும். 143சகோ. பிரான்ஹாமே, நீர் இந்த சபை காலத்துக்கு தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இயேசுவைத் தொடர்ந்த அதே அடையாளங்கள் உம்மையும் தொடருவதை நாங்கள் காண்கிறோம். உம்மை நன்றாக அறிந்திருக்கும் சிலர் நீர் மேசியா என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. உமக்கும் தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் என்ன வித்தியாசம் என்று விளக்கிக் கூறுவீர்களா? நல்லது, சகோதரரே, அது உண்மையென்று எனக்குத் தெரியும். பாருங்கள், ஆனால் சற்று பொறுங்கள். அதைக் குறித்து இங்கு ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள், அநேக சமயங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பாருங்கள்? ஆனால், இப்பொழுது. சில நேரம் அந்த நபரில் ... உங்களில் சிலர் என்னுடன் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்துக்கு வேதாகமத்தைத் திருப்ப விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்து கொண்டிருக்கும்போது, இதை கூற விரும்புகிறேன். உங்களுக்கு அந்த வசனம் கிடைக்கும் போது, அது லூக்கா 3ல் உள்ளது, அது... ஒருவேளை... அது... இதை நான்... நான் கதவை அடைக்கப் போவதில்லை, ஏனெனில் அங்கு யாரும் இல்லை. சகோதரரே, இதை நான் உங்களுக்கு கூறட்டும். இதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது எல்லாவிடங்களிலும் கூறப்படுகிறது. ஆனால் உங்களிடம் இதைக் கூறுகிறேன், பாருங்கள், அது அவ்விதமாகத் தான் வர வேண்டும். அது அவ்விதமாக இல்லையென்றால், என் செய்திக்காக நான் மனஸ்தாபப்படுவேன். 144'கவனியுங்கள், சகோதரரே, இந்த விஷயத்தில் நீங்கள் அமைதியைக் கடைபிடிக்கும்படி, இயேசுவின் முன்னிலையில்உங்களுக்கு கட்டளையிடுகிறேன். ஆனால் நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை புரிந்து கொள்வீர்கள். பாருங்கள்? அவர் அந்த நதியில் முதலாவதாக என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? உங்களுக்கு அது ஞாபகமுள்ளதல்லவா? “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தி ... கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாயிருப்பது இந்த செய்தியே. அப்படித்தான் கர்த்தருடைய தூதன் உரைத்தார். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, “யோவான்ஸ்நானன் .... நீங்கள் எல்லோரும் அதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை புத்தகங்களில் வாசித்திருக்கிறீர்கள், அது நடந்த போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதை கேட்டதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அந்த தூதனே , ”கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, நீ இந்த செய்தியுடன் அனுப்பப்பட்டிருக்கிறாய், இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்“ என்னும் செய்தியை அறிவித்தார். இப்பொழுது, ”செய்தி“. 145இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்... வில்லி அங்கு அந்த நட்சத்திரத்தின் கீழ் என் பெயரை எழுதி வைத்திருக்கிறார், ஆகையால் தான் நான் அதை கடந்து வந்து விட்டேன், பாருங்கள், நான் நினைக்கவில்லை.... உங்களிடம் நான் முடிந்த வரை உத்தமமாயிருக்கப் போகிறேன், எனக்கும் அந்த செய்தியாளனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நான் எண்ணுகிறேன், பாருங்கள், அது சரி. நான் எண்ணுவது என்னவெனில், அவருடைய சபையில் ஒரு பாகத்தை வகித்து, அந்த முன்னோடி வரும் வரைக்கும் இந்த செய்தியை அளிக்க நான் அனுப்பப்பட்டிருக்கக் கூடும். நான் நம்புவது என்னவெனில், நான் என்னவாயிருக்கிறேனோ அவ்விதமாக இந்நாளுக்கான செய்தியை நான் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன், இதுவே இந்நாளுக்கான வெளிச்சம் என்று நான் நம்புகிறேன், இது வரப் போகிற அந்த நேரத்தைச் சுட்டிக் காட்டுகிறதென்று நான் நம்புகிறேன். கர்த்தருடைய தூதன் அங்கு “நீ கொண்டிருக்கும் அந்த செய்தி” என்று அறிவித்த செய்தி. இப்பொழுது, அங்கு எழுந்த அந்த நட்சத்திரத்தை நீங்கள் கவனிப்பீர்களானால், அது ஒரு .... 146இதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்... நான் நேரத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும், இங்கு மிகவும் அருமையான வேறு கேள்விகள் உள்ளன. இப்பொழுது பத்து மணிக்கு மேலாகி விட்டது. நீங்கள் வீட்டுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று அறிவேன். பாருங்கள். ஆனால் இதற்கு செவிகொடுங்கள். உங்களுக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். எனக்கு சில நிமிடங்கள் தருவீர்களா? சரி, சரி, இப்பொழுது பாருங்கள், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். சகோதரரே, இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் உங்களுக்கு நேராக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் என் மேய்ப்பர்... நீங்கள் என் மேய்ப்பர்களும் மற்றவர்களும், பாருங்கள். இதை நான் செய்தாக வேண்டும். நீங்கள் இந்த செய்தியில் என்னுடன் உழைக்கும் சகோதரர்கள். பாருங்கள்? 147இப்பொழுது, என்னைப் பொறுத்த வரையில், மனிதன் என்னும் வகையில், நான் உங்களைப் போன்றவன், உங்களை விட மோசமானவன். நான் - நான் - நான்... நீங்கள் அநேகர் கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். 'பாவிகளில் பிரதான பாவி நான்' என்று ஒரு சமயம் கூறப்பட்டது போல், நான் அவிசுவாசியாகவும் சந்தேகக்காரனாகவும் மிகவும் தாழ்ந்த வாழ்க்கை எனக்கிருந்தது என்றும் நினைக்கிறேன். ஆனால் பிள்ளை பருவம் முதற்கொண்டு, தேவன் ஒருவர் உண்டு என்றும், என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்தது என்றும் அறிந்திருந்தேன். அதைக் குறித்து எந்த சந்தேகமும் இல்லை, சகோதரனே. பாருங்கள்? ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். அதாவது செய்தி ஒன்று வரும், செய்தியாளன் ஒருவர் வருவார். அது ஒரு மனிதனாயிருக்குமானால், அது எனக்குப் பின் வருகிற ஒருவராக இருக்கும். பாருங்கள்? அது... ஆனால் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த செய்தியானது இந்நாளுக்கான உண்மையான செய்தி, இதுவே கடைசி செய்தி . நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று காண்கிறீர்களா, சகோதரர்களே? உங்கள் எல்லோரையும் என் நிலையிலேயே வைக்கிறேன். ஏனெனில் என்னைப் போலவே நீங்களும் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதே செய்தியின் செய்தியாளர்கள். 148இங்கே பாருங்கள், ஒரு படத்தை வரையப் போகிறேன். படத்தின் மூலம் இதை நன்றாக விளக்கலாம் என்று நினைக்கிறேன். சற்று இந்த கதவை நான் பாதி மூடப் போகிறேன். இது இயேசு, அது இயேசு. இங்கு கெத்சமனேயை வரைகிறேன். இது இங்கே அது அங்கே. உங்களால்... இதை நான் முன்பு சபைக்குக் கூறினதில்லை. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞானத்தை தேடிச் சென்ற மனிதரை எந்தவிதமான வெளிச்சம் (நட்சத்திரம்) நடத்திச் சென்றது? “உம்முடைய பரிபூரண ஒளியினிடத்தில் எங்களை வழி நடத்திச் செல்லும்” இங்கு வரைவதை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு உங்களிடம் ஒன்றைக்கூறப் போகிறேன். அதை நாம் உதறித் தள்ளி விடுவோம். அங்கு வில்லி செய்து வைத்தது சரியென்று கூறுவதை . அது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் சகோதரரே, அதை என்னால் கூற முடியாது. அப்படி கூறினால் நான் ஒரு பெருமைக்காரன். அப்படி செய்ய மாட்டேன். அதை நான் நம்பினாலும் அதைக் கூற மாட்டேன். பாருங்கள்? வேறு யாராகிலும் அவ்விதம் கூறினால், அது அவர்களைப் பொறுத்தது. - 149இங்கு, அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்ட வண்ணமாக, நடந்த சில காரியங்களை பையன்கள் சாட்சி கூறலாமா என்று. கூட்டங்களில் நடந்த சிலவற்றை நான் பிரசங்க பீடத்திலிருந்து சாட்சி கூறுவது எனக்குப் பிடிக்காது. அதை மேலாளரோ அல்லது யாரோ செய்யட்டும். எனக்கு அவ்விதம் செய்ய பிடிக்கவில்லை. (ஒரு சகோதரன், “அவர்கள் யோவானிடம் வந்து, 'நீ கிறிஸ்துவா' என்று கேட்டனர்” என்கிறார் - ஆசி). ஆம், அது தான், நான் என்ன கூற முயல்கிறேன் என்றால் நீர் தான் அந்த தீர்க்கதரிசியா?“ அவன் அதை மறுத்தான். அவன் இவ்விரண்டில் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் 'நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்' என்றான் ]. ”வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்“, அவன் தன்னுடைய ஸ்தானத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டான். - [வேறொரு சகோதரன், “அவர்கள் அவனிடம் அவன் அந்த தீர்க்கதரிசியா என்று கேட்டபோது, அவன், 'இல்லை' என்றான் என்கிறார் - ஆசி]. ஆம், இப்பொழுது... அந்த தீர்க்கதரிசி மோசே முன்னுரைத்த அவரே. பாருங்கள், பாருங்கள்? ஆனால் அவன்யாரென்பதை அறிந்திருந்தான். அவன் அதைக் கூறினான். அவன் அவர்களிடம், ”நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்“ என்றான். அது அவன். அவன் யார் என்பதைக் கூறினான். பாருங்கள்? ஆனால் அவன் ஒரு... 150சொல்லுங்கள் ஒரு சகோதரன், “யோவானைத் தொடர்ந்து கிறிஸ்து வந்தபோது, அவர்கள் அவரிடம் வந்து... மேசியாவுக்கு முன்பு எலியா வரவேண்டுமென்று அவர் போதித்தார். அவர், 'நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் என்றார்” என்கிறார் - ஆசி). அது அவன். அது உண்மை . அது உண்மை . யோவானும், “நான் ஒன்றுமற்றவன்! நான் ஒன்றுமற்றவன்! அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரன் அல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். ஆனால் இயேசு அவனைக் குறித்து என்ன கூறினார்? அவர், “யாரைக் காண வனாந்திரத்துக்குப் போனீர்கள்?” என்று கேட்டார். ஆம், ஆம். “காற்றினால் அசையும் நாணலையோ? அல்லது மெல்லிய வஸ்திரம் தரித்து ஆடம்பரமாயுள்ள மனுஷனையோ? அவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள். யாரைக் காணப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அவன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவன் உடன்படிக்கையின் தூதன். அப்படித் தான் அவன் இருந்தான். அவன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவர், “ஸ்திரீகளில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் இதுவரையிலும் எவனும் இல்லை' என்றார். பாருங்கள்? அவ்விதமாகத்தான் அவன் இருந்தான், பாருங்கள், அவன் உடன் படிக்கையின் தூதனாயிருந்தான். இவன் தான் இயேசுவை, “இதுதான் அவர் என்று அறிமுகப்படுத்தினான். மற்றெல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து முன்னுரைத்தனர், ஆனால் யோவானோ, ”இதுதான் அவர் “ என்றான். பாருங்கள்? 151இப்பொழுது கவனியுங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். இதை ஒரு சிறிய விதத்தில் எடுத்துக் கொள்ளப்போகிறேன், பாருங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டார்கள். அந்த பாடலை, நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டுஅவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். அதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், வேதத்தில் படித்திருக்கிறீர்கள். மேற்கு திசையில் நடத்தி, இன்னும் போய்க் கொண்டிருக்கிறது அந்த பரிபூரண ஒளிக்கு எங்களை வழிநடத்தும் பாருங்கள், அந்த நட்சத்திரம் அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்திச் சென்றது, ஏனெனில் நட்சத்திரம் ஒளியைப் பிரதிபலிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. அன்றொரு நாள் அதைக் குறித்த நாடகத்தை நாம் பார்த்தோம். அதைகாண அந்த ஞாயிற்றுக்கிழமை எத்தனை பேர் வந்திருந்தீர்கள்? பாருங்கள், அதைக் குறித்து இப்பொழுது தான் நாம் பிரசங்கித்து முடித்தோம். ஷெகினா மகிமை அந்த நட்சத்திரத்தில் பிரதிபலித்தது, நட்சத்திரம் அதைப் பிரதிபலிக்கிறது. அந்த நாடகத்தில் கர்த்தருடைய தூதன் இந்த மேடையின் மேல் நின்று கொண்டு ஷெகினா மகிமையிலிருந்து. பிரதிபலித்துக் கொண்டிருந்தார். அதே காரியம் தான். அது முற்றிலும் உண்மை. அந்த உண்மையானதை இங்கு பார்த்து, அதை அங்கு பார்க்கும்போது, அது பக்கத்தில் இப்படி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பாருங்கள்? 152இப்பொழுது இதைக் கவனியுங்கள். அந்த நட்சத்திரம் கிழக்கில் எழும்பினது. அது சரியா? அது ஒரு பெரிய நட்சத்திரம். சரி. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்த நேரத்தில் பூமியில் நட்சத்திரமாக விளங்கினது யார்? யோவான். அவன் தான் அவர்களை அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்தினான். அது சரியா? இயேசு கிறிஸ்துவின் முதலாம் தோற்றத்தின் போது அந்த நட்சத்திரம் கிழக்கில் தோன்றினது. இப்பொழுது அநேக சிறு நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் ஓடிச் சென்று, இறுதியாக சாயங்கால நட்சத்திரத்தில் முடிவடைகிறது. சாயங்கால நட்சத்திரம் சாயங்காலத்தில் பிரகாசிக்கிறது. காலை நட்சத்திரம் காலையில் பிரகாசிக்கிறது. இவ்விரண்டும் ஒரே அளவுள்ளதாகவும், ஒரே விதமான நட்சத்திரங்களாகவும் இருக்கின்றன. இரண்டையும் இரண்டையும் ஒன்று சேருங்கள், அப்பொழுது அது என்னவென்று அறிந்து கொள்வீர்கள், பாருங்கள். எனவே நட்சத்திரம் மேசியா அல்ல, அவர் மேசியாவைப் பிரதிபலிக்கிறார். 153இப்பொழுது நட்சத்திரம் தன் சொந்த ஒளியைக் கொடுப்பதில்லை. அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. அதுசரியா? (ஒரு சகோதரன், “இல்லை” என்கிறார் - ஆசி] ஹ? (“ஒரு விதத்தில் சந்திரன் அவ்விதம் செய்கிறது. நட்சத்திரங்கள் தங்கள் சொந்த ஒளியைக் கொடுக்கின்றனர். ஆம், சந்திரன் .... ஆம், உண்மையில் சந்திரன் ஒளியைப் பிரதிபலிக்கிறது. ஆம், ஒரு நட்சத்திரம் தன் ஒளியைப் பிரதிபலிக்குமானால், அதன் ஒளி... தேவனிடத்திலிருந்து வர வேண்டும். ஏனெனில் - அது ஒருவிதமான பனிக்கட்டி. இல்லையா? (அந்த சகோதரன் ”சூரியன்“ என்கிறார் - ஆசி). ஹ? அந்த சூரியனிலிருந்து தோன்றின ஒரு சூரியன். ('அந்த சூரியன்கள் நமது சூரியனைவிட தூரத்தில் இருக்கின்றன”]. ஆம். அவைகள் .... அந்த சூரியன்கள் பெரிய சூரியனிலிருந்து தோன்றினதாக நமக்கு கூறப்பட்டுள்ளது. சூரியன் இந்த கணைகளை அதனிடத்திலிருந்து வெளியே எறிந்தது. அவைகள் சூரியனைப் போல் எரிந்து கொண்டிருக்கும் சிறு கணைகள். எனவே அவைகள் நமக்கு சிறு சூரியன்கள். அது சரியா? சிறு ஒளிகள். (“சில... அவைகள் பெரும்பாலும் நமது சூரியனைக் காட்டிலும் பெரியவை) நமக்கு, நமக்கு, பாருங்கள். நாம் நம்மைக் குறித்து இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். சரி. 154இப்பொழுது, அவைகள் நமக்கு சூரியன்களாக, அல்லது ஒளியைக் கொடுப்பவைகளாக இருந்தால், அவை முக்கியமான ஒளியைக் கொடுக்கும் சூரியனின் பாகங்கள். பாருங்கள்? பெரிய சூரியன் நமக்கு பெரிய ஒளியை கொடுக்கிறது - பரி பூரண ஒளியை. சிறிய சூரியன்கள், அல்லது சிறிய நட்சத்திரங்கள் - நாம் கும்பலாகக் காண்பவை - பிரகாசிக்கும் சூரியனை விட அதிக தூரத்தில் இருக்கலாம். அவை நமக்கு கொடுப்பவை சூரியனை விட குறைந்த ஒளியையே. ஆனால் அவை ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. அது சரியா? பெரிய சூரியன் உதயமாகும் போது, சிறிய சூரியன்கள் மறைந்து விடுகின்றன. அது சரியா? அவை நமக்கு சூரியன் அல்ல, அவை சூரியனைப் போல் ஒளி தருபவை. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது அவைகளில் மிகப் பெரியது (காலையில்) சூரியன் வருகையை அறிவிப்பது, சூரியன் அஸ்தமிப்பதை அறிவிப்பது விடி வெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமுமே. அது சரியா? இரண்டு மிகப் பெரிய நட்சத்திரங்கள் - கிழக்கு நட்சத்திரமும் மேற்கு நட்சத்திரமும். 155இப்பொழுது அது எங்குள்ளதென்று பார்த்தீர்களா? எலியா கிழக்கு நட்சத்திரம் வரப்போவதை அறிவிக்கும் செய்தியாளனாக இருந்தான். அவன் மேற்கு நட்சத்திரத்தை அறிவிப்பவனாக இருப்பான் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது - அதாவது இந்த நாள் கடந்து சென்ற பிறகு, வரப்போகும் புதிய நாளை. அது என்னவென்று இப்பொழுது கண்டு கொண்டீர்களா?' கிழக்கு, “வெளிச்சம் உண்டாகும். பாருங்கள், சூரியன் இப்பூமிக்கு வருவதற்கு சற்று முன்பு, ”சூரியன் வரப்போகிறது“ என்பதை விடிவெள்ளி நட்சத்திரம் சாட்சி கூறினது. அது சரியா? பாருங்கள், அது விடிவெள்ளி நட்சத்திரத்தைத் தோன்றச் செய்தது. நல்லது. அப்படியானால் விடிவெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமும் ஒரேவிதமான நட்சத்திரங்களே. இதைத் தவிர சிறு நட்சத்திரங்கள் எங்கும் பரவியுள்ளன. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களால் காண முடிகிறதா? செய்தியாளர்கள். 156நல்லது. அப்படியானால், அவர் அல்பாவும் ஓமெகாவுமாக, ஆதியும் அந்தமுமாக, வச்சிரக்கல்லும் பதுமராகமுமாக காணப்பட வேண்டியவராயிருக்கிறார். நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? இப்பொழுது கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருப்பதால், சரித்திரம் மறுபடியும் நிகழ வேண்டுமானால், இந்தக் கடைசி நாளில் எலியா பிரசங்கிக்க வேண்டிய செய்தியானது. விடிவெள்ளி நட்சத்திரம் அவருடைய வருகையை அங்கு அறிவித்தது போல, சாயங்கால நட்சத்திரம் வரப்போகும் ஒரு புதிய நாளை, வேறொரு நாளை அறிவிப்பதாய் உள்ளது. இது வரப் போகும் சூரியனை - நாம் பெற்றிருந்த சூரியன் போய் விட்டு, ஒரு புது சூரியன், ஒரு புது காலம், ஒரு புது நேரம் வரப்போகிறது என்பதை அறிவிக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். யோவான் தன் செய்தியை அளித்து கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தான் என்றால், கடைசி நாட்களில் எலியா வருவான். தீர்க்கதரிசி உரைத்தது போல், “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” 157சாயங்கால வெளிச்சம், நாம் பெற்றுள்ள மிகப் பெரிய சாயங்கால வெளிச்சம் சாயங்கால நட்சத்திரமே. அப்படியானால் இந்த மற்ற நட்சத்திரத்தைப் போலவே இதுவும் அதேவிதமான செய்தியைக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அதாவது, அது சூரியனைக் குறித்துப் பேசி, சூரியனை அறிவிக்கிறது. நல்லது, இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். சாயங்கால வெளிச்சம் இங்குள்ளது. இந்தக் காலம்மறைந்து போகிறது. நான் கூறுவது விளங்குகிறதா? இந்தக் காலம் கடந்து போய், வேறொரு நாள் வருவதை அது அறிவிக்கிறது. 158ஏனெனில், பாருங்கள் அது உண்மையில் மேற்கிலுள்ள யாராகிலும் அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், அது கிழக்கில் இருக்கும். அப்படியானால் பாருங்கள்,கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். ஆனால் அவர்கள் உண்மையில் .... அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டு அந்த நட்சத்திரத்தை மேற்கில் நோக்கிப் பார்த்தனர். அது சரியா? அந்த சாஸ்திரிகள் மேற்கில் ... கிழக்கில் இருந்து கொண்டு அந்த மேற்கு நட்சத்திரத்தைக் கண்டனர். நான் கூறுவது விளங்குகிறதா? ஆனால் அது மேற்கே இருப்பவர்களுக்கு கிழக்கு நட்சத்திரமாக இருந்தது. பாருங்கள், நாம் கூறுவது போல... நான் அடிக்கடி “கீழ் பாகம் மேலே உள்ளது' என்று கூறுவதுண்டு. எது சரியென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நாம் நித்தியத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே தென் துருவம் மேலேயும் வட துருவம் கீழேயும் இருக்கக் கூடும். நமக்குத் தெரியாது. பாருங்கள். மேலே போகும் வழி கீழேயுள்ளது. பாருங்கள்? நாம். நாம் இதை விட்டுச் செல்கிறோம். அதன் பிறகு நாம் நித்தியத்திற்குள் பிர வேசிக்கிறோம். அது வரப்போகும் நித்தியத்தை, வேறொரு நாளை, வேறொரு காலத்தை அறிவிக்கிறதாயிருக்கிறது. இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். அப்படி இருப்பதாக நாம் நம்புகிறோம், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். சரி, அப்படியானால், சாயங்கால வெளிச்சம் ஒன்று இருக்க வேண்டும். அந்த சாயங்கால வெளிச்சம், மல்கியா 4ன்படி, “ பிள்ளைகளின் இருதயயத்தை பிதாக்களிடத்தில் திருப்ப வேண்டும்” - தொடக்கத்தில் இருந்த நிலைக்கு. 159அவன் முதன் முறையாக வந்த போது, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்தில் திருப்பினான். அவனைச் சுற்றியிருந்தவர்கள் பிள்ளைகளே. அவன் பிள்ளைகளின் ... பிதாக்களின் இருதயங்களை (அந்த பழைமையான , வைதீக, பிதாக்களின் இருதயங்களை) அவன் அங்கு அறிவித்துக் கொண்டிருந்த அந்த வெளிச்சத்துக்குத் திருப்பினான். அவன் மறுபடியும் வரும்போது, அவன் திசை திரும்பி, (நீங்கள் கவனித்தீர்களா, உலகம் அழிவதற்கு முன்பு, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பு). ”பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்“ - சாயங்கால நட்சத்திரம், அக்காலத்தில் அது விடிவெள்ளி நட்சத்திரமாய் இருந்தது. ஆமென். 160அதை நான் சரியாக கூறினேன் என்று நம்புகிறேன், பாருங்கள். விடிவெள்ளி நட்சத்திரம் இப்பொழுது சாயங்கால நட்சத்திரமாயுள்ளது. ஏனெனில் அது அதே நட்சத்திரம். நாம் மேற்கு திசையிலிருந்து கொண்டு கிழக்கே நோக்கிப் பார்க்கிறோம். அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டு மேற்கே நோக்கிப் பார்த்தார்கள். அது அதே நட்சத்திரம் தான். நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது கிழக்கு நட்சத்திரம் அல்லது மேற்கு நட்சத்திரமாக உள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? சரி. இப்பொழுது அது கொண்டு வருகிறது. ஒருவன் பிதாக்களின் விசுவாசத்தை பிள்ளைகளிடத்தில் கொண்டு வருகிறான்; இந்த காலத்தில் “பிள்ளைகளின் விசுவாசம் பிதாக்களினிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது. நீங்கள் சுற்றி வந்து மறுபடியும் அங்கு அடைகிறீர்கள். நான் கூறுவது உங்களுக்கு விளங்கவில்லையா? அது எக்காலத்தும் ஒரே நட்சத்திரம்தான். ஒரே காரியம், ஒரே செய்தி, ஒரே காரியம் மறுபடியும் வந்தடைகிறது. அது கடந்து சென்று விட்டது. நீங்கள் எந்தப் பக்கம் செல்லுகிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உலகம் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் கண்டு பிடிக்கும் நேரம் ஒன்று வரும் என்று நான் நம்புகிறேன். அதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நான் நம்பவில்லை. அவர்கள் எவ்வளவுதான் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தாலும். அவர்கள் எத்தனையோ காரியங்களை விஞ்ஞான ரீதியில் நிரூபித்து பிறகு அதை வாபஸ் வாங்க வேண்டியதாக இருந்தது. தேவன் உலகம் நின்றது என்றும் ... சூரியன் என்பதற்கு பதிலாக உலகம் என்று சொல்லிவிட்டேன். பாருங்கள், சூரியன். சூரியன் என்ன செய்வதாக அவர்கள் கூறுகிறார்களோ அது அதைச் செய்வதாக நான் உண்மையில் நம்புவதில்லை. சந்திரன் சுற்றுகிறது என்று எனக்குத் தெரியும். அவ்வாறே சூரியனும் சுற்றியோடுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அவர்களில் சிலர், “அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டு அவனிடம் 'சூரியனே நில்' என்று கூறும் படி செய்தார். ஆனால் உண்மையில் அவர் பூமியைத்தான் நிறுத்தினார்” என்கின்றனர். 161நான், “பூமி சுற்றாமல் நிற்குமானால் அது ஒரு வால் நட்சத்திரம் போல் விண்வெளியில் ஓடிச் சென்று விடும் என்று நீங்கள் என்னிடம் கூறியிருக்கிறீர்களே, அப்படியானால் என்ன நடந்தது?” என்று கேட்டேன். நான் திரு.தியீஸ் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உயர்நிலைப்பள்ளியில் வேதாகமம் கற்றுக் கொடுப்பவர். அவரை உங்களுக்குத் தெரியும். நான் அவரிடம், “வேதம் அப்படித் தான் கூறுகிறது. அதாவது பூமி.... இல்லை, சூரியன் நின்றது என்று என்றேன். அவர், “அவர் பூமியை நிறுத்தினார். அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டார்” என்றார். நான், “அப்படியானால் உங்கள் அறிவினால் அதை செய்யுங்களேன்” என்றேன். ஒரு சகோதரன், “சூரியன் எவ்வளவு நேரம் நின்றது என்று அவர்களால் இப்பொழுது விஞ்ஞானப் பிரகாரமாக நிரூ பிக்க முடிகிறதென்று நினைக்கிறேன். ” என்கிறார் - ஆசி). ஆம், அங்கே அவர்கள்... நானும் கூட அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம், அவர்கள் உரிமை கோருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வானசாஸ்திர நிபுணர் ஒருவர் அதைக் குறித்து பேசும்போது, அவர்களால் இதை இப்பொழுது நிரூபிக்க முடியும் என்று கூறினதை நான் கேட்டிருக்கிறேன். அதே நேரத்தில் அவர்கள் வான மண்டலத்தில் ஏதோ ஒன்று நடந்ததென்றும் அது சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தது என்றும் கூறுகின்றனர். அவர்கள் அதையெல்லாம் நிரூபித்து விட்டனர். நல்லது, என்னே, அந்த நேரத்தில் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் அப்படி ஏதோ ஒன்றைச் செய்துள்ளன. எப்படியாயினும், அது நமக்கு மிகவும் ஆழமானவை. 162எனவே, இப்பொழுது. இந்த செய்தியின் காரணம்... அது அப்படித்தான் என்பதை நிரூபிக்க, இந்த செய்தியை இந்த விதமாக காண வேண்டும். இப்பொழுது, சகோதரரே, நாம்அறிந்திருப்பது என்னவெனில், மனிதன் தேவனாக இருக்க முடியாது. இருப்பினும், மனிதன் ஒருவகையில் தேவனே. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவனே . நீங்கள் தேவனாக இருப்பதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கும் போது அல்ல. பாருங்கள்? இயேசு நம்மைப் போல் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் தேவன் அவருக்குள் இருந்தார். தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. நாமோ ஆவியை அளவாகப் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்பொழுது இந்த வெளிச்சம் வந்து விட்டபடியினால், அது யோவான்ஸ்நானன் செய்தியை அறிவித்த அந்த விதமான செய்தியை அறிவிக்குமானால், அவர் அந்த நதியில் கூறினபடி ... பாருங்கள். அது வேறெதாக எப்படி இருக்க முடியும்? என்னைப் பாருங்கள், ஆரம்பப் பள்ளி கல்வியும் கூட இல்லாதவன். அவர் நடக்கப் போகும் சம்பவங்களை என்னிடம் கூறினபோது, அவைகளில் ஒன்றுமே தவறிப் போகவில்லை. அவைகளில் ஒன்றுமே ஒருக்காலும் தவறிப் போகவில்லை. அவர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சகோதரரிடம் கூறினேன். நம்மில் வயதில் மிகவும் மூத்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களிடம் நான் இந்தக் காரியங்களைக் கூறியிருக்கிறேன். இந்த ஒளியைக் கண்டதைக் குறித்தும், அது என்ன நிறமாயிருந்தது என்றும் மற்றெல்லாமே. இப்பொழுது அந்த புகைப்படம் அது உண்மையென்பதைக் காண்பிக்கிறது. இந்த வெவ்வேறு காரியங்கள் அனைத்தும் அது உண்மையென்பதை நிரூபிக்கிறது. அது சரியா? நல்லது. அப்படியானால், அது உண்மையாயிருக்குமானால் .... அது அந்த ஒளிதான். 163இப்பொழுது நான்காம்... (ஒலி நாடாவில் காலியிடம் ஆசி).... அது 3ம் வசனம் தொடங்கி 5ம் வசனம் முடிய, இல்லை . அதுவல்ல... நாம் 14ம் வசனத்தில் தொடங்குவோம். சகோதரனே யார் வேதத்தில் அந்த பாகத்தை திறந்திருப்பது? சரி. பரி. லூக்கா 3ம் அதிகாரத்தில் 14ம் வசனம் தொடங்கி வாசியுங்கள் (ஒரு சகோதரன் லூக்கா 3:14-16 வசனங்களை வாசிக்கிறார் - ஆசி). போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான் யோவானைக் குறித்து: இவன் தான் கிறிஸ்துவோம் என்று ஜனங்களெல்லாரும் எண்ணங் கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில், யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். லூக் 3:14 - 16 சரி. அது என்ன? ஜனங்கள் மேசியாவின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடியால், இந்த மகத்தான அபிஷேகிக்கப்பட்ட ஊழியத்தை அவர்கள் கண்டபோது, ஒரு மனிதன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்து தன் கூட்டத்தை நடத்தி விட்டு, மீண்டும் வனாந்திரத்துக்குச் செல்வதை அவர்கள். கண்டபோது, அவனைப் பின்பற்றின அநேகர் “இவன் தான் மேசியா” என்றனர். அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். பாருங்கள். யோவான்ஸ்நானனின் செய்தி இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக உண்மையான தேவனுடைய செய்தியாயிருக்குமானால், அதே விதமாக... எலியாவின் செய்தியும் அதே விதமாக கருதப்படவேண்டும்... பாருங்கள்? இது அந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது என்று நினைக்கிறேன், முற்றிலுமாக. பாருங்கள்? இதுவும் அதே விதமாக கருதப்பட வேண்டும். பாருங்கள்? (ஒரு சகோதரன், “அந்தவிதமான முரணான அபிப்பிராயம் கொண்டுள்ளவர் எவருக்காகிலும் உதவி செய்ய ஏதாகிலும் ஒன்றைச் செய்வதற்கு நாங்கள் பொறுப்பாளிகளா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார் - ஆசி). ஒன்றுமில்லை, உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. (கேடான சிந்தை. அது கேடான சிந்தையில் முடிவடைய வாய்ப்புண்டா?“) இவ்விதமாக அது இருக்குமானால் அது கேடான சிந்தையில் முடிவடையும். அதாவது முன்னுரைக்கப்பட்ட இந்த மனிதன் தன்னை மேசியாவென்று அறிவித்தால், அவன் கள்ளக்கிறிஸ்து வென்று நாம் அறிகிறோம். பாருங்கள்? 164பாருங்கள், இந்த மனிதன் தன்னுடைய ஸ்தானத்தில் நிலைத்திருக்கும் வரைக்கும், பாருங்கள். அவர்கள் யோவானிடம் கூறினது போன்று. யோவான் ஒருபோதும்... யோவான் அவர்களைக் குறித்து எதுவும் கூறினதாக வேதத்தில் உரைக்கப்படவில்லை. அவர்கள் அருமையான கிறிஸ்தவர்கள்... இல்லை , யோவானை விசுவாசித்திருந்த விசுவாசிகள். அவர்கள் “உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய தீர்க்கதரிச, அதில் சந்தேகம் எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு அவனிடம் சென்று, “ நீர் தான் அந்த தீர்க்கதரிசி அல்லவா?” என்றனர். அவன், “இல்லை” என்றான். 165அவர்கள், “நீர் மேசியா தானே” என்றனர். பாருங்கள், அவர்கள் உண்மையில் அவ்வாறு எண்ணியிருந்தனர். அவன், “இல்லை” என்றான். பாருங்கள்? அவர்கள், “இல்லையா, அப்படியானால் நீர் யார்?” என்று கேட்டனர். அவன், “நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான் . “ஜனங்கள் அவருடைய வருகையை ஆவலாய் எதிர் நோக்கியிருந்தனர்” என்று வேதம் உரைக்கிறது. அந்த ஜனங்கள் யார்? அவனுடைய செய்தியைக் கேட்டவர்கள், அதற்கு செவி கொடுத்தவர்கள், அவனைப் பின்பற்றினவர்கள், அவனுடைய சகோ தரர்கள். பாருங்கள்? அவர்கள் அவனைப் புண்படுத்த விரும்பவில்லை, அவனைப் புண்படுத்த முயலவில்லை. ஆனால், பாருங்கள், அவன் மேசியாவென்று அவர்கள் உண்மையாகவே தங்கள் இருதயங்களில் எண்ணியிருந்தனர். நல்லது, ஒவ்வொரு தருணத்திலும் சரித்திரம் மீண்டும் நிகழ வேண்டும். அதை நாம் அறிந்திருக்கிறோம். அது மீண்டும் நிகழ வேண்டும். 166உதாரணமாக, நீங்கள் மத்தேயு 3-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வீர்களானால் அங்கு, “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்' என்று உரைக்கப்பட்டது நிறைவேம்படி இப்படி நடந்தது”. (மத். 2:15) என்னும் வசனம் இயேசுவில்நிறைவேறினதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் ஒத்து வேதவாக்கியங்களைப் பார்த்துக் கொண்டே வருவீர்களானால், அது குமாரனாகிய யாக்கோபைக் குறிப்பிடும் ஒன்று. பாருங்கள்? அவ்வசனத்திற்கு. இரட்டை அர்த்தம் உள்ளது. எனவே இப்பொழுது அது. அந்தக் காரியம் எழும்பவில்லை என்றால், அது வருங்காலத்தில் எழும்பும் என்று நான் இப்பொழுதும் கூறுகிறேன். ஏனெனில் இந்த செய்தி தேவனிடத்திலிருந்து வந்ததென்றும், அது கிறிஸ்துவுக்கு முன்னோடியாக உள்ளதென்றும், அது எலியாவின் ஆவியும் வல்லமையும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் அது பிள்ளைகளின் இருதயங்களைத் திருப்பும் ஒன்றாய் அமைந்துள்ளது. எல்லாமே அதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. எனவே உண்மையான ஜனங்கள் அந்த விதமான கருத்தைக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அது முடி வடையத்தான் செய்கிறது. அவர்கள் உண்மையில் அவ்வாறு விசுவாசிக்கின்றனர், 'அவர்கள் என் சகோதரரும் நண்பர்களுமாவர். 167இப்பொழுது, எனக்கு. இந்த பட்டினத்தில் எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அந்த மருத்துவரின் பெயரை நான் கூறப் போவதில்லை. அவர் என் நண்பர். அவர் என் தோளின் மேல் கையைப் போட்டு, “பில்லி, நீர் கடைசி காலத்தின் தேவனுடைய மேசியா என்று உம்மிடம் எனக்கு கூறுவது எளிதாயிருக்கும்” என்றார். நான் “டாக், அப்படி செய்யாதீர்கள்” என்றேன். அவர், “நல்லது, இவ்வுலகில் வேறு எவருமே நீர் பெற்றுள்ள காரியங்களையும் நீர் சொல்லும் காரியங்களையும், நீர் செய்யும் காரியங்களையும் பெற்றுள்ளதாக நான் கண்டதில்லை” என்றார். அது அவருக்கு அதிக உதவியாயிருந்தது, பாருங்கள். அங்குள்ள பிரசங்கிகளைக் காண்கிறேன். ஆனால் நீர் வித்தியாசமான ஒருவர், உமக்கு படிப்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஏனெனில் மனோதத்துவம் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியாது என்றார். நான், “அது உண்மை , டாக் ” என்றேன். அவரிடத்தில் பேசி பிரயோஜனமில்லை. ஏனெனில் அவருக்கு எதுவுமே தெரியாது, அவரிடம் அடிப்படையான விஷயத்தை எடுத்துக் கூறவும் உங்களால் முடியாது. பாருங்கள், அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், அதுதான், பாருங்கள். 168எனக்கு ஒரு கறுப்பு நிற ஸ்திரீயைத் தெரியும். அவள் எனக்கு பக்கத்து தெருவில் வசிக்கிறாள். எனக்கு தெரிந்த மனிதனிடத்தில் அவள் வேலை செய்கிறாள். இந்த மனிதனின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “இந்த ஸ்திரீ உங்களைத் தெய்வம் போல் தொழுகிறாள். ஏனெனில் அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்த போது நீங்கள் அவள் மேல் கையை வைத்து அவள் குணமாகி விட்டதாக கூறினீர்களாம்” என்றாள். அந்த கறுப்பு நிற ஸ்திரீ வேலை பார்க்கும் இந்த ஸ்தீரியும் அவளுடைய கணவனும் குறிப்பிட்ட ஒரு மருத்துவரும் நான் சற்று முன்பு கூறின மருத்துவர் அல்ல, இவர் வேறொரு மருத்துவர்) ஒன்றாக 'கால்ப் (Golf) விளையாடுபவர்கள். அந்த மருத்துவர் அவள் பிழைக்க மாட்டாள் என்று கைவிட்டு விட்டார். அவள் அவருடைய நண்பரின் வீட்டில் வேலை பார்க்கிறவள். கைவிடப்பட்ட அவள் முழுவதுமாக குணமடைந்து விட்டாள். மருத்துவர் அவளில் ஒரு துளி புற்று நோயையும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. பாருங்கள்; அவள் கூறுகிறாள்.... 169இப்பொழுது, நாம் நினைக்கின்ற அல்லது எடுத்துக் கொள்கின்ற அந்த அர்த்தத்தில் அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் என்ன அர்த்தத்தில் அதைக் கூறுகிறார்கள் என்றால்... தேவன் நம்மோடும், நமக்குள்ளும் இருந்து கொண்டு நமது மூலமாய் கிரியை செய்கிறார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். தனிப்பட்ட ஒரு நபர் தேவன் என்றல்ல, பாருங்கள். யோவான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது போல் இயேசுவும் ஒரு மனிதனே. அவர் மனிதனே. அவர் ஒரு ஸ்திரீயின் மூலம் பிறந்தார், அவர் மரித்தார். அது சரியா? அவர் மனிதன். அவர் புசித்தார். குடித்தார், அவருக்குதாக முண்டாயிற்று. அவர் உங்களைப் போலவும் என்னைப் போலவும் ஒரு மானிடராயிருந்தார். ஆனால் தேவனுடைய ஆவி அவருக்குள் பரி பூரணமாக, அளவில்லாமல் வாசம் செய்தது. அவர் சர்வசக்திமான். ஆனால் எலியாவோ அந்த ஆவியில் ஒரு பாகம் மாத்திரமே. ஒரு வேளை அவன் தன் சகோதரரை விட சிறிது அதிகமாக அபிஷேகம் பெற்றிருந்திருக்கக் கூடும். ஆயினும் அவன் ஆவியின் ஒரு பாகம் மட்டுமே. ஜனங்கள் மேசியாவை எதிர் நோக்கியிருந்தனர். அவர்கள் தங்கள் சகோதரரை விட சிறிது அதிகமான இந்த பாகத்தைக் கண்டவுடன், “ஓ என்னே , இது அவராகத்தான் இருக்க வேண்டும்” என்றனர். ஆனால் இயேசு பிரகாசிக்கத் தொடங்கினவுடனே யோவானின் சிறு வெளிச்சம் அணைந்து போனது. பாருங்கள்? 170அது போல் அவர் வரும்போது, அந்த பரலோகத்தின் மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து கிழக்கிலிருந்து மேற்குக்கு வரும் போது, இந்த சிறு வெளிச்சங்கள் அணைந்து போகும்... பாருங்கள்? இப்பொழுது அவர் பூமிக்கு வரமாட்டார். ஆயிரம் வருட அரசாட்சி வரைக்கும் மேசியா பூமிக்கு வரமாட்டார். பாருங்கள். பாருங்கள்? ஏனெனில், “நாம் ஆகாயத்தில் எடுக்கப் பட்டு, கர்த்தரை அங்கு சந்திப்போம். அவர் பூமிக்கு வருவதில்லை. அவர் மணவாட்டியை ஆகாயத்தில் இழுத்துக் கொள்கிறார். அவர் ஒரு ஏணியை எடுத்துக் கொள்கிறார் ... அது என்ன நாடகம், லியோ, அதில் அந்த மனிதன் வீட்டின் பக்கத்தில் ஏரியை வைக்கிறானே? ரோமியோ ஜூலியட். அது சரி. அவர் ஏணியை வைத்து தன் மணவாட்டியைத் திருடிக் கொண்டு போய் விடுகிறார். - இப்பொழுது அவர் யாக்கோபின் ஏணியில் இறங்கி வந்து, “ப்ஸ்ட், இருதயத்துக்கு இனியவளே, இங்கே வா” என்று அழைக்கிறார். பாருங்கள், அவரைச் சந்திக்க நாம் மேலே செல்கிறோம். 171ஒரு சகோதரன், சகோ. பிரான்ஹாமே, அதனுடன் இது சரியாயிருக்குமா? இந்த ஜனங்கள் யோவான் ஸ்நானனிடம் வந்து அவனை மேசியா என்று அழைக்க விரும்பினர். யூதர்கள் மேசியாவை தேவன் என்று கருதுவதாக நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்“ என்கிறார் - ஆசி]. - என்ன சொல்லுகிறீர்கள்? நான் என்ன சொல்லுகிறேன் என்றால், அந்த ஜனங்கள் யோவான்ஸ்நானனிடம் வந்து, அவனை மேசியாவாகிய கிறிஸ்து என்று எண்ணினர். மேசியா யூதர்களுக்கு தேவனாயிருப்பார் என்று நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்). ஆம் ஐயா, அது உண்மை , (ஒரு சகோதரன், “நல்லது, யோவான் அவர்களைக் கடிந்து கொண்டு, அவன் 'அல்ல' என்றும் கிறிஸ்து வரப்போகிறார் என்றும் சொன்னான்' என்கிறார் - ஆசி). அது உண்மை . சீஷர்கள் இயேசுவை 'ஆண்டவர்' என்று ஒப்புக் கொண்டு, 'நீங்கள் என்னை ஆண்டவரென்று சொல்லுகிறீர்கள், நான் அவர்தான்' என்றார்.:)ஆம் (”யோவான் 13-ல் அவர் சீஷர்களின் கால்களைக் கழுவின போது...“].அம். அது சரியென்று அவர் ஒப்புக் கொண்டார். அவர் ஆண்டவராயிருந்தபடியால், அவர் அது சரியென்று ஒப்புக் கொண்டார். அவர் ஒப்புக் கொண்டார். [” அவர் அதை ஏற்றுக் கொண்டார் ) உ-ஊ ஆனால், பாருங்கள், இயேசு ஆண்டவராயிருந்தபடியால், அவர் ஆண்டவர்தானா என்று கேட்கப்பட்ட போது, அவர், “ஆம் ஐயா, நான் உங்கள் ஆண்டவரும் போதகருமாயிருக்கிறேன். நீங்கள் அவ்விதம் என்னை அழைக்கிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே” என்றார். ஆனால்..... (“ஆனால் வேறெந்த மனிதனும் அவ்விதம்.....” கூற முடியாது. முடியாது. உதாரணமாக.... யாராகிலும் நூன் தேவன் என்று கூறுவர்களானால் அது தவறு என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களிடம் கூற விரும்புகிறேன். பாருங்கள்? நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி, தேவனிடத்திலிருந்து வந்த ஒரு செய்தியைக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? 172உள்ளூர் சபை ஒன்று மற்ற வெளிநாடுகளில் உள்ள தேவைகளை சந்திப்பதற்கு முன்பு, முதலில் தன் உள்ளூர் பொறுப்பை ஏற்று முடிக்க வேண்டியது அவசியமாஇல்லையா? அது தன் தேவைகளைச் சந்தித்து முடித்த பிறகு, அதனால் முடிந்த வரையில் மிஷனரி ஊழியத்துக்கு உதவி செய்வது வேதப்பூர்வமானதா? ஆம். உண்மை . கொடுத்தல் முதலில் வீட்டில் தொடங்குகிறது. பாருங்கள். இங்குள்ள நமது தேவைகளை நாம் முதலில் சந்திக்கிறோம். ஏனெனில் நாம்... இது தேவனுடையசபை . உங்கள் சிறு சபையும் தேவனுடைய சபையே. உங்களால் உங்கள் மேய்ப்பருக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போனால், உங்களால் பாடல் புத்தகங்களை வாங்க முடியாமல் போனால், நீங்கள் வேறு இடத்துக்கு பணத்தை அனுப்பக் கூடாது. பாருங்கள்? உங்கள் சபைக்கு வேண்டிய அனைத்துக்கும் நீங்கள் செலுத்திவிட்டு உங்கள் கடன்களை செலுத்தி முடித்த பின்பு, வெளிநாட்டில் உதவி தேவைபடுகிற அந்த மற்ற சகோதரனுக்கு உதவி செய்யுங்கள், பாருங்கள். நான் நினைப்பது என்னவெனில்.... உங்கள் சபைக்காக நீங்கள் பணம் செலுத்திக் கொண்டு இருக்கும்போதே, ஜனங்கள்மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்பினால், நான் மிஷனரி காணிக்கைக்காக ஒரு நிதியை ஒதுக்கி வைக்க விரும்புவேன். ஏனெனில் பலர் தங்கள் உள்ளூர் சபைக்குக் கொடுக்காமல், மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்புவார்கள். அவர்கள் மிஷன்களுக்கு அதை கொடுக்காவிட்டால், வேறெதற்காவது அதை செலவழித்துவிடுவார்கள். எனவே நான் சொல்வது என்னவெனில், மிஷன் ஊழியத்துக்கென்று ஒரு பெட்டியை வைத்து விடுங்கள், நான் .... அப்படித்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம். 173லூக்கா 1:17, யோவான் “எலியாவின் ஆவியை உடையவனாய் வருவதைக் குறித்து தயவு செய்து விளக்குங்கள். நல்லது. நாம் சற்று முன்பு தான் லூக்கா 1: 17ஐ. “எலியாவின் ஆவியை” உடையவனாய் வருவதைக் குறித்துப் பார்த்தோம். (ஒரு சகோதரன், “இங்குதான் மறு அவதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோர் தங்கள் உபதேசத்தைப் பெற்றுக் கொண்டனரா?” என்று கேட்கிறார் - ஆசி]. மன்னியுங்கள்? (மறு அவதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோர் இங்கு தான் தங்கள் கோட்பாட்டைத் தொடங்கினரா?“]. அப்படித்தான் இருக்க வேண்டும். [பாருங்கள், அவர் வேறொரு சரீரத்தில் வருவதாக அவர்கள் நம்புகின்றனர்). ஆம், பாருங்கள், ஆவி மரிப்பதில்லை என்பது உண்மை . தேவன் தமது மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவருடைய ஆவியை அல்ல. அவர்கள், 'நீங்கள் நல்லவர்களாக இருந்திருந்தால், ஒரு நல்ல மனிதனுக்குள் திரும்பவருவீர்கள்' என்று கூறுகின்றனர்”]. ஆம், ஆம். நீங்கள் கெட்டவர்களாய் இருந்திருந்தால், ஒரு நாய்க்குள் நீங்கள் வரலாம் என்கின்றனர்“]. ஆம், அப்படித்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆம். நல்லது. இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு குழுவினரை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தரையையும் துடைக்க மாட்டார்கள். ஒரு எறும்பையும் கூட மிதிக்க மாட்டார்கள். அது ஒரு வேளை தங்கள் பந்துக்களில் ஒருவராக இருக்கலாம் என்பதற்காக . ஆனால், பாருங்கள், அது அஞ்ஞானக் கோட்பாடு. பாருங்கள்? அது அஞ்ஞானம் என்பது உண்மை. 174பவுல், “முக்கியமான வரங்களை நாடுங்கள்: இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்கிறான். அந்த மேன்மையான வழி என்னவென்று தயவுகூர்ந்து விளக்குங்கள். அன்பு. 1 கொரிந்தியர் 13ம் அதிகாரம், பாருங்கள். “நாடுங்கள்... முதலில்...1கொரிந்தியர் 13ம் அதிகாரத்தை எடுங்கள், சகோதரனே, கடைசி மூன்று அல்லது நான்கு வசனங்களை வாசியுங்கள். 1 கொரிந்தியர் 13... அந்த அதிகாரத்தின் கடைசி மூன்று வசனங்கள்.... ஒரு சகோதரன் 1 கொரிந்தியர் 13: 11-13 வசனங்களைப் படிக்கிறார் - ஆசி]. நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம் , நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (சகோ. பிரான்ஹாம் “உ-ஊ , அன்பு” என்கிறார் - ஆசி) 1 கொரி. 13:11-13 175ஒரு சகோதரனுக்கு, தான் கேட்டுக்கொள்ளப் படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை எப்படி குற்றப்படுத்துவது? ஓ, என்னே! அவருடன் பொறுமையாயிருங்கள், அப்படித்தான் நான் நினைக்கிறேன். பாருங்கள்? ஒரு சகோதரனுக்கு, தான் கேட்டுக் கொள்ளப்படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை எப்படிக் குற்றப்படுத்துவது? அவரைக் குற்றப்படுத்தக் கூடாது. உதாரணமாக அவர் டீகனாக விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? அவர் அவ்விதம் செய்யக்கூடாது என்று அவரிடம் சொன்ன பின்பும், அவர் எப்படியும் டீகனின் ஸ்தானத்தை வகிக்க விரும்புகிறார். நல்லது. ஒரு நபர் அவ்விதமாக இருப்பாரானால், ஏதோ ஒரு பலவீனம் எங்கோ உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே நான் அவருடன் அன்போடு ஈடுபடுவேன். நீங்கள் ஒருவரை நன்றாக அறிந்திராமல் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள். உங்களால் முடிந்த வரைக்கும் உங்கள் சிறந்த மனிதர்களை உங்கள் குழுவில் நியமியுங்கள். சகோதரனே, வேறெவரையுமே அதில் .... அந்த மனிதனை முதலில் பரிசோதியுங்கள். ஒரு மகனுக்கு மேய்ப்பனைக் காட்டிலும் அதிகமான உத்தரவாதம் உள்ளது. ஒரு டீகன் குற்றமற்றவராய் இருக்க வேண்டும். பாருங்கள்? 176ஒரு இராப்போஜன ஆராதனையில், ஒரு மனிதன் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக பீடத்தண்டையில் வந்தார். இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சகோதரன் பிரான்ஹாம் அப்பம் திராட்சரசம் இவைகளின் பின்னால் நின்று கொண்டிருந்தார். பீடத்தண்டையில் உள்ள மனிதனுக்கு ஜெபிப்பதற்காக இராப்போஜன பொருட்களை விட்டு வர இயலாது என்று அவர் கூறிவிட்டார். தயவு கூர்ந்து இதற்கு விளக்கம் தாருங்கள்? என் உடன் போதகரான சகோ. நெவிலை ஜெபிப்பதற்காக அனுப்பினேன், பாருங்கள். அது நடந்த இரவு எனக்கு ஞாபகம் உள்ளது. என்ன நேர்ந்த போதிலும் அந்த இராப்போஜன மேசையுடன் நான் நிற்க வேண்டியவனாயிருக்கிறேன் .... இங்கு பாருங்கள். இதை விவரிக்க எனக்கு நேரமில்லை. இங்கு உட்கார்ந்திருக்கிற யாரோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். அது என்னவென்று கூறுகிறேன் , சகோதரனே. இயேசுகிறிஸ்துவின் சரீரத்துக்கு அடையாளமாயுள்ள இராப்போஜனம் இருக்கின்ற வேளையில், அது... அது எல்லா நேரத்திலும் காவல் செய்யப்பட வேண்டும். 177பாருங்கள், எலியா கேயாசியிடம், “என் கோலை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னான் (அவன் அந்த ஆசிர்வதிக்கப்பட்ட கோலை உடையவானாயிருந்தான்). அவன், ”நீ பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது. யாராகிலும் உன்னிடம் பேசினால்அவருக்கு மறு உத்தரவு அளிக்காதே. யாராகிலும் உனக்கு வாழ்த்துதல் கூறினால், அவருக்கு திரும்ப வாழ்த்துதல் கூறாதே. நீ நேராகப் போய் குழந்தையின் மேல் இந்த கோலை வை“ என்றான். அது சரியா? ”அந்த கோலுடன் நிலைத்திரு“. பாருங்கள்? அதை தான் நான் செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது, அங்கு என் உடன் போதகர் நிற்காமல் போயிருந்தால். நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். அது எப்பொழுது நடந்தது என்று எனக்கு ஞாபகம் உள்ளது. நான் .... அவர்கள் மட்டும்... சகோ நெவில் அங்கு நிற்கவில்லை என்றால், அல்லது பீடத்தண்டையில் இருந்த அந்த மனிதனுக்கு உதவி செய்ய வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால்.... அப்பொழுது நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். எனவே நான் இராப்போஜன மேசையினருகில் நின்று கொண்டிருந்தேன் அவாகள் இராப்போஜனத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமான போது, நான் ஏற்கனவே இராப்போஜனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். சகோ. நெவில் அங்கு நின்று கொண்டிருந்தார். நான் இராப்போஜனம் பரிமாறிக் கொண்டிருந்தேன். சகோநெவில் அங்கு நின்று கொண்டிருந்தார். 178அவர் பீடத்தண்டையில் வந்த போது, சகோ. நெவில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பிரசங்ம் செய்து கொண்டிருந்த போது, இந்த மனிதன் கூட்டத்திலிருந்து எழுந்து பீடத்தண்டையில் சென்றிருப்பாரானால், அப்பொழுது நான் அந்த மனிதன் இருந்த பீடத்துக்கு சென்றிருப்பேன். என் சகோதரனின் மேல் ஆவியின் அபிஷேகம் தங்கியிருந்ததை நான் கண்டேன். அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஊழியக்காரர். அவர் கடமையின் பாதையில் இருந்து கொண்டிருந்தார். ஒரு போதகர் கடமையின் பாவா இருந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் அந்நிய பாஷையில் பேசவோ அல்லது வேறெந்த வகையிலும் தடங்கலாயிருக்கக் கூடாது. ஆம், பரிசுத்த ஆவியானவர் பிரசங்கத்தின் வாயிலாக யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும்போது, இரட்சிப்பைப் பெற யாராகிலும் பீடத்தண்டையில் ஒடிச் செல்வார்களானால், போதகர் தொடர்ந்து தன் கடமையின் பாதையில் இருக்கட்டும். உடன் போதகரோ அல்லது மகனோ இருப்பாரானால், அவர் விரைவாக அந்த நபரிடம்செல்லட்டும். கடமையின் பாதையில் உள்ள போதகரை தொந்தரவு செய்யாதீர்கள். பாருங்கள்? 179நான் என் கடமையின் பாதையில் இராப்போஜன மேசையின் பின்னால் நின்று கொண்டு இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் உடன் போதகர் சகோ. நெவில் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு மனிதன் பீடத்துக்கு ஓடி வந்து கொண்டிருந்தார். நான், “சகோ நெவில், அவரிடம் சொல்லுங்கள்' என்று கூறினேன். சகோ. நெவில் அவரிடம் சென்றார். ஆகயைால் தான் நான் போகவில்லை. அந்த மனிதனிடம் செல்ல உடன் போதகரோ அல்லது வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால், நான் இராப்போஜனத்தை நிறுத்தி விட்டு அவரிடம் சென்று அந்த ஆத்துமா இரட்சிப்படைவதைக் குறித்துக் கவனித்திருப்பேன். பாருங்கள்? ஆனால் அனுப்புவதற்கு ஒருவர் இருந்தார். நான் இராப்போஜனம் கொடுப்பதை நிறுத்தி விட்டுச் சென்றிருந்தால், அது என்னை கடமையின் பாதையிலிருந்து விலகச் செய்திருக்கும். 180தனிப்பட்ட ஊழியக்காரன் என்னும் முறையில் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிற ஒரு நபரிடம் எவ்வாறு வேதரீதியாக ஈடுபட வேண்டும்? சரி. அவருக்கு வார்த்தையை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். அதுவே செய்யக்கூடிய சிறந்த காரியமாகும். வார்த்தை வெளிச்சத்தைக் கொண்டுள்ளது. “சகோதரனே இயேசு அதை வாக்களித்துள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டேயிருங்கள். அவரைக் குலுக்கவோ, தள்ளவோ, சுற்றிலும் அசைக்கவோ செய்யாதிருங்கள். முயற்சி செய்யாதிருங்கள்... ஆம், நீங்கள் அவருக்கு அதைக் கொடுக்க முயற்சி செய் இருங்கள். ஏனெனில் உங்களால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? நீங்கள்... தேவன் அதை அவருக்குத் தந்தருளுவார். வாக்குத்தத்தங்களை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். பாருங்கள். அங்கு நின்று கொண்டு வாக்குத்தத்தத்தை மேற்கோள் காட்டிக் கொண்டேயிருங்கள். “பரலேகாத்தின் தேவனே, என் சகோதரனுக்காக ஜெபிக்கிறேன். அவருக்கு பரிசுத்த ஆவியைத் தருவீர் என்பதே உமது வாக்குத்தத்தமாயுள்ளது. அவரை நீங்கள் உற்சாகப்படுத்த முயல்வீர்களென்றால். அவர், “ஓ, சகோதரனே, மேய்ப்பனே, சகோதரனே - அவருடைய பக்கத்தில் யார் இருக்கிறார்களோ அவரைப் பார்த்து, ”நான் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும்“ என்று கூறிக் கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள், “சகோதரனே, அது ஒரு வாக்குத்தத்தம். தேவன் அந்த வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை சந்தேகிக்காதீர்கள். நீங்கள் வாக்குத்தத்ததை விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது எந்த வினாடியிலும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வருவார். அதை எதிர்பார்த்துக் கொண்டேயிருங்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவித்து 'கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் நின்று கொண்டிருக்கிறேன்' என்று சொல்லுங்கள்' என்று அவரிடம் கூறுங்கள். நீங்கள் வாக்குத்தத்தத்தை மேற்கொள்காட்டிக் கொண்டேயிருங்கள். “நீங்கள் மனந்திரும்பி விட்டீர்களா?” என்று அவரிடம் கேளுங்கள். அவர் 'ஆம்“ என்கிறார். “அப்படியானால் நீங்கள், 'கர்த்தாவே, நான் மனந்திரும்பினால், என்னை மன்னிப்பதற்கு நீர் நீதியுள்ளவராயிருப்பதாக உரைத்திருக்கிறீர். நான் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டால், நான் பரிசுத்த ஆவியை பெறுவேன் என்று நீர் கூறியிருக்கிறீர். கர்த்தாவே, அதை நான் செய்து முடித்து விட்டேன். கர்த்தாவே, இப்பொழுது நான் காத்திருக்கிறேன். அதை நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்று சொல்லுங்கள்' என்று அவரிடம் கூறுங்கள். பாருங்கள். அது தான் முறை. அவரை உற்சாகப் படுத்திக் கொண்டேயிருங்கள். அவர் வார்த்தையில் நிலைத்திருக்கச் செய்யுங்கள். அது அவர் மேல் வரவேண்டுமென்று இருந்தால் அப்பொழுது வரும். 181நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன்.... இல்லை. நித்தியபாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா? இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் நினைக்கிறேன், “இருக்கிறாரா..” நான் படித்த விதமாகவே நீங்களும் படிக்கிறீர்களா என்று பார்க்கலாம். இதை படியுங்கள். ஒரு சகோதரன், “ நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா என்று வாசிக்கிறார் - ஆசி). நான் சரியாகத்தான் அதைப் படித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். இப்பொழுது நல்லது. நான் ... நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி சரியாக இருக்கிறாரா? என் கருத்து என்னவெனில் அந்த பிரசங்கி .. அவருக்கு நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்றால்.... ஆனால் அவர் அதை அறிந்திருந்தது. அது சத்தியம் என்பதை அறிந்திருந்து, அதை பிரசங்கிக்காமல் இருப்பாரானால், தன்னைக் குறித்து அவர் வெட்கப்பட வேண்டியவராயிருக்கிறார், அது உண்மை , அது எந்த கிறிஸ்தவனாயிருந்தாலும். இப்பொழுது கிறிஸ்தவன், இதை நன்றாக புரிந்து கொள்ள இயலாத கிறிஸ்தவவனுக்கு நான் கூற விரும்புவது என்னவெனில... ஒரு சகோதரன், சகோ. பிரான்ஹாமே, இதை மற்ற ஜனங்களுக்கு பிரசங்கிப்பதற்கு இது ஒரு வெளிப்படையான உபதேசம் இல்லை, அல்லவா?.....' என்று கேட்கிறார் - ஆசிர. இல்லை. இல்லை, இல்லை. அதைக் குறித்து தான் நான் கூறியிருந்தேன். ஆம், பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது. சென்ற ஞாயிறு நான் கூறினது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால், உங்களுக்கென்று ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். பாருங்கள். அதுவே நீங்கள் செய்யத்தக்க மிகச் சிறந்த முறையாகும். உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால் ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொண்டு, பாருங்கள், பிரசங்கம் செய்யுங்கள். நீங்கள் பிரசங்கி அல்லவென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் வாழ்க்கையே ஒரு பிரசங்க பீடமாக அமைந்திருக்கட்டும். பாருங்கள். அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது, இல்லையா? பாருங்கள்? பாருங்கள்? ஏனெனில் அநேக தருணங்களில் நாம் காண்கிறது என்னவெனில்... சகோதரர்களாகிய நீங்கள் அதை உங்கள் சபைகளில் செய்யுங்கள். 182இதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சபையோர் சில நேரங்களில் காரியங்களை விளக்குவதிலும் காரியங்களைச் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். அவ்விதம் செய்யாதிருக்க அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். யாராகிலும் ஏதாவதொன்றை அறிந்து கொள்ள விரும்பினால், அவ்விதம் செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் வரட்டும். பாருங்கள்? நீங்கள் கவனமாயிருப்பது நலம். ஒருவேளை நீங்கள் அதற்கு விளக்கம் தரத் தலைப்பட்டால், அவரை இன்னும் அதிகமான குழப்பத்தில் ஆழ்த்தி, அவர் முன்பிருந்ததை விட இன்னும் மோசமான நிலையில் அவரைக் கொண்டு செல்ல வாய்ப்புண்டு. நீங்கள் அவரிடம், “நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறுகிறேன், எங்கள் போதகரிடம் வந்து அவரிடம் இதைக் குறித்து பேசுவீர்களானால், பாருங்கள். நாங்கள்... நீர் கூறுவது உண்மையே. எங்கள் போதகர் அதை விசுவாசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். நானும் கூட அதை விசுவாசிக்கிறேன். ஆனால் அதற்கு ஆதாரம் காட்ட எனக்குத் தெரியாது. நான் ஒரு பிரசங்கியல்ல. அதை நான் விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதை நான் ஏன் விசுவாசிக்கிறேன் என்றால், அவர் வேதத்திலிருந்து அதை விளக்குவதை நான் கேட்டிருக்கிறேன், அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை” என்று சொல்லுங்கள். பாருங்கள்? சபையோர் அதை போதகரிடம் அறிவிப்பது நலம். போதகரும் அதற்கு எவ்விதம் விளக்கம் தரவேண்டுமென்று உறுதியாக அறிந்திருக்க வேண்டும். எனவே அதை நன்றாக படித்து அறிந்திருங்கள். ஏனெனில் அநேக சமயங்களில் அவர்கள் உங்களை மடக்கி விடுவார்கள், பாருங்கள். என்ன .... 183(ஒரு சகோதரன், “சகோ பிரான்ஹாமே” என்கிறார் - ஆசி) என்னை மன்னியுங்கள். (என்னால் கூடுமானால். ஆனால் எனக்கு அழைப்புள்ளதென்று நான் அறிந்திருக்கிறேன். என் தெரிந்து கொள்ளுதலையும் நான் உறுதியாக்கிக் கொண்டிருக்கிறேன் ]. உ - 2 (நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தால், உங்களுக்கு ஒரு பிரசங்க பீடம் இருக்க வேண்டும்' என்று சற்று முன்பு நீங்கள் கூறினீர்கள்). ஆம், ஐயா. அது உண்மை . (“நான் ஒரு பிரசங்கியல்ல. நான் ஒரு சுவிசேஷகன் ) ஆம், ஐயா. ஆனால் ஒவ்வொருவருடைய பிரசங்க பீடமும் என்னுடையது. நல்லது. (ஆனால் இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சரீர உழைப்பு. அது கடினமாக வேலையல்ல. ஆனால் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு பிரசங்க பீடம் எதுவும் கிடையாது. இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருப்பது அவருடைய சித்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வார்த்தையின் மூலமாகவும் ஆவியின் சாட்சி மூலமாகவும் என்னிடம் வேலை செய்யும்படி கூறினார். சற்று கழிந்து பிரசங்க பீடங்கள் எனக்குத் திறக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன் ) நிச்சயமாக , அது உண்மை . ('அது சரியா?”]. அது சரி, சகோதரனே. 184சகோதரனே, நீங்கள் அந்த பழைய சபை தஸ்தா வேஜுகளைப் புரட்டிப் பார்ப்பீர்களானால், நான் பதினேழு ஆண்டுகளாக இந்த சபையின் மேய்ப்பனாக இருந்து, ஒவ்வொரு நாளும் பிரசங்கித்து, ஒவ்வொரு நாளும் வேலையும் செய்து வந்திருக்கிறேன். பாருங்கள்? (ஒரு சகோதரன், “நீங்கள் வேலை செய்தால், நீங்கள் அழைக்கப்பட்டதற்கு அது ஒரு நல்ல அடையாளம்” என்கிறார் - ஆசிர. ஆம். பவுல் வேலை செய்தான், இல்லையா? அவன் கூடாரங்கள் செய்தான் (“ஒவ்வொரு பிரசங்கியும் ஒரு பிரசங்க பீடத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நீங்கள் கூறின் போது எனக்கு சோர்வு உண்டானது. ஆனால் தேவன் சிறிது காலத்திற்கு நான் வேலை செய்ய என்னை அழைத்திருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் ). நிச்சயமாக, பவுல் சென்று கூடாரங்களை உண்டாக்கினான், இல்லையா? அவன் மற்றவர்களின் பேரில் சார்ந்திருக்கக் கூடாதென்று எண்ணி தன் சொந்த கைகளினால் பிரயாசப் பட்டான். நிச்சயமாக. (”அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன்) பாருங்கள்? அது உண்மை . பாருங்கள்? ஜான் வெஸ்லி, “உலகம் முழுவதுமே என் சபை” என்று கூறினார். எனவே, உங்கள் பிரசங்க பீடம் இன்னும் திறந்திருக்கிறது, சகோதரனே. சுவிசேஷகர்கள் உலகெங்கும் செல்கின்றனர். அது சரியா? “நீங்கள் உலகமெங்கும் போய். எனவே உங்கள் பிரசங்க பீடம் முழு உலகமே . 185இது கட்டளையா... ஒரு மகன் அல்லது ஒரு தர்ம கர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்பது ஒரு கட்டளையா? ஆம், அது உண்மை. தங்களுடைய சொந்த கருத்து அல்லது வெளிப்பாட்டின் காரணமாக சபை உபதேசங்களுடன் கூட்டுவதோ அல்லது அவைகளிலிருந்து எடுத்து விடுவதோ நியாயமா? இல்லை, ஐயா. இல்லை . ஒரு டீகன் அல்லது ஒரு தர்மகர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசங்களுடன் இசைவாய் இணைந்திருப்பது அவசியம். அவர்களுடைய சபையின் போதக வியாக்கியானங்களுடன் அவர்கள். பரிபூரணமாய் நிலைத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்விதம் செய்யாவிட்டால், அவர்கள் அதற்கு எதிராக போராடி தங்களையே உருவக் குத்திக் கொள்வார்கள். பாருங்கள்? நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்... வேறு விதமாகக் கூறினால், என் குடும்பத்தினரை நான் நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களுக்கு விஷம் கொடுப்பது போல இது உள்ளது. பாருங்கள், அதே காரியம்தான். பாருங்கள். நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள்... ஒரு தர்மகர்த்தா அல்லது ஒரு டீகன் அவர்களுடைய உத்தியோகத்தை வகிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சபையில் உத்தியோகம் வகிப்பவர் எவரானாலும், பாருங்கள், அவர்கள் அந்த சபையின் பிரதிநிதிகள். அதன் காரணமாகத் தான் நான் முதல் தடவை, பாப்டிஸ்டு சபையை விட்டு வெளிநடந்தேன், பாருங்கள். அங்கு நான் சிறிது காலம் இருந்தேன் . அவர்கள் என்னிடம் சில பெண் பிரசங்கிகளுக்கு குருப்பட்டம் கொடுக்கக் கூறினார்கள். அதன் விளைவாக அங்கு தங்கியிருக்க என்னால் முடியவில்லை. “நான் அவ்விதம் செய்ய மறுக்கிறேன்” என்று கூறினேன். மேய்ப்பர் என்னை அதட்டி, “இது என்ன? நீ ஒரு மூப்பன்” என்றார். நான், “டாக்டர் டேவிஸ், நான் குருப்பட்டம் பெற்றுள்ள இந்த பாப்டிஸ்டு சபையின் விசுவாசத்துக்கு முழு மரியாதையையும் அளித்து இதைக் கூற விரும்புகிறேன். பெண்களுக்கு குருப்பட்டம் அளிப்பது பாப்டிஸ்டு சபையின் உபதேசமாயுள்ளது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அது அதிலிருந்து விடப்பட்டிருந்த ஒன்றாக இருந்தது” என்றேன். அவர், “இது சபையின் உபதேசம்” என்றார். நான், “ஐயா, இன்றிரவு நான் வராமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள். அல்லது நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பீரா?” என்று கேட்டேன். பாருங்கள்? அவர், “உன் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் இன்றிரவு அங்கு இருக்க வேண்டியது உன்னுடைய கடமையாகும் என்றார். அதற்கு நான், “அது உண்மை தான், ஐயா. இந்த சபை 'காரியங்கள் எல்லாவற்றிலும் நான் பங்கு கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். உள்ளூர் மூப்பர்களில் ஒருவன் என்னும் முறையில் நான் கடமையின் பாதையில் இருக்க வேண்டும்” என்றேன். அவர் சொன்னார்... நான், “1 கொரிந்தியர் 14 அல்லது 15-ம் அதிகாரத்தில் பவுல், 'சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை' என்று ஏன் கூறினான் என்பதற்கு எனக்கு விளக்கம் தருவீர்களா?' என்று கேட்டேன். 186அவர், “ஏன், நிச்சயமாக அதற்கு என்னால் விளக்கம் தரமுடியும். பாருங்கள், அது என்னவெனில், ஸ்திரீகள் அனைவரும் பின்னால் முலைகளில் உட்கார்ந்துகொண்டு, மற்ற நேரங்களில் பேசுவது போலவே அங்கும் பேசிக் கொண்டிருந்தனர். பவுல், அவர்கள் அப்படி செய்வதை அனுமதிக்காதீர்கள்' என்றான் என்றார். அதற்கு நான், “அப்படியானால், அதே வேதபாரகனாகிய, அதே அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமாத்தேயுவில், 'உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. என்னத்தினாலெனில் முதலாம் ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப் படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டாள்' என்று கூறியுள்ளதற்கு விளக்கம் தாருங்கள். அவள் தான் வஞ்சிக்கப்பட்டாள். அவள் ஏதோ ஒன்றை தவறாகச் செய்ய வேண்டும் என்று கருதிச் செய்கிறாள் என்று நான் கூற வரவில்லை. அவள் உண்மையில் அதில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உபதேசம் பண்ணக் கூடாது” என்றேன். அவர், 'அது உன்னுடைய சொந்தக் கருத்தா?“ என்று கேட்டார். “நான் காண்கிறபடி, அது வேதத்தின் கருத்து. வேதம் அவ்விதம் தான் உரைத்துள்ளது' என்றேன். அவர், “இளைஞனே, அந்த கருத்தை நீ கொண்டிருப்பதற்காக நீ பெற்றுள்ள லைசென்ஸை உன்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ள முடியும்” என்றார். அதற்கு நான், “அவர்களுக்கு அந்த தொல்லை கொடுக்க மாட்டேன். நானே அதை கொடுத்து விடுகிறேன், டாக்டர் டேவிஸ். உங்களை அவமதிப்பதற்காக அவ்விதம் செய்ய வில்லை.” என்றேன். அவர் லைசென்ஸை வாங்கிக் கொள்ளவில்லை. அவர் அதை அப்படியே விட்டு விட்டார். 187அதன் பிறகு அவர் இவ்விஷயத்தில் என்னுடன் நேரடி .யாக விவாதம் ஒன்றை நடத்தப் போவதாகக் கூறினார். “சரி, எந்த நேரத்திலும்” என்றேன் நான். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை. சற்று கழிந்து, கர்த்தர் என்னில் பேசிய போது, கர்த்தருடைய தூதன் வந்த போது, அவர் அதைக் குறித்து கேலி செய்தார். நான் அவரிடம், “நல்லது, டாக்டர் டேவிஸ், இப்பொழுதே என் லைசென்ஸை துறந்து விடுவது நலம். ஏனெனில் அது எனக்கு ஒரு பாரமாக இருக்கும். நான் குருப்பட்டம் பெற்று சிறிது காலம் இங்கிருந்தேன். இனிமேல் அது எனக்கு பாரமாக இருக்கும். எனவே அதை இப்பொழுதே துறந்து விடுவது நலமாயிருக்கும்” என்றேன் . எனவே, என்னால் பாப்டிஸ்ட் சபையில் தங்கியிருந்து பாப்டிஸ்டு உபதேசத்தைப் போதித்து, பாப்டிஸ்ட் விசுவாசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு சபை என்பதால், அவ்விதம் நான் செய்திருந்தால், நான் தவறு செய்தவனாயிருப்பேன், பாருங்கள். நான் ஏதோ ஒன்றை மறைக்கிறவனாயிருப்பேன். நான் உண்மையுள்ளவனாயிருந்தால், நான் பாப்டிஸ்ட் ஜனங்களிடம் சென்று (என்னுடைய போதகரிடத்திலோ அல்லது எனக்கு விளக்கம் அளிக்கக் கூடியவர் எவரிடத்திலாகிலும்) அவர்களிடம் ஜீவ 'வார்த்தையைக் குறித்துக் கேட்பேன். அவர்களால் வேத்திலிருந்து அதை எடுத்துக் காண்பித்து என் உணர்வுகளை திருப்திபடுத்துவார்களானால், அப்பொழுது அவர்கள் உரைக்கும் விதமாகவே நானும் உரைப்பேன் , பாருங்கள், நான் ஒரு பாப்டிஸ்டாக இருப்பேன். 188ஆகையால் தான் நான் சுயாதீனமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால் தான் நான் எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்திருக்கவில்லை. ஸ்தாபனங்கள் வேத விரோதமானவை என்பது என் கருத்து. எனவே தான் நான் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை. அவ்விதம் சேர்ந்திராதது நியாயமானது என்று நான் உணருகிறேன். பாருங்கள்? எனவே நான் ஜனங்களை சேர்த்துக் கொண்டு அவர்களை அங்கத்தினர்களாக்குவதில்லை. நாம் அங்கத்தினர்களாக பிறக்கிறோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் பிறக்கிறோம் என்பது என் கருத்து. பாருங்கள்? நாங்கள் ஜனங்களின் பெயர்களை புத்தகத்திலிருந்து எடுத்துப் போட்டு அவர்களை சபையிலிருந்து புறம்பாக்குவதில்லை. ஏனெனில அப்படி செய்வது நமது வேலையல்ல என்று நான் கருதுகிறேன். தேவனே சபையை விட்டுப் புறம்பாக்கும் பணியைச் செய்கிறார் என்பது என் கருத்து. பாருங்கள்? ஆனால் நான் விசுவாசிப்பது என்னவெனில், ஒரு சகோதரன் ஏதாகிலும் தவறொன்றைச் செய்யும் போது... 189உதாரணமாக சகோ நெவில் அல்லது சகோ ஜூனியர் அல்லது.... இங்குள்ள சகோதரர் ஒருவர், டீகன்மார்கள் தர்ம கர்த்தாக்கள் ஒருவர் தவறு செய்கிறார் என்பதை அவர்கள் கண்டு பிடிப்பார்களானால், சபை என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்கள் ஒன்று கூடி இந்த சகோதரனுக்காக ஜெபிக்க வேண்டும், அவர் அப்பொழுதும் நேராக்கிக் கொள்ளவில்லை என்றால், இரண்டு பேர்கள் அவரிடம் சென்று அவரிடம் எடுத்துக் கூறட்டும். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டால், அதை சபைக்கு முன்பாக அறிவியுங்கள். அப்பொழுதும் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால், அப்பொழுது அது முழு சபையின் வேலையாயுள்ளது - மேய்ப்பர், மூப்பர்கள் மற்றெல்லாருமே சேர்ந்து அதை செய்ய வேண்டும். டீகன்மார் குழுவுக்கோ அல்லது தர்மகர்த்தா குழுவுக்கோ அல்லது மேய்ப்பருக்கோ மட்டும் அதை செய்ய அதிகாரமில்லை. யாரையாவிலும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைக்காக ஐக்கியத்திலிருந்து வெளியாக்க வேண்டுமென்றால் - அவர் இங்கிருப்பதற்கு தகுதியுள்ள மனிதன் அல்ல, அவர் இங்கு வந்து நமது பெண்களை அசுசிப்படுத்தி, நமது ஸ்திரீகளை அவமதித்து, அதே நேரத்தில் அவர் நம்மில் ஒருவர் என்று அழைத்துக்கொண்டால். பாருங்கள்? அவர் வெளியில் வேறங்காகிலும் இருந்து நமது மத்தியில் வந்திருப்பாரானால், அதைக் குறித்து நாம் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட ஒருவர் நமது மனைவிகளுடன் காதல் புரிய முயன்று நமது பெண்மக்களை அவமதித்து, அவ்விதம் எதாகிலும் ஒன்றைச் செய்து, அல்லது நமது பையன்களை கூட்டிச் சென்று தாறுமாறான வழியில் அவர்களுடன் நடந்து கொண்டு அவர்களை சீர்குலையும்படி செய்தால், அப்படி ஏதாவதொன்றைச் செய்தால், இவைகளை உடனே கவனித்து, அவரை ஐக்கியத்தினின்று புறம்பாக்கி, அவர் இராப்போஜனத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அவர் பங்கு கொள்ள அனுமதிக்க முடியாது. “அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.” 190ஒரு ஆள் கூறினவிதமாக, “அவர் இது அதுவாக இருக்கிறார், அவருக்காக ஜெபியுங்கள்' என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் நடந்ததை என்னால் மறக்கமுடியாது. சகோ லேவி பெட்ரஸ் ஒரு மகத்தான தேவனுடைய மனிதன். நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், மேசையினருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மகத்தான கூட்டங்கள் அங்கு உண்டாயிருந்தன. கார்டன் லிண்ட்ஸே லேவி பெட்ரஸிடம், “இந்த பெரிய சபைக்கு மேற்பார்வையாளர் யார்?” என்று கேட்டார். அந்த சபை அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை விட மிகப் பெரிய சபை. அவர், “யார் இதற்கு மேற்பார்வையாளர்?” என்று கேட்டார். நற்பண்பு கொண்ட லேவி பெட்ரஸ் “இயேசு என்று பதிலளித்தார். அவர், “உங்கள் பிரஸ்பிடர் (presbyter) யார்? என்று கேட்டார், அதற்கும் அவர் ”இயேசு “ என்று பதிலளித்தார். அவர், “அது சரியென்று எனக்குத் தெரியும். நாங்களும் எங்கள் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் அவ்விதமே விசுவாசிக்கிறோம். ஆனால் உதாரணமாக ஒரு சகோதரன் வழி விலகுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை சபையிலிருந்து புறம்பாக்க அதிகாரமுடையவர் யார்? என்று கேட்டார். அதற்கு லேவி பெட்ரஸ், “நாங்கள் புறம்பாக்குதில்லை' என்றார்.”அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கார்டன் லிண்ட்ஸே கேட்டார். அவர், “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம்” என்றார். அது மிகவும் இனிமையான செயல் என்று எண்ணினேன். அது எனக்கு கிறிஸ்தவத் தன்மையாக ஒலித்தது. “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம். யாருமே அவரைப் புறம்பாக்குவதில்லை, அவர்கள் அவருக்காக ஜெபிக்கின்றனர். 191கார்டன் லிண்டஸே, “சில சகோதரர்கள் அவருடன் இணங்கி, வேறு சில சகோதரர்கள் அவருடன் ஐக்கியங் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? ஒரு மேய்ப்பர் பெண்களின் மனிதனாக ஆகத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்... நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சில மேய்ப்பர்கள் அவரைத் தங்கள் சபைகளுக்கு அழைக்க மறுக்கின்றனர். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை உங்கள் ஸ்தாபனத்திலிருந்து நீக்கி விடுவீர்களா?' என்று கேட்டார். அதற்கு லேவி பெட்ரஸ், “இல்லை, நாங்கள் அவரைத் தனியே விட்டு விட்டு, அவருக்காக ஜெபிப்போம். இதுவரைக்கும் நாங்கள் ஒருவரையும் இழக்கவில்லை. அவர்கள் எப்படியாயினும் திரும்ப வந்து விடுகின்றனர்' என்றார். கார்டன் லிண்ட்ஸே, “நல்லது. சிலருக்கு அவர் வேண்டுமென்றும் மற்றவர்களுக்கு அவர் வேண்டாமென்றும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். “அவர் வேண்டுமென்று நினைக்கிறவர்கள் அவரை ஏற்றுக் கொள்கின்றனர், அவரை வேண்டாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார். எனவே அம்முறையை கடைபிடிப்பது சிறந்தது என்று கருதுகிறேன், இல்லையா சகோதரரே? அந்த விதமாக நாம் “சகோதரர்கள்”. 192இப்பொழுது, சகோதரரே, இங்கு கூறப்பட்டவை உங்கள் கேள்விகளுக்கு ஒருவாறு பதிலளித்தன என்றும் இன்றிரவு நடை பெற்ற கூட்டம் நமக்கு பிரயோஜனமாயிருந்தது என்றும் நம்கிறேன். நான் சிறிது காலம் வெளியே சென்றிருப்பேன். மேற்கில் நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்குச் செல்கிறேன். நான் தாழ்மையுடன் உங்கள் ஜெபங்களைக் கோருகிறேன். இங்கு நான் அளித்த சில பதில்கள், அல்லது அவைகளில் பெரும்பாலானவை சரியான பதில்களாக இருக்கக் கூடும். அல்லது அவைகளில் ஒன்றுமே சரியான பதில்களாக இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அவைகள் என் சிந்தனைக்கேற்றபடி சிறந்த வகையில் சேகரிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டவை. கடைசி சில கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்க்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அவைகள்... நான் என்ன கூறுகிறேன் என்றால், அவைகள் சபையில் ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற ... வேதவசனங்கள். அவைகளை ஆழ்ந்து விவரிக்கத் தொடங்கினால் அவை மிகவும் கடினமுள்ள செயலாயிருக்கும் என்று எண்ணினேன். அவை பெரும் பாலும் சபையைக் குறித்த கேள்விகளே. 193நீங்கள் இவ்விதமாக தொடர்ந்து நிலைத்து வருகிறதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு எந்த விதமான ஒழுங்கின்மையோ, அதிருப்தியோ, குழப்பமோ காணப்படவில்லை. எந்த ஒரு கேள்வியும் விவாதிக்கப்பட்டு, “இது தவறு, இது தவறு. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறப்பட வில்லை. கேள்வி கேட்டவர்கள் தங்கள் நிலையை பெலப்படுத்திக் கொள்வதற்கென ஒன்றை அறிந்து கொள்ள விரும்பின் சகோதரர்களே, அவ்வளவு தான். அது தங்கள் போராயுதங்களை இன்னும் இறுகக் கட்டிக் கொள்ள முனைதலே. இவ்வாறு போராயுதங்களை இறுகக் கட்ட உதவும் இன்னும் அநேக கூட்டங்கள் நமக்கு உண்டாயிருக்கும் என்று நம்புகிறேன். 521.சகோதரரே, என் பேராயுதங்களும் இறுகக் கட்டப்பட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் போராயுதங்களை நான் இன்னும் சிறிது இறுகக் கட்ட தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று எனக்காக தேவனிடத்தில் ஜெபியுங்கள். நான் வாழ்கின்ற வாழ்க்கையும், நான் செய்கின்ற செயல்களும், இன்னும் அதிகமான தாழ்மையின் ஆவியைக் கொண்டும், மிகுந்த ஆவலுடனும் நான் செய்வேனாக. தேவன் தாமே சற்கென இதற்கு முன் எனக்கு இல்லாத அளவுக்கு ஒருஇருதயத்தைக் தருவராக. அதையே உங்களுக்கும் விரும்பி நான் ஜெபிக்கிறேன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 194உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டு விட்டேன். இப்பொழுது நேரம் பதினொன்று மணிக்கு ஐந்து நிமிடங்கள் .... இப்பொழுது, சகோ நெவில், நான் .... நான் போக வேண்டிய இடம் ஏறக்குறைய தொளாயிரம் சொச்சம் மைல்களே என்று அறிகிறேன். எனவே நான் திங்கள் காலை வரைக்கும் இவ்விடம் விட்டுச் செல்லப் போவதில்லை. எனவே ஞாயிறு பள்ளிக்காக இங்கு ஞாயிறன்று வரலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் பிரசங்கிப்பதைக் கேட்க ஞாயிறன்று உங்கள் விருந்தினராக இங்கு வருவேன். பாருங்கள்? ஆனால்... நல்லது , சகோதரனே. ஆம், சகோதரனே. சகோ. நெவில், இதுதான் காரணம், சகோதரனே. நான் .... உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் எப்பொழுதுமே என் மீது கருணை கொண்டவராய் உமது பிரசங்க பீடத்தை எனக்கு அளித்து வந்திருக்கிறீர்கள்... நான் உங்களுக்கு மூத்த மூப்பன் என்பதைப் போல. ஆனால் சகோ நெவில், நான் அவ்விதம் என்னைக் கருதிக் கொள்வதேயில்லை. நாம் சகோதரர்கள் என்று தான் உணர்ந்து வந்திருக்கிறேன். சகோ ரட்டல், சகோ.ஜுனி, ஓ, அங்குள்ள சகோதரர் அனைவரும், நாம் எல்லோரும் சகோதரர்களாயிருக்கிறோம். பாருங்கள். 195ஆனால் என்ன... காரணம் என்னவெனில், எனது தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது, பாருங்கள். எனக்கு தொடர்ச்சியாக ஆறு வாரங்களுக்கு யுத்தம் உள்ளது. இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு எனக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஓய்வு கிடைத்து, நான் மறுபடியும் கூட்டங்களை அங்கு தொடங்குவேன். சகோ. ஜூனி, நான் திரும்பி வந்தவுடனே , உங்கள் சபைக்கு வந்து உங்களை மறுபடியும் காணவேண்டுமென்று விரும்புகிறேன். நேற்று உங்கள் சிறு சபையைக் கடந்து சென்றேன் என்று நினைக்கிறன். என் மனைவி, “நான் நினைக்கிறேன், அ. என்றாள். அது க்ளெனெல்லன் பூங்காவுக்குப் பக்கத்தில்!பாதையின் அருகில் உள்ளதா? அங்கு வந்து அந்த செல்லர்ஸ்பர்க் மக்களிடம் பேச விரும்புகிறேன். அது அருமையாயிருக்கும். 196சகோ. ரட்டல், தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அங்கு நான் வரவிரும்புகிறேன், நீங்கள் ஒரு அருமையான குழுவைப் பெற்றிருக்கிறீர்கள். இன்றிரவு உட்கார்ந்து கொண்டு, ஒரு முதிய மூப்பர் கேட்பது போல் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அங்குள்ள சகோ. பீலர் நமது சுவிசேஷக சகோதரர்களில் ஒருவர். உங்கள் கூட்டங்களில் ஒன்றை நான் எங்காவது எப்பொழுதாவது சந்திப்பேன் என்ற நம்புகிறேன், சிறிது பாதிப்பை உண்டு பண்ணுவதற்கென, உங்களை உயர்த்துவதற்கு ஏதாவதொன்றை எங்காவது கூற . உங்களுக்கும் வேறு எல்லாருக்குமே, இங்குள்ள சகோ ஸ்ட்ரிக்கருக்கும், சுவிசேஷகர்களுக்கும், நான் கூறுவதற்கு எப்பொழுதும் நல்வார்த்தையைக் கொண்டிருக்கிறேன். இங்குள்ள சகோ. காலின்ஸ் என்றாவது ஒரு நாள் ஊழியத்தில் முழு நேர போதகராயிருப்பார் என்று நம்புகிறேன். தீரமுள்ள மனிதர்கள், உண்மையான விசுவாசம் கொண்ட மனிதர்களாகிய உங்களுடனும், டீகன்மார்கள், தர்ம கர்த்தாக்கள், சகோதரர்களாகிய உங்கள் அனைவருடனும் தேவன் இருப்பாராக. 197நீங்கள்... இங்குள்ள சகோதரன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை. நீங்கள்... [சகோ. கால்ட்வெல் “சகோ. கால்ட்வெல்' என்கிறார் - ஆசி). நீங்கள்... நீங்கள் மூப்பர்களில் ஒருவர், அப்படி ஏதோ ஒன்று இல்லையா, அல்லது வெறும் (போதகர்”) போதகர். “நான் ஒரு போதகர். நான் சர்ச் ஆஃப் காட் சபையில் போதகராயிருந்தேன். அங்கு முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க என்னால் முடியவில்லை. அங்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைப் பிரசங்கிக்க இயலவில்லை. அவர்கள் எனக்கு மிகவும் உயர்ந்த ஊழிய லைசென்ஸை அளித்திருந்தனர். ஆனால் அவைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டேன். நீங்கள் இந்த மகத்தான செய்திகளைப் பிரசங்கிக்கக்முதற்கு, அவைகளைப் புறக்கணித்து விட்டு, அந்த ஸ்தாபனத்தை விட்டு வெளியேறி விட்டேன். இப்பொழுது நான் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”]. நன்றி, சகோதரனே. எங்கள் ஐக்கியத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நமது நற்சாட்சிப் பத்திரங்கள் மேலேயிருந்து அளிக்கப்பட்டவை. நமது வாழ்க்கையே நமது நற்சாட்சிப் பத்திரமாக அமைந்துள்ளது. பாருங்கள். அதுவே நமது நற்சாட்சிப் பத்திரம். “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை”. பாருங்கள்? அது உண்மை. அதுவே நமது நற்சாட்சி பத்திரம். ஒரு முதிய... “நமக்கு அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை” என்று ஹாவர்ட் கூறுவது வழக்கம். அது உண்மை. “அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை. வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை .” 198சகோ. கால்ட்வெல், உங்களை நாங்கள் பெற்றிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒரு பெரிய ஸ்தாபனத்திலிருந்து வெளி வந்திருக்கிறீர்கள். அது ஆண்டர்ஸன் சர்ச் ஆப் காட் என்று நினைக்கிறேன் சகோ. கால்ட்வெல், “க்ளீவ்லாண்ட்' என்கிறார் - ஆசி) க்ளீவ்லாண்டு சபை, பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப் காட் நான் இங்குள்ள ...? சபையில் போதகராயிருந்திருக்கிறேன்). ஓ, ஆமாம். ஓ, ஆமாம். நான் அந்த சபைக்கு வந்திருக்கிறேன். ஒரு முறை சகோ. நெவில்..... இல்லை சகோ. உட்டுடன் வந்திருக்கிறேன். உங்கள் சபையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து எங்களுக்கு வேட்டை நாய் கிடைத்தது. நான் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் உங்களைக் குறித்து பேசினார்கள். நல்லது. நான் நிச்சயமாக ... (”என் சபையிலா?) ஒ? (“சகோ பர்ன்ஸ் ) அது சரி, சகோ. பர்ன்ஸ் . அது சரி (சகோ. கால்ட்வெல் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார் - ஆசி). ஒ? ஆம், ஓ, பெர்தா , அது சரி. ஓ, அது அருமையானது. 199அங்குள்ள சகோ. ரூக், அவர் இப்பொழுது மேய்ப்பராகி விட்டாரா, அவர் சுவிசேஷகர் என்று நினைக்கிறேன். அது சரியா? அல்லது நீங்கள் மேய்ப்பராக இருக்கிறீர்களா? (சகேர் “சுவிசேஷகன் மட்டுமே” என்கிறார் - ஆசி). சுவிசேஷகர். சகேர் . உங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். கர்த்தருக்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் சில மகத்தான ஊழியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள்... நீங்கள் இந்தியானா போலீஸுக்குச் சென்று கூட்டங்களை நடத்தி கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை வென்றதாக கேள்விப்பட்டேன். தேவன் உங்களோடு இருப்பாராக, சகோ. ரூக், உங்களைக் கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பழைய ட்ராக்டரை ஓட்டி, உங்கள் முற்றத்தில் உரமிடுவதைக் கண்டிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் வெளியே கர்த்தருக்கென்று ஏதாவதொன்றைச் செய்ய முயல்வதை நான் காண்கிறேன். உங்களை அவர் ஊழியத்துக்கு அழைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரை எப்பொழுதும் உங்களுக்கு முன்பாக வைத்திருங்கள், சகோதரனே தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. எதன் பேரிலும் ஒப்புரவாகாதிருங்கள்; ஆனால் அதை இனிமையான ஆவியுடன் செய்யுங்கள். உங்கள் செய்தி எப்பொழுதும் பரிசுத்த ஆவியின் இனிமையினால் சாரமேறினதாக இருப்பதாக. 200சகோ ஸ்ட்ரிக்கர்... (ஒரு சகோதரன், “உங்கள் அனைவருடைய ஜெபங்களையும் நாங்கள் வாஞ்சிக்கிறோம். நாங்கள் வடக்கு 'வெர்னனில் ஒரு சபையைத் துவங்க முயன்று கொண்டிருக்கிறோம்” என்கிறார் - ஆசி]. ஓ, அதை பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். (“இது வரைக்கும் நன்றாக நடந்து வருகிறது. அது சரி. பில்லி, நீ எப்பொழுது மேய்ப்பன் ஊழியம் செய்யப் போகிறாய்? இங்குள்ள டாக்டர் கோட் (Goad), டாக்டர் மெர்சியர், நான் நம்புகிறேன். அவ்விதம் தான் நாம் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்கிறோம். சகோ கோட் அந்த நிலையை அடைந்து விட்டார். அவர் பட்டம் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர், இப்பொழுது அவரால் தோட்டாக்களை நிறைக்க முடியும். ஆம் சகோ. லியோவை அவர் உள்ள விதமாகவே விட்டு விடலாமென்று நினைக்கிறேன் .... அவர் 'டாக்டர்' என்னும் பட்டத்தைக் கொண்டவராய் தொடர்ந்து இருக்கட்டும். நல்லது, பின்னால் உள்ள 'டாக்டர்' பிரான்ஹாமே, நல்ல விதமாக 'டாக்டர்' செய்து வைத்திருங்கள், விளக்கு அவளில் நல்லவிதமாக எரிந்து கொண்டிருக்கின்றது. நான் என்ன சொல்லுகிறேன் என்றால், விசேஷித்த கூட்டங்கள் நடை பெறும் போது, நான் நிர்வாகக் குழுவிடம் பேசி உனக்கு ஏதாகிலும் அதிக பணம் கொடுப்பார்களா என்று பார்க்கிறேன் சகோ. பிரான்ஹாம் சிரிக்கிறார் - ஆசி. இந்த இடத்தைப் பெருக்கி மற்ற வேலைகளைச் செய்வதனால், அது உன்னை சந்தோஷப்படுத்தும். 201டாக்டர் உட். அவரை டாக்டர்“ என்று நான் அழைக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்று நீங்கள் வியக்கலாம். அவரைத் தவறாக அவ்வாறு அழைக்கவில்லை. அவர் மரத்தை துண்டுகளாக வெட்டுகிறார் என்று உங்களுக்குத் தெரியும். கர்த்தர் ஒரு அழகான மரத்தை வளரச் செய்தால், அவர் அதை வெட்டி அதைக்கொண்டு ஒரு வீட்டை உண்டாக்குகிறார். அவ்விதமான சிறந்த பணியை நான் இதுவரை கண்டதில்லை. எனவே அவரை நான் டாக்டர் என்று அழைக்க வேண்டியவனாயிருக்கிறேன். சகோ. டெய்லர், நீங்கள் இன்னும் கதவண்டை விசுவாசத்துடன் நின்று கொண்டு, உள்ளே வரும் ஒருவருக்கு இருக்கை அளிக்கிறீர்கள். உங்களை நான் இவ்விதம் கருதுகிறேன்: “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்” (சங் 84:10). அது உண்மை. நிச்சயமாக. சகோ ஹிக்கர்ஸன், நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி மேலே வந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுடைய ... நான் ... நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி, வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உத்தமத்தையும் நீங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கென்று செய்யும் எல்லாவற்றையும் நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்து, உங்களை உண்மையுள்ள டீகனாக ஆக்குவராக, நீங்கள் அவ்விதமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வீடு கீழ்ப்படிதலுக்குள் வந்து நீங்கள் இருந்து வந்திருக்கிற மற்றொல்லா காரியங்களிலும். 202சகோ. ஃபிரட், நீங்கள் கனடாவிலிருந்து எங்களி வந்து நீண்ட காலம் ஆகவில்லை. நீங்கள் கனடா தேசத் சேர்ந்தவரென்று நாங்கள் எண்ணுவதில்லை. நீங்கள் தர்மகவாக எங்களுடன் கூட சேர்ந்து அந்நியரும் பரதேசியுமாயிருக்கிறீர் என்று தான் எண்ணுகிறோம், நீங்களும், சகோ. உட்டும் சகோ. ராபர்ஸனுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து உங்கள் உத்தியோகத்தை திறம்பட செய்கிறீர்கள். சகோ. ஈகன் இன்றிரவு இங்கில்லை. சகோ. ராபர்ஸன், நீங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்து வந்திருக்கிறீர்கள். இப்பொழுது விசாரணை நடந்து கொண்டிருக்கும் வரி வழக்கில் சகோ. ராபர்ஸனும் மற்றவர்களும் மிகவும் உதவியாக இருக்கின்றனர்.